நம் சமயலறையில் நமக்கே தெரியாமல் பல பொக்கிஷங்களை பொதித்து வைத்திருக்கிறோம்.அவைகளில் முக்கியமான ஒன்று வெந்தயம்.இதை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொன்னால் கூட தவறில்லை எனலாம்.அந்த அளவுக்கு அதிகப்படியான பலன்களை தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இதில் நீர்சத்து, புரதசத்து,
கொழுப்புசத்து , மாவுசத்து, சுண்ணாம்புசத்து, இரும்புசத்து, வைட்டமின்A மற்றும் நார்சத்து அடங்கி இருக்கிறதாம். இதை நீங்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் இன்றைய இளைய தலைமுறைகளுக்கும் விளக்கி சொல்லுங்கள்.ஆரோக்கியத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்றுத்தருவதில் தவறில்லைதானே..!
கொழுப்புசத்து , மாவுசத்து, சுண்ணாம்புசத்து, இரும்புசத்து, வைட்டமின்A மற்றும் நார்சத்து அடங்கி இருக்கிறதாம். இதை நீங்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் இன்றைய இளைய தலைமுறைகளுக்கும் விளக்கி சொல்லுங்கள்.ஆரோக்கியத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்றுத்தருவதில் தவறில்லைதானே..!
- உடல் சூட்டை தணிக்க வெந்தயத்தை ஊறவைத்து அதை அந்த தண்ணீரோடு சேர்த்து சாப்பிட சிறந்த பலன் கிடைக்கும்.
- மலச்சிக்கலா ..? கவலைப்படாதீங்க.தினமும் இரவு படுக்கைக்கு முன் வெந்தயத்தை தண்ணீரோடு எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனை போயே போச்சு.
- உங்களுக்கு சர்க்கரை நோயா..? வெந்தயத்தை வறுத்து போடி செய்து தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீரோடு சாப்பிட்டு வாருங்கள்.சர்க்கரை நோய் துண்டை காணும்,துணியை காணும் என்று ஓடிவிடும்.
- இரும்புசத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதா..? தினமும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போதும்.48 நாட்களில் உங்கள் இரத்த பரிசோதனை அறிக்கை சொல்லும் உங்களுக்கு குறைபாடு நீங்கிவிட்டது என்று.
- தீப்புண் ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா..? சிறிது வெந்தயத்தை ஊறவைத்து ,அரைத்து தீப்புண்ணின் மேல் மெதுவாக தடவுங்கள்.அந்த இடம் குளிர்ச்சியடைந்து விரைவில் புண்கள் ஆறும்.
- முடி கொட்டுகிறதே என்று கவலைப்படுகிறீர்களா..? சிறிது வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தடவி ஊறவைத்து அரைமணிநேரம் கழித்து குளியுங்கள்.முடி கொட்டுவதும் நிற்கும்.கூந்தலும் செழித்து வளரும்.
- தலையில் பொடுகு,வறண்ட பொலிவிழந்த முடி ஏற்பட்டுள்ளதா..? அதற்கும் இந்த வெந்தய பசைதான் தீர்வளிக்கும்.இதை தொடர்ந்து தலையில் தடவும்போது பொடுகு நீங்கி,முடி பளபளப்பாக மாறும்.
- குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கவில்லையா..? வெந்தயம்,பூண்டு சேர்த்து அரிசி கஞ்சி செய்து கொடுங்கள்.குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கிடைக்கும்.
- மாதவிடாய் கோளாறை சரிசெய்ய ஏகப்பட்ட மருந்து சாப்பிடுகிறீர்களா..? தினமும் மறக்காமல் வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்களேன்.உங்கள் பிரச்னை ஓடிப்போகிறதா இல்லையா என்று பாப்போம்.
- உடல் பருமன் அதிகமா இருக்க..? உடல் பயிற்சி செய்ய சோம்பலா இருக்க..? அப்போ உங்களுக்கு வெந்தயம் ஒன்றுதான் தீர்வு.தினமும் சாப்பிடுங்க.எடையை குறைங்க.
- கூந்தல் தைலம் தயாரிக்கிறீர்களா..? அதில் வெந்தயத்தை சேர்க்க மறந்துடாதீங்க.உங்கள் உடல் குளிர்ச்சியாக இருந்தால்தானே கூந்தல் உதிர்வது நிற்கும்.
- ஆண்களுக்கும் வெந்தயத்தை அடிக்கடி கொடுத்திட்டு வாங்க.அப்போது தான் உடல் வெப்பம் குறைந்து ஆண்மை பெருகும்.
- மூலநோய் வந்து யாராவது முனகிகிட்டே இருக்காங்களா..? வெந்தயத்தை கொடுங்க.மூலமாவது.. ஒண்ணாவது..
- எல்லாவித குடல் நோய்களுக்கும் வெந்தயம் ஒரு அருமருந்தாம்.அப்போ இனிமே வெந்தயத்தை கிலோ..கிலோவா வாங்கி கொட்டுங்க.என்ன நான் சொல்றது...!

No comments:
Post a Comment