இட்லி ,தோசை ,சப்பாத்தி போன்றவை செய்யும்போது அதற்கு தொட்டுக்கொள்ள என்னசெய்வது என்றுதான் எல்லோருக்கும் குழப்பம் அதிகமாக இருக்கும்.அதுவும் வெயில் காலத்திற்கு ஏற்றாற்போல மசாலா அதிகமில்லாமல்,காரம் குறைவாக மிகவும் எளிதாக எல்லோரும் விரும்பும்வண்ணம் செய்யவேண்டும் என்றால்.....இருங்க..இருங்க.. ஏன் கவலைப்படுறீங்க.வாங்க நம்ம கிச்சனுக்கு ..வெள்ளைகுருமா செய்து பழகலாம்.
தேவையான பொருட்கள் ;
உருளைக்கிழங்கு - 3
பச்சைபட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
சோம்பு - சிறிதளவு
கசகசா - 1 தேக்கரண்டி
கரம்மசாலாபொடி - அரை தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை ;
தேவையான பொருட்கள் ;
உருளைக்கிழங்கு - 3
பச்சைபட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
சோம்பு - சிறிதளவு
கசகசா - 1 தேக்கரண்டி
கரம்மசாலாபொடி - அரை தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை ;
- உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
- பட்டாணியை உப்புசேர்த்து வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- தேங்காயுடன் சோம்பு, கசகசா,பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துவைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் வெங்காயம்,கறிவேப்பிலை சேர்க்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வதக்கவும்.
- பின்னர் தக்காளியை சேர்த்து இலேசாக கிளறவும்.நன்கு மசியும்வரை வதக்க வேண்டாம்.
- பின்னர் உருளைக்கிழங்கு,கரம்மசாலா சேர்த்து வதக்கவும்.கிழங்கை இலேசாக மசித்து விடலாம்'
- இப்போது வேகவைத்துள்ள பச்சைபட்டாணி,அரைத்துவைத்துள்ள தேங்காய் ,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இப்போது மிகவும் ஈஸியான வெள்ளை குருமா தயார்.வாங்க .. உங்களுக்கு பிடிச்ச இட்லியோ,தோசையோ,சப்பாத்தியோ சாப்பிடலாம்.
