நிறைய பேருக்கு அடிப்படை தையல் தெரிந்தாலும் அளவுகள் மற்றும் வெட்டும் முறைகள் தெரியாத காரணத்தினால் தைப்பதற்கு தயங்குவார்கள்.அவ்வாறு அடிப்படை தெரிந்தவர்களுக்கு பயனுள்ள வகையில் இதை பதிவிடுகிறேன்.உங்களுக்கு தெரிந்த அடிப்படை விஷயங்களோடு இதையும் இணைத்து உங்கள் கற்பனை வடிவத்தை நீங்கள் உங்கள் பிளவுஸ்களில் கொண்டுவர உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
பிளவுஸ் கட்டிங் என்பது புரிந்துகொண்டவர்களுக்கு மிக எளிதான ஒன்றுதான்.அளவு பிளவுஸை வைத்து அப்படியே அளவெடுப்பது ஒரு வகை என்றால் அளவுகளை குறித்து வைத்துக்கொண்டு அந்த அளவுகளின்படி அளவெடுத்து வெட்டுவது இன்னொரு வகை.இதில் நாம் இரண்டாவது வகையைதான் பார்க்கப்போகிறோம். இதற்கு முக்கியமான அளவுகள் மொத்தம் பதிமூன்று.
1.பின் உயரம்
2.பின் அகலம்
3 முன் உயரம்
4. முன் அகலம்
5. பின்கழுத்து உயரம்
6.முன்கழுத்து உயரம்
7.கழுத்து அகலம்
8.தோள்பட்டை அகலம்
9.அக்குள் உயரம்
10.கை நீளம்
11. கை சுற்றளவு
12. பெல்ட் அகலம்
13. பெல்ட் உயரம்.

பிளவுஸ் பின்புறம் ;
முதலில் துணியை இரண்டாக மடித்து மடிப்புப்பகுதி நம்மை நோக்கி இருக்குமாறு வைத்துக்கொள்ளவும்.இப்போது நாம் எடுத்துள்ள துணி ஒரு மீட்டர் என்றால் ஒரு மீட்டர் உயரத்துக்கு இரண்டாய் மடிக்கப்பட்ட துணி நம்முன் இருக்கும்.
இப்போது துணியின் கீழ்ப்பகுதியில் பின் உயரம் ,பின் அகலம் இரண்டையும் குறித்து இணைத்தால் ஒரு செவ்வக வடிவம் கிடைக்கும்.செவ்வகத்தின் மேல் பகுதியில் மடிப்பு பக்கமாக கழுத்து அகலத்தை குறிக்கவேண்டும்.பின் கழுத்து உயரத்தை குறித்து இரு புள்ளிகளையும் இணைத்தால் படத்தில் உள்ள 1 என்ற செவ்வகம் கிடைக்கும்.பிறகு அதனுள்ளே கழுத்து வடிவத்தை வளைத்து வரைந்துகொள்ளவேண்டும்.
பிறகு தோள்பட்டை அகலத்தை 1 என்ற புள்ளியில் தொடங்கி குறித்தால்
2 என்ற புள்ளி கிடைக்கும்.அந்த புள்ளியிலிருந்து நேர் கீழே அக்குள் அளவை குறித்தால் 2 என்ற செவ்வகம் கிடைக்கும்.அதனுள்ளும் வளைத்து வரைந்துகொள்ளவேண்டும்.
அடுத்து இடுப்பு பகுதியில் ஒரு இன்ச் அளவுக்கு சாய்வாக குறித்து 2-ஐ இணைத்தால் நமது பிளவுசின் பின் பக்கம் தயார்.
பிளவுஸ் முன்புறம் ;
நாம் பின்புறத்திற்கு செய்தது போலவே முன் பக்கத்துக்கும் கழுத்து ,கை வளைவுகளை வரைந்து குறித்துக்கொள்ளலாம்.ஆனால் கைக்கு மட்டும் வெட்டிய பிறகு அரை இன்ச் அளவுக்கு கூடுதலாக மீண்டும் குடைந்து வெட்டிக்கொள்ளவேண்டும்.
மேலும் முன்பக்க உயரத்தை தோள்பட்டையிலிருந்து நேர் கீழாக அளவெடுத்து பெல்ட் வரை குறித்துக்கொண்டு C1,C2 வை மாதிரியாக கொண்டு வளைத்து வரைந்து வெட்டிக்கொள்ளலாம்.பெல்ட் வெட்டிய பிறகு அதையே அளவு வைத்து தடிமனான துணியில் வெட்டி எடுத்துக்கொண்டால் பெல்டின் உள்பக்கத்துக்கு வைத்துக்கொள்ளலாம்.இப்போது பிளவுசின் முன் பக்கமும் தயார்.
பிளவுசின் கை பகுதி ;
பிளவுஸ் கை வெட்டும்போது துணியை நான்காக மடிக்கவேண்டும் .ஒரு கைக்கு இரண்டாக என்றால் இரண்டு கைக்கு நான்கு தானே..
கையின் நீளம் மற்றும் சுற்றளவு குறித்த பிறகு A யிலிருந்து B ஐ வரைந்து .கொள்ளவேண்டும். B என்பது A யில் மூன்றில் ஒரு பங்கு.கையிலும் C2பகுதியில் ஒரு இன்ச் குறைத்து குறித்துக்கொண்டு B யோடு இணைத்து சாய்வாக வெட்டவேண்டும்.அடுத்து படம் இரண்டில் உள்ளதுபோல கையின் முன்பக்க பகுதியில் குடைந்து வெட்டிக்கொள்ளுங்கள்.இப்போது கை பகுதியும் தயார்.
பின்பு பட்டன் பட்டிக்காக 2 இன்ச் அகலமுள்ள இரண்டு பீஸ்களை வெட்டிக்கொள்ளலாம்.கழுத்துக்கும் கிராஸ் பீஸ்களை வெட்டி இணைத்து வைத்துக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment