தேவையான பொருட்கள்;
தலை கறி - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -3
மிளகாய் பொடி - 1 கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் -கால் தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - கால் தேக்கரண்டி
சோம்பு -சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை ;
- முதலில் தலைக்கறியை நன்கு நீர்விட்டு நான்கைந்துமுறை கழுவவேண்டும்.பின் ஒரு குக்கரில் கறியை போட்டு சிறிதளவு மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு ,வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது,தக்காளி,பச்சைமிளகாய் போன்றவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
- பின்பு மிளகாய் பொடி,மஞ்சள் தூள்,கரம் மசாலா பொடி போன்றவற்றை சேர்த்து வேகவைத்துள்ள தலைக்கறியை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
- தண்ணீர் நன்கு வற்றி வரும்போது மிளகுப்பொடியை சேர்த்து கிளறி கொத்துமல்லியை தூவி இறக்கவும்.இது சாம்பார் சாதம்,சப்பாத்தி போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.சாதத்தில் அப்படியே பிசைந்தும் சாப்பிடலாம்

No comments:
Post a Comment