சாதத்தில் பிசைந்து சாப்பிட குழம்பு,ரசம்,கூட்டு,என்று எது இருந்தாலும் எள்ளுத்துவையல் என்ற ஒன்றை பக்கத்தில் வைத்துவிட்டால் மற்ற எல்லாவற்றையும் தூரத்தில் தள்ளி வைத்துவிடுவோம்.அந்த அளவுக்கு இது தனித்துவமான சுவையை கொண்டதாக உள்ளது.இன்று நாமும் அதை செய்து சுவைப்போமா...?
தேவையான பொருட்கள் ;
எள்ளு - 100 கிராம்
தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் -4
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை;
- முதலில் ஒரு வாணலியில் எல்லை போட்டு நன்கு வெடிக்கும்வரை வறுக்கவும்.
- பின்னர் காய்ந்த மிளகாயையும் நன்கு வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- இப்போது மிக்ஸியில் அனைத்து பொருள்களையும் போட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது எள்ளு துவையல் தயார்.இது சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
