பணியாரம் செய்வது ஒன்றும் கடினமான வேலை கிடையாது.எளிமையாக நம் வீட்டில் எப்போதும் இருப்பில் இருக்கும் இட்லிமாவைக்கொண்டே சுவையான பணியாரம் செய்து சுவைக்கலாம்.சுவையில் எந்த மாறுபாடும் இருக்காது. செய்து பார்க்கலாமா...?
தேவையான பொருட்கள் ;
இட்லிமாவு - 2 கப்
வெல்லம் - கால்கிலோ
ஏலக்காய் - 4
தேங்காய் துருவல் - அரை மூடி அளவு
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு
செய்முறை ;
தேவையான பொருட்கள் ;
இட்லிமாவு - 2 கப்
வெல்லம் - கால்கிலோ
ஏலக்காய் - 4
தேங்காய் துருவல் - அரை மூடி அளவு
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு
செய்முறை ;
- வெல்லத்தை கால் கப் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.வெல்லம் நன்கு கரைந்தபின் அதை கெட்டியான இட்லிமாவுடன் சேர்க்கவும்.மேலும் ஏலக்காய் பொடி ,தேங்காய் துருவல்,சமையல் சோடா போன்றவற்றையும் கலந்து மாவை நன்கு கலக்கவும்.
- இப்போது பணியார சட்டியில் நெய் ஊற்றி மாவை கொஞ்சம் கொஞ்சமாக அரை குழி மட்டும் ஊற்றி மூடிவைக்கவும்.மேலே இலேசாக நெய் ஊற்றலாம்.பின்னர் ஒரு கூர்மையான குச்சியால் பணியாரத்தை திருப்பி போட்டு இளம் சிவப்புநிறம் வரும்வரை வேகவிடவும்.
இப்போது சுவையான பணியாரம் தயார்.சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.
