இது என்னுடைய நூறாவது பதிவு.இது சமூக நோக்கோடு இருக்கவேண்டும் என்று நான் விரும்பியதால் என் அருகில் நடந்த சம்பவத்தையே கனத்த மனதோடு எழுதுகிறேன்.இதனால் நீதி உயிர்பெறுமானால் எனக்கு மகிழ்ச்சி.
இது ஒரு உண்மைக்கதை என்றால் நம்பவா போகிறீர்கள்.இதில் வரும் சரவணனை போல பலபேர் சட்டத்தின் கையில் சிக்காமல் வெளியே உல்லாசமான வாழ்க்கையை ரசித்து..ருசித்து ..அனுபவித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.சட்டமும் வாய்தா என்ற திகட்டாத அல்வாவை அவனுக்கு தொடர்ந்து கொடுத்து அவனுடைய செயல்களுக்கு மறைமுகமாக உதவிவருவதுதான் மிகப்பெரிய கொடுமை.இந்த பதிவு பல சட்ட வல்லுனர்களின் பார்வைக்கும் போகும் என்ற உணர்வில் என் பதிவை தொடர்கிறேன்.
மீனாட்சி ஒரு தொழில்நுட்ப பட்டதாரி.பல இடங்களில் வரன் வந்ததில் சரவணனை பிடித்துப்போக பெரியோர்கள் பேசி திருமண தேதி குறித்தனர்.வரதட்சணை லிஸ்டில் இல்லாத பொருட்களே இல்லை எனலாம்..வீடு கூட்டும் விளக்குமாறு வரை கொடுத்து திருமணம் நடந்தது.அடுத்த வருடமே ஒரு பிள்ளை.சில வருடங்கள் சந்தோஷமான வாழ்க்கைதான். அந்த சிலவருடங்களில் அவளுடைய நகைகள் அனைத்தும் அவனால் பறிக்கப்பட்டன. குழந்தையை காரணம் காட்டி அவள் வேலைக்கு செல்லும் உரிமை மறுக்கப்பட்டது.சரி..நம் மேல் உள்ள பாசத்தில் சொல்கிறார்கள் என்று மீனாட்சிக்கு சந்தோஷம்தான்.அவனுக்கு பெரும்பாலும் லேப்டாப்பிலேயே வேலை .சில மாதங்களில் அவனுக்கு பெருநகரம் ஒன்றில் வேலை கிடைக்க மனைவி மற்றும் குழந்தையை விட்டுவிட்டு தான் மட்டும் அந்த நகரத்தில் குடியேறினான்.அவனுடைய நடவடிக்கையில் மீனாட்சிக்கு சந்தேகம்வரை அவனுடைய லேப்டாப் -ஐ ஆராய பல பூதங்கள் கிளம்பியிருக்கிறது.அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் ,அந்த பெண்களோடு அவன் உல்லாசமாக இருப்பதும் வெளிச்சத்துக்கு வர பிரச்சனை அவன் வீட்டு பெரியோர்கள் முன் பஞ்சாயத்துக்கு வந்தது.அவனுடைய குடும்பம் ஊரில் மிகவும் மரியாதையான குடும்பம்தான்.ஆனால் மீனாட்சி விஷயத்தில் அவர்கள் ஒருதலைப்பட்சமாக அவனுக்கு இன்னும் ஊக்கம் கொடுத்து பேச அவள் நீதிமன்ற உதவியை நாடவேண்டியதாகிவிட்டது.கொடுத்த வரதட்சணைக்கு ஆதாரம் இல்லை. அவனிடம் அவள் இழந்த பணமதிப்பு அவளை பொறுத்தவரை அதிகம் தான்.ஆனாலும் அவன் செய்த அத்தனை அசிங்கங்களுக்கும் ஆதாரங்களை கொடுத்தும் நீதிமன்றம் வாய்தா என்ற பெயரில் அவனுக்கு பல வருடங்களாக சலுகை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.வழக்கு ஆரம்பித்த நிலையிலிருந்து ஒரு அங்குலம் கூட இத்தனை வருடங்களாக நகரவில்லை.அவனும் சட்டத்தின் கையில் சிக்காமல் இன்னும் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான்.நம் நாட்டை பொறுத்தவரை நீதி என்பது செத்த பிணம்.என்னை சுற்றியுள்ள எத்தனையோ மீனாட்சிகளுக்காக இந்த பதிவை பதிவிடுகிறேன்.பெண்களுக்காக குரல் கொடுக்கும் எத்தனையோ இயக்கங்கள் இதை படிக்கநேர்ந்தால் மீனாட்சிக்காக இல்லாவிட்டாலும் சரவணனைப்போன்ற காம மிருகங்கள் இன்னும் பலரின் வாழ்க்கையை அழிக்காமல் இருக்க முடிந்ததை செய்யுங்கள்.அவனைப்பற்றிய அத்தனை ஆதாரங்களையும் உலகுக்கு வெளிப்படுத்த உதவுங்கள்.மேலும் விபரங்கள் தேவைப்படின் எனது மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.