கடல் பாசி என்பது சைனா க்ராஸ் என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் ஒரு உணவுப்பொருள்.இஸ்லாமியர்கள் நோன்பு காலங்களில் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.உடல் சூட்டை தனிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.உண்பதற்கு ஜெல்லி போன்ற உணர்வை தரும் இது குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு வகை.இதன் செய்முறைகளை தெரிந்துகொள்வதற்கு முன் தேவையான பொருட்களை பார்ப்போம்.
சைனா கிராஸ் -1 பாக்கெட்
சர்க்கரை -அரை கிலோ மற்றும்
ஆரஞ்சு,சிவப்பு,மஞ்சள் வண்ணங்கள் சிறிதளவு
செய்முறை;
முதலில் கடல்பாசியை ஒரு லிட்டர் நீருடன் அது நன்கு கரையும்வரை கொதிக்க வைக்கவும்.அது நன்கு கரைந்த பின்னர் சர்க்கரை கலந்து இன்னும் கொதிக்கவிடவும் .பின்னர் அணைத்துவிட்டு மூன்று தனித்தனி பாத்திரங்களில் சமமாக பிரிக்கவும்.ஒவ்வொரு பாத்திரத்திலும் ஒவ்வொரு கலரை சேர்த்து நன்கு கலக்கவும்..வேண்டுமானால் வாசனைக்கு நீங்கள் விரும்பும் எஸென்ஸ் சேர்க்கலாம்.இப்போது மூன்று அகலமான தட்டில் இவற்றை தனித்தனியாக ஊற்றி ஆறவிடவும்.பிரிட்ஜிலும் வைக்கலாம்.நன்கு கெட்டியானதும் எடுத்து நீங்கள் விரும்பும் வடிவத்தில் துண்டுகளாக போட்டு பரிமாறவும்.தண்ணீருக்கு பதிலாக பாலும் உபயோகப்படுத்தலாம்.

No comments:
Post a Comment