அசைவம் சாப்பிட முடியாத விரத நாட்களில் அசைவ பிரியர்களுக்கென்றே தயாரிக்கப்படும் இந்த சைவ மீன் குழம்பு செட்டிநாடு சமையலில் மிகவும் சிறப்பான ஒன்று. அதன் செய்முறைகளை பார்ப்போமா..?
தேவையான பொருட்கள்;
தட்டை பயறு - 250 கிராம்
பூண்டு - 5 பல்
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 2
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
தனியா பொடி - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு,வெந்தயம் -சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை;
தட்டை பயறை இரவே ஊறவைத்து காலையில் நீரை நன்கு வடித்துவிட்டு அதோடு பூண்டு,சோம்பு,அரை தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, சிறிது மஞ்சள் பொடி அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு நீர் விடாமல் அரைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் இந்த கலவையை வாழை இலை மேல் தடிமனாக பரப்பி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்துக்கொள்ளவேண்டும். நன்கு வெந்ததும் அதை ஆறவிட்டு சிறு துண்டுகளாக வெட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இந்த துண்டுகளை அதன் வண்ணம் மாறும்வரை
இருபுறமும் திருப்பி திருப்பி போட்டு எடுத்துவைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,வெந்தயம் போட்டு ,பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.இப்போது கறிவேப்பிலை மற்றும் பச்சைமிளகாயையும் சேர்த்துவிடலாம்.வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு மசியும்வரை வதக்கி அதோடு மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,தனியாதூள்,சாம்பார்தூள்,உப்பு சேர்த்து கிளறி புளிக்கரைசலையும் சேர்த்து கொதிக்கவிடவும்.அது நன்கு கொதித்த பின்பு வெட்டிவைத்துள்ள தட்டைப்பயறு துண்டுகளை சேர்த்து வேகவிடவும்.பத்துநிமிடம் கழித்து அடுப்பை அனைத்துவிடலாம்.இப்போது சுவையான செட்டிநாடு சைவ மீன்குழம்பு சுவைப்பதற்கு தயார்.

No comments:
Post a Comment