இன்று எல்லோர் கையிலும் ஆண்ட்ராய்டு மொபைல்களும் ,லேப்டாப் எனப்படும் மடிக்கணினியும் அதிக பயன்பாட்டுக்கு வந்து அவர்களுடைய பெரும்பாலான நேரங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன.ஆனாலும் புதிதாக மடிக்கணினி வாங்கும் ஒருவர் அதைப்பற்றிய அடிப்படை அறிவை அறிந்து வைத்திருந்தால் சில ஆயிரங்களை மிச்சப்படுத்தலாம்.புதிதாக மடிக்கணினி வாங்கும் நபர் அதில் இணைய இணைப்பு பெறுவதற்கு அதற்கான முகவர்களை அணுகும்போது அவர்களுடைய அறியாமையை பயன்படுத்தி டேட்டா கார்ட் [data card ]எனப்படும் டாங்கிள்ஸ் -ஐ சில ஆயிரங்களுக்கு அவர்கள் தலையில் கட்டிவிடுவர் .இது நமக்கு தேவையில்லாத செலவுதான்.ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் நம் எல்லோர் கையிலும் ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கும்போது அதை கொண்டே நாம் நம் மடிக்கணினியில் இணைய இணைப்பை கொண்டுவர முடியும்.USB கேபிளை கொண்டு நம் மொபைலை மடிக்கணினியுடன் இணைப்பதின் மூலமாகவும்,WIFI மூலமாகவும் இரண்டு வழிகளில் வழிகளில் இதை நாம் செய்யமுடியும்.இதில் WIFI மூலமாக இணைப்பதற்கு உங்கள் மடிக்கணினியில் WIFI வசதி இருக்கவேண்டும்.
- முதலில் உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று MORE-ஐ கிளிக் பண்ணுங்கள்.
- அடுத்து வரும் விண்டோவில் வரும் USB TETHERING -ஐ கிளிக் பண்ணிவிட்டு உங்கள் மொபைலை மடிக்கணினியுடன் இணைத்துவிட்டால் போதும்.உங்கள் மடிக்கணினி இணைய உலகத்தை சுற்ற தயாராகிவிடும் .
- அவ்வாறல்லாமல் WIFI மூலமாக நீங்கள் இணைக்க விரும்பினால் PORTABLE WLAN HOTSPOT என்பதை கிளிக் பண்ணிவிட்டு அதற்கு கீழே உள்ள SET UP WLAN HOTSPOT-ல் உங்களுக்கென ஒரு கடவுச்சொல் [PASSWORD] உருவாக்கவேண்டும்.
- அடுத்து உங்கள் மடிக்கணினியில் WIFI -ஐ ON பண்ணிவிட்டு உங்கள் மொபைலில் கொடுத்த அதே கடவுச்சொல்லை மடிக்கணினிக்கும் கொடுத்தால் USB கேபிள் இணைக்காமலேயே இணையத்தை பயன்படுத்தலாம்.



No comments:
Post a Comment