கோதுமை லட்டு வட இந்தியர்களிடம் மிக பிரபலமான ஒரு இனிப்பு வகை.இதை செய்வதும் மிக எளிது.அதற்கான செய்முறைகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தேவையான பொருட்கள்;
கோதுமை மாவு -1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - அரை கப்
முந்திரி -25 கிராம்
உப்பு - சிறிதளவு
செய்முறை;
முதலில் கோதுமை மாவை உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவதை விட கெட்டியாக பிசைந்து கொள்ளவேண்டும்.பின்னர் அதை சிறிய பூரிகளாக தேய்த்து எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்து ஆறவைத்துக்கொள்ளவும்.நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.பின்பு சர்க்கரையையும் தனியாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் பொடித்து வைத்துள்ள கோதுமை ரொட்டி,சர்க்கரை ,வறுத்த முந்திரி மூன்றையும் போட்டுகலக்கவும்.பிறகு சூடு பண்ணிய நெய்யை ஊற்றி சூடு ஆறுவதற்குள் உருண்டைகளாக உருட்டவும்.இப்போது சுவையான கோதுமை லட்டு தயார்.

No comments:
Post a Comment