- வெந்தயம்
- வெங்காயம்
- முட்டை
- உருளைக்கிழங்கு சாறு
- மருதாணி
- விளக்கெண்ணெய்
- முடக்கத்தான் கீரை சாறு
- ஆப்பிள் சீடர் வினிகர்
- பூண்டு சாறு
- கிரீன் டீ
இவை அனைத்தும் என்ன என்று பலரும் யோசிப்பீர்கள்.இவை எல்லாமே நம் தலைமுடிக்கு ஊட்டம் தரக்கூடிய பொருட்கள்தான்.இவற்றை மாற்றி மாற்றி நம் தலைமுடியின் வேர்களில் படுமாறு வாரம் ஒருமுறை ஊறவைத்து குளிக்க தலைமுடி உதிர்தல் பிரச்சனை நீங்கி கூந்தல் அடர்த்தியாக வளரத்தொடங்கும்.கூந்தல் உதிர்வுக்கு முறையான பராமரிப்பின்மையும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.எனவே வாரத்தில் ஒருமுறை இவற்றில் ஏதேனும் ஒன்றை தலைக்கு தேய்த்து குளிப்பதை வழக்கப்படுத்திக்கொள்வதுடன் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டுவந்தால் கூந்தல் உதிர்வை கட்டிப்படுத்திட நிச்சயமாக முடியும் என்பதில் சந்தேகமில்லை.
