இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Feb 28, 2017

அளவில்லா வருமானம் தரும் அப்ளிகேஷன் உருவாக்கம்.

 இருபது வருடங்களுக்கு முன்பு எல்லோருக்கும்  இந்திய அஞ்சல்துறை மட்டுமே தகவல் தொடர்பு சாதனமாக இருந்தது.ஒருவர் வெளியூர் செல்கிறார் என்றால் அவர் அந்த ஊரை அடைந்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஒரு கடிதம் எழுதுவார்.நான் நலமாக வந்து சேர்ந்தேன்,கவலை வேண்டாம் என்ற வாசகத்தை சுமந்துகொண்டு அந்த கடிதம் அவர் வீட்டை அடைய நான்கைந்து நாள் ஆகும்.இது ஒருவகை என்றால் ட்ரங்க் கால் போட்டு பேசுவது இன்னொரு வகை.ஒரு தெருவில் ஒரு சிலரிடம் மட்டுமே டெலிபோன் இணைப்பு இருக்கும்.அதுவும் உள்ளூர் தொடர்பு வசதி மட்டும் கொண்டதாகவே இருக்கும்.நாம் STD அழைப்பு மேற்கொள்ளவேண்டுமென்றால் இரவு வரை காத்திருக்க வேண்டும்.ஏனெனில் இரவு 7 மணிக்கு மேல் 50 சதவீதம் கட்டண கழிப்பில் பேசலாம்.இரவு வந்ததும் உள்ளூர்  தொலைத்தொடர்பு அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு நாம் பேச  வேண்டிய எண்ணை கொடுத்து "இந்த நம்பருக்கு இணைப்பு கொடுங்கள் "என்று சொன்னால் அவர் நமது அழைப்பை துண்டித்துவிட்டு சிலமணி நேரங்கள் கழித்து மீண்டும் நம்மை தொடர்புகொண்டு "நீங்கள் பேசவேண்டிய எண்ணுக்கு இணைக்கிறோம் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டு இணைப்பை கொடுப்பார் .அவர் கொடுக்கும் அந்த இணைப்பிற்காக சிலமணிநேரங்கள் டெலிபோன் அருகிலேயே காத்திருந்த அனுபவம் 1990 களில் அனைவருக்கும் உண்டு.இதையும் விட்டால் பொது தொலைபேசி இணைப்பகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பேசவேண்டிய எண்ணுக்கு பேசலாம்.

சரி ... இதெல்லாம் எதற்கு ?இன்றைய நிலைமையை பார்க்கலாம் என்றால் நம் கண்ணுக்கு முன்னால் கலர் கலராக தெரிகிறது அல்லவா ..அவைதான் ஆப்ஸ் எனப்படும் மொபைல் அப்ளிகேஷன்ஸ்.ஆமாம்.இப்போது எல்லோர் கைகளிலும் எல்லா நேரங்களிலும் ஸ்மார்ட் போன்கள் மூலமாக ஆப்ஸ் -கள் நம்மை நோக்கி கண்சிமிட்டிகொண்டேதான் இருக்கின்றன.ஒவ்வொரு சிமிட்டல்களிலும் எதோ ஒரு தகவலை ஒவ்வொரு ஆப்ஸ் -ம் நமக்கு தந்துகொண்டே இருக்கின்றன.நமக்கு தேவையானதா ...தேவையில்லாததா ..என்றெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை.காலையில் நம்மை எழுப்பிவிட  ஒரு  அப்ளிகேஷன் என்றால் நாம் சாப்பிட வேண்டியதை பட்டியலிட இன்னொரு ஆப்ஸ்.அரட்டைக்கு whatsapp..விளையாட temple run.. இசைக்கு la musique..அழைப்பவர் பற்றிய தகவலை ஆராய true caller..  டிஜிட்டல் தகவல் பரிமாற்றத்திற்கு share it..பண பரிமாற்றத்திற்கு BHIM..அழகான புகைப்படத்திற்கு youcam perfect ..புகைப்படத்தை அழகாக்க youcsm makeup..வீடியோ எடிட்டிங்-குக்கு ஒரு video show..இப்படி நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் நாம் ஆப்ஸ்களையே அண்டி வாழ்கிறோம்.

இப்படி எதிர்கால உலகமே ஆப்ஸ்களை நம்பி இருப்பதால் இதையே தொழிலாக கொண்டு புதுப்புது அப்ளிகேஷன்களை வடிமைப்பதில் ஆர்வத்தை கொண்டு வந்தால் குறைவில்லா வருமானத்தை எளிதாக பெறலாம்.இதை சொல்லி தருவதற்கென்றே நிறைய பயிற்சி நிலையங்கள் உள்ளன.சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் இந்த பயிற்சியை நிறைவுசெய்துவிடலாம்.சென்னை ஐஐடி -யும் இலவசமாக இந்த பயிற்சியை அளித்துவருகிறது.ஆன்லைன் மூலமாக இந்த பயிற்சிக்கு விண்ணப்பித்தால் உங்கள் மெயிலுக்கு பயிற்சிக்கான பாடங்கள் அனுப்பிவைப்பார்கள்.பயிற்சிகாலம் முடிந்ததும் தேர்வுக்கட்டணம் மற்றும் சான்றிதழ் கட்டணம் மட்டும் செலுத்தி ஆன்லைன் தேர்வை எதிர்கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு பதிவுசெய்யவேண்டிய இணைய முகவரி
www.imad.tech
இது தவிர பல ஆன்லைன் வலைதளங்கள் மூலமாகவும் கட்டணம் செலுத்தி இந்த பயிற்சியை நாம் பெறமுடியும்.

 

No comments:

Post a Comment