பெரும்பாலான பிள்ளைகளுக்கு தேர்வு ஆரம்பமாகிவிட்டது.சிலருக்கு விடுமுறையும் ஆரம்பமாகிவிட்டது.தொடர்ந்து அறுபது நாட்களுக்குமேல் விடுமுறை.பிள்ளைகள் என்ன செய்யலாம் இந்த விடுமுறைக்கு..? வாங்க பேசலாம்.
- இந்த விடுமுறையில் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளலாம்.அது என்ன என்பது அவரவர் ஆர்வத்தை பொறுத்தது.பணம் கொடுத்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது இல்லை.நாம்மை சுற்றியுள்ள யாரோ ஒருவரிடம் நமக்கு பிடித்த திறமை இருக்கும்.எனவே முயற்சி பண்ணுங்க குட்டீஸ்.
- இதுவரை பள்ளியில் மருதாணி,நெயில் பாலீஷ் எல்லாவற்றிற்கும் தடா.ஒரு இரண்டு மாதம் உங்களுக்கு பிடித்த மருதாணியை போட்டுக்கோங்க.உங்கள் ட்ரெஸ்க்கு பொருத்தமா நகபூச்சும் போட்டு கலக்குங்க.
- அம்மாவுக்கோ..பக்கத்துவீட்டு ஆண்ட்டிக்கோ கிராப்ட் தெரிஞ்சா அதை கத்துக்கிட்டு நீங்களும் செஞ்சு வீட்டை அழகுபடுத்துங்க.
- உங்க துணிமணிகளை அழகா மடித்து அடுக்கிவையுங்க .உள்ளாடைகளுக்கு தனியா ஒரு பாக்ஸ் போட்டு மூடிவையுங்க.அடிக்கடி தேடவேண்டிய வேலையே இருக்காது.அம்மாவையும் தொல்லை பண்ணவேண்டாம்.
- உங்க ட்ரெஸ்ஸிங் டேபிளை அழகா அடுக்குங்க.தேவையில்லாததை தூக்கி போட்டுட்டு தேவையானதை மட்டும் பத்திரப்படுத்துங்க.
- வெளியூரில் இருக்கும் உங்க கஸினுக்கு போன் பண்ணி பேசுங்க.
- உங்களுக்கு பத்தாம போன உங்க பழைய துணிகளை எடுத்து தனியா வையுங்க.அது யாராவது ஒருவருக்கு உதவும்.அவங்கள தேடிப்பிடிச்சு கொடுங்க.ஒருத்தருக்கு உதவின திருப்தி நிச்சயமா உங்களுக்கு வரும்.
- தினமும் ஆங்கிலத்தில் சில பயிற்சிகளை எடுத்துக்கொள்ள மறக்காதீங்க.உங்க ஆங்கில அறிவு உங்க படிப்புக்கு முக்கியம்.
- வீட்டில் சின்ன சின்ன உதவிகளை பண்ணுங்க.அப்போதுதான் நீங்களும் கத்துக்கமுடியும்.
- தலையில் பேன் தொல்லை உள்ளவங்க இந்த விடுமுறையில் அதை ஒழிச்சுக்கட்ட எண்ணப்பண்ணனுமோ அதை பண்ணுங்க.நாட்டுமருந்துக்கடையில் தரமான பேன்மருந்து கிடைக்கும்.
- தினமும் தக்காளி,தயிர்னு முகத்துக்கு பூசிட்டு வாங்க.நீங்க திரும்ப ஸ்கூல் போறப்ப பளிச்ன்னு இருப்பீங்க.
- வீட்டில கம்ப்யூட்டர் இருந்தா அடிப்படை விஷயங்களை கத்துக்கோங்க .
- பொதுஅறிவு புத்தகங்களை படித்து அதை மற்றவர்களுடைய விவாதித்து விளையாடுங்கள்.
இது தவிர .இன்னும்.இன்னும்..இன்னும் என்னவெல்லாம் செய்யணும்னு அம்மா சொல்வாங்க.அதன்படி செய்யுங்க.யாருக்கும் தொல்லை பண்ணாம.

