வெயில் காலங்களில் அதிக மசாலா சேர்த்த குழம்பு வகைகளை உண்ணுவது எல்லோருக்கும் ஒவ்வாத ஒன்று.அதனால் வெயில் நேரங்களில் மசாலா அதிகம் சேர்க்காத உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும்போது சாப்பிட்ட உணர்வே இலகுவாக இருப்பதோடு மனதுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.அந்த வரிசையில் இன்று நம் சமயலறையில் நாம் அறிந்துகொள்ளப்போவது மிகவும் எளிமையான மோர் குழம்பின் செய்முறையைத்தான்.போவோமா...?
தேவையான பொருட்கள்;
தயிர் - 1 கப்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சரிசி - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
வெண்டைக்காய் - 6
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு,உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 2
பச்சைமிளகாய் - 3
செய்முறை ;
முதலில் கடலை பருப்பு,பச்சரிசி இரண்டையும் அரைமணிநேரம் ஊறவைக்கவேண்டும்.பின்னர் அதோடு பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நன்கு மிருதுவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான பொருட்கள்;
தயிர் - 1 கப்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சரிசி - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
வெண்டைக்காய் - 6
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு,உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 2
பச்சைமிளகாய் - 3
செய்முறை ;
முதலில் கடலை பருப்பு,பச்சரிசி இரண்டையும் அரைமணிநேரம் ஊறவைக்கவேண்டும்.பின்னர் அதோடு பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நன்கு மிருதுவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- வெண்டைக்காயை ஒரு இன்ச் அளவில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
- தயிரை நன்கு கடைந்து மோராக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு,காய்ந்தமிளகாய் சேர்த்து அது பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பின்னர் வெண்டைக்காயை போட்டு வதக்கவும்.
- வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் கடைந்து வைத்துள்ள மோர்,அரைத்துவைத்துள்ள கடலைப்பருப்பு கலவை ,மஞ்சள்தூள்,உப்பு,பெருங்காயத்தூள் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.இப்போது எல்லோருக்கும் பிடித்த மோர்க்குழம்பு தயார்.இது சாதம் மட்டுமில்லாமல் சப்பாத்திக்கும் ஏற்ற துணை உணவு தான்.
