குல்ஃபியை விரும்பாதவர்கள் யாருமில்லை.நடு இரவில் கூட குல்ஃபியை ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள் நம் மக்கள்.எல்லா நேரங்களிலும் குல்ஃபியை தேடி வெளியே செல்லவேண்டிய அவசியமில்லை.நம் வீட்டு குளிர்சாதன பெட்டியியிலேயே நாம் உருவாக்கலாம் குல்ஃபி .சுரங்கத்தை.. வாங்க போகலாம் ..சுரங்கத்தை தேடி..
தேவையான பொருட்கள் ;
பால் -1லிட்டர்
சர்க்கரை -200 கிராம்
பழுத்த மாம்பழ துண்டு - 1 கப்
மேங்கோ எஸென்ஸ் -அரை தேக்கரண்டி
சோள மாவு -2 தேக்கரண்டி
செய்முறை
பாலை நன்கு கொதிக்கவைக்கவும். மேலே வரும் ஏடுகளை எடுக்காமல் சுண்டவைக்க வேண்டும்.அதில் சோள மாவை கரைத்து ஊற்றி அடி பிடிக்காமல் கொதிக்கவிடவும்.மாம்பழ துண்டுகளை அரைத்து சேர்க்கவும்.மாம்பழ சீசன் இல்லாத போது பாட்டில்களில் கிடைக்கும் மாம்பழச்சாறை உபயோகப்படுத்தலாம்.சர்க்கரை,மேங்கோ எஸென்ஸ் சேர்த்து நன்கு ஆறவிடவும். பின்னர் குல்ஃபி அச்சுகளில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.இனி நினைத்த நேரத்தில் நீங்கள் குல்ஃபி சாப்பிட வெளியே செல்லவேண்டாம்.செய்து பாருங்கள்.சுவைத்து மகிழுங்கள்.

No comments:
Post a Comment