தேவையான பொருட்கள் ;
புதினா -ஒரு பிடி
கொத்துமல்லி -ஒரு பிடி
கறிவேப்பிலை -இரண்டு கொத்து
பச்சை மிளகாய்-1
சீரகம்-அரை தேக்கரண்டி
பூண்டு-இரண்டுபல்
வெல்லம் -சிறிதளவு
உப்பு-சிறிதளவு
மிளகாய் தூள்-அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் -2 சிட்டிகை
உருளைக்கிழங்கு -2
பெரியவெங்காயம்-2
பூரிக்கு ;
மைதா -1 கப்
ரவா -கால் கப்
உப்பு -சிறிதளவு
செய்முறை ;
புதினா -ஒரு பிடி
கொத்துமல்லி -ஒரு பிடி
கறிவேப்பிலை -இரண்டு கொத்து
பச்சை மிளகாய்-1
சீரகம்-அரை தேக்கரண்டி
பூண்டு-இரண்டுபல்
வெல்லம் -சிறிதளவு
உப்பு-சிறிதளவு
மிளகாய் தூள்-அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் -2 சிட்டிகை
உருளைக்கிழங்கு -2
பெரியவெங்காயம்-2
பூரிக்கு ;
மைதா -1 கப்
ரவா -கால் கப்
உப்பு -சிறிதளவு
செய்முறை ;
- முதலில் மைதா,ரவா,உப்பு மூன்றையும் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.பின்னர் அதை பெரிய சப்பாத்திகளாக தேய்த்து சிறிய வட்டவடிவ பாத்திரத்தின் உதவியால் சிறு சிறு வட்டங்களாக வெட்டி பூரிகளாக பொரித்து வைத்துக்கொள்ளவும்.
- அடுத்து உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து பின் அதை நன்கு மசித்து அதோடு மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து ஒரு கடாயில் நன்கு கிளறி எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- பானிக்கு மிக்ஸியில்புதினா,கொத்துமல்லி,கறிவேப்பிலை,சீரகம்,பூண்டுப்பல், வெல்லம் ,பச்சைமிளகாய்,உப்பு போன்றவற்றை போட்டு நன்கு அடித்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.இது நன்கு நீர்த்து இருக்கவேண்டும்.
- பெரியவெங்காயத்தை சிறிதாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
- இறுதியாக பொரித்து வைத்துள்ள பூரிகளை எடுத்து மேல்பக்கம் இலேசாக உடைத்து அதில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பவும்.பின் அடித்து வைத்துள்ள பானியை நிரப்பி பரிமாறவும்.இது உண்பதற்கு கடையில் வாங்கும் பானி பூரியைவிட சுவையாக இருக்கும்.விரும்பினால் பச்சை பட்டாணி அல்லது வெள்ளை கொண்டைக்கடலையை வேகவைத்து உருளைக்கிழங்கு மசாலாவோடு சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment