- உங்கள் மொபைலில் ஆன்டி -வைரஸ் மென்பொருள் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.இல்லையெனில் பிளே ஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- நீங்கள் பதிவிறக்கம் செய்யும் அத்தனை மென்பொருளையும் பிளே ஸ்டோரில் மட்டுமே செய்யுங்கள். இதை தவிர்த்து பிரௌசர்களில் நேரிடையாக பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
- உங்கள் மொபைலில் உள்ள பண பரிமாற்றத்திற்கான மென்பொருள்களை எப்போதும் LOGOUT பண்ணி வையுங்கள்.இது உங்கள் PASSWORD திருடு போகாமல் தடுக்கும்.
- இலவசமாக பொது இடங்களில் கிடைக்கும் WIFI -களை உபயோகப்படுத்தாதீர்கள்.
- தேவையில்லாத மென்பொருள்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்.
- உங்கள் மொபைலில் SCREEN லாக் மற்றும் ஆட்டோ லாக் வசதியை பயன்படுத்துங்கள்.இது வேறு எவரும் நீங்கள் இல்லாதபோது உங்கள் மொபைலை உபயோகப்படுத்துவதை தடுக்கும்.
- உங்கள் மொபைலில் உள்ள போட்டோ,வீடியோக்களை கம்ப்யூட்டர் அல்லது PENDRIVE -ல் மாற்றி சேமித்துவிட்டு மொபைலில் அழித்துவிடுங்கள்.இதனால் உங்கள் மொபைலின் வேகம் கூடும்.
- உங்கள் மொபைலில் முகப்பு வெளிச்சத்தை குறைத்து,ரன்னிங் ஆப்ஸ் -ஐ நிறுத்துங்கள்.இதனால் உங்கள் பேட்டரி ஆயுள் கூடும்.
- உங்கள் மொபைலில் பிள்ளைகள் பேட்டரிகளை உறிஞ்சக்கூடிய விளையாட்டுகள் விளையாடுவதை தவிருங்கள். இது உங்கள் மொபைலின் ஆயுளையே கூட்டும்.
- தேவைப்படாத நேரங்களில் GPS ,ப்ளூடூத் ,WIFI போன்றவற்றை அனைத்து வையுங்கள்.இதுவும் உங்கள் தகவல்கள் திருடப்படுவதை தடுக்கும்.
Jan 31, 2017
ஆண்ட்ராய்டு மொபைலை பாதுகாக்க பத்து வழிகள்
சுவையோ சுவை... இஞ்சி முரப்பா செய்வது எப்படி..
சில வருடங்களுக்கு முன்பு நம் பயணத்தின் போது பேருந்து நிலையங்களில் இஞ்சி முரப்பாவை கூவி..கூவி விற்பவர்களை பார்த்திருப்போம்.காலப்போக்கில் இவை கொஞ்சம் மறைந்தாலும் இன்றும் இதை நேசிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.வாந்தி ,வயிற்று மந்தம் போன்றவற்றிற்கு பலனளிக்கக்கூடிய இதன் செய்முறைகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தேவையான பொருட்கள்;
இஞ்சி அல்லது சுக்கு போடி -100 கிராம்
வெல்லம் -100 கிராம்
நெய் -இரண்டு தேக்கரண்டி
செய்முறை
இஞ்சியை தோல் சீவி தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை ஒரு குவளை தண்ணீரோடு சேர்த்து கம்பி பதம் வரும்வரை கொதிக்க விடவும்.
கம்பி பதம் வந்ததும் அதோடு அரைத்து வைத்த இஞ்சி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.நன்கு சுருள வந்ததும் நெய்யை சேர்த்து கிளறிவிடவும்.பின்னர் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் வில்லைகளாக வெட்டி பத்திரப்படுத்தவும்.தேவையானபோது எடுத்து பயன்படுத்தலாம்.பிள்ளைகளும் விரும்பி சுவைப்பார்கள்.
தேவையான பொருட்கள்;
இஞ்சி அல்லது சுக்கு போடி -100 கிராம்
வெல்லம் -100 கிராம்
நெய் -இரண்டு தேக்கரண்டி
செய்முறை
இஞ்சியை தோல் சீவி தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை ஒரு குவளை தண்ணீரோடு சேர்த்து கம்பி பதம் வரும்வரை கொதிக்க விடவும்.
கம்பி பதம் வந்ததும் அதோடு அரைத்து வைத்த இஞ்சி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.நன்கு சுருள வந்ததும் நெய்யை சேர்த்து கிளறிவிடவும்.பின்னர் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் வில்லைகளாக வெட்டி பத்திரப்படுத்தவும்.தேவையானபோது எடுத்து பயன்படுத்தலாம்.பிள்ளைகளும் விரும்பி சுவைப்பார்கள்.
Jan 30, 2017
குடும்பத்தை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்
இன்று நாம் வல்லரசு என்ற கனவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம்.எல்லோரும் தன்னிறைவு அடையும் வகையில் வருமானத்தை ஈட்டிக்கொண்டு இருக்கிறோம்.பிள்ளைகள் நன்கு சாப்பிடுகிறார்கள், படிக்கிறார்கள்,கஷ்டங்களை உணர செய்யாமல் சுகம்,சந்தோஷம் என்ற ஒரு பக்கத்தை மட்டுமே பிள்ளைகளுக்கு காண்பித்து வளர்த்து வருகிறோம்.ஆனால் திடீரென ஒருநாள் உங்கள் பிள்ளைகள் உணவு,உடை,இருப்பிடம் என்று எதுவும் இல்லாமல் வாழ்வாதாரத்திற்காக பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டால்.....நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது அல்லவா ...அப்படிப்பட்ட ஒரு சிலரிடம் மட்டுமே இந்த பதிவை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையானதை சேர்த்து வைத்து இருப்பார்கள்.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் ..இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல அவர்கள் குடும்பம் எந்த சூழ்நிலையிலிருந்தும் வெளியே வந்துவிடும்.அனால் அளவாய் சம்பாதித்து,அளவாய் செலவுசெய்து,வீட்டு வாடகை ..பிள்ளைகள் படிப்பு..உற்றார் உறவினர் உடன்பிறந்தோர் கடமை என்று மெழுகுவர்த்தியாய் கரைந்துகொண்டிருக்கும் வீட்டு தலைவன் காலத்தின் சதியால் காணாமல் போனால் பிள்ளைகளின் படிப்பு என்ன ஆகும்..அந்த குடும்பத்தின் பசி எங்கே போகும்..வானத்தின் கீழே ஒதுங்க அவர்களுக்கு எங்கே ஒரு கூரை கிடைக்கும்..சிரிக்கும் உறவுகளுக்கு மத்தியில் ஓடி ஒளிய இடம் தேடி எங்கே போவது..என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை இருக்கிறதா என்றால் பல குடும்பங்களிடம் இருக்காது என்பதே பதில்.
தோழனாவது தோள் கொடுப்பான்.அனால் உறவு என்பவன் உடனிருந்தே உயிர்பலி வாங்குவான் என்று என் தோழி கூறியது ஞாபகம் வருகிறது.ஆனால் உண்மையில் இதுதான் இன்றைய நிலை .இந்த நிலைமை எல்லோருக்கும் மாறவேண்டும் என்பதே என் கனவு.அதற்காக பட்டினி கிடந்து,பழையதை சாப்பிட்டு,ஊரை கொள்ளையடித்து உலையில் போடவேண்டும் என்பது அல்ல.நன்கு சிந்தித்தால் அவரவருக்கே விடை தெரியும்.
பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையானதை சேர்த்து வைத்து இருப்பார்கள்.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் ..இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல அவர்கள் குடும்பம் எந்த சூழ்நிலையிலிருந்தும் வெளியே வந்துவிடும்.அனால் அளவாய் சம்பாதித்து,அளவாய் செலவுசெய்து,வீட்டு வாடகை ..பிள்ளைகள் படிப்பு..உற்றார் உறவினர் உடன்பிறந்தோர் கடமை என்று மெழுகுவர்த்தியாய் கரைந்துகொண்டிருக்கும் வீட்டு தலைவன் காலத்தின் சதியால் காணாமல் போனால் பிள்ளைகளின் படிப்பு என்ன ஆகும்..அந்த குடும்பத்தின் பசி எங்கே போகும்..வானத்தின் கீழே ஒதுங்க அவர்களுக்கு எங்கே ஒரு கூரை கிடைக்கும்..சிரிக்கும் உறவுகளுக்கு மத்தியில் ஓடி ஒளிய இடம் தேடி எங்கே போவது..என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை இருக்கிறதா என்றால் பல குடும்பங்களிடம் இருக்காது என்பதே பதில்.
தோழனாவது தோள் கொடுப்பான்.அனால் உறவு என்பவன் உடனிருந்தே உயிர்பலி வாங்குவான் என்று என் தோழி கூறியது ஞாபகம் வருகிறது.ஆனால் உண்மையில் இதுதான் இன்றைய நிலை .இந்த நிலைமை எல்லோருக்கும் மாறவேண்டும் என்பதே என் கனவு.அதற்காக பட்டினி கிடந்து,பழையதை சாப்பிட்டு,ஊரை கொள்ளையடித்து உலையில் போடவேண்டும் என்பது அல்ல.நன்கு சிந்தித்தால் அவரவருக்கே விடை தெரியும்.
- உங்கள் குடும்பத்தின் தேவை என்ன..இருப்பிடம்...உங்களால் சொந்தமாக அமைத்து கொடுக்க இயலாவிட்டால் வாடகை இல்லாமல் லீஸ்- க்கு அமைத்து கொடுங்கள்.உங்கள் பிள்ளைகள் தலையெடுக்கும் வரை உங்கள் குடும்பம் கவுரவமாக, மாதங்கள் பிறந்தால் வாடகைக்கு வழியில்லாமல் நிற்கும் அவலநிலையின்றி இருக்கும் அல்லவா ..
- அன்றாட தேவைகளுக்கு உங்களால் சேர்த்துவைக்க முடியாவிட்டாலும் சிறு சிறு முதலீடுகளை சேமித்து வையுங்கள்.இன்சூரன்ஸ் பாலிசிகளில் முதலீடு செய்யும்போது எப்போதும் சம்பாதிக்கும் நபரின் பெயரிலேயே பாலிசி இருக்கவேண்டும்.ஏனெனில் சம்பாதிப்பவரை நம்பிதான் மொத்த குடும்பம் இருக்கிறது.அவர் பாதிப்படையும்போது அவரின் பேரில் வரும் பணம் அவருடைய குடும்பத்துக்கு சிறு அளவிலாவது உதவும்.அவ்வாறு இல்லாமல் மற்றவர் பேரின் மேல் பாலிசி எடுக்கும்போது குடும்பத்ததலைவர் பாதிக்கப்பட்டால் அந்த குடும்பத்துக்கு எந்த பயனும் வராது.அதுமட்டுமில்லாமல் மீதமுள்ள பாலிசி காலத்தில் கட்டவேண்டிய பணத்தையும் அந்த குடும்பத்தால் கட்டமுடியாமல் போகும்.
- அடுத்த முக்கிய விஷயம் உங்கள் முதலீடு மற்றும் சொத்துக்களை வில்லங்கம் இல்லாமல் பாதுகாப்பது.என் பெற்றோர்..என் உடன் பிறந்தோர் என்று குடும்பத்தலைவர் நினைத்தாலும் அவருக்கு பின் அவருடைய மனைவி ,பிள்ளைகள் அனைவரும் குடும்பத்தலைவரின் உறவுகளுக்கு மூன்றாம் மனிதர்களாகவே தெரிவர்.இல்லை என்று வாய் சொன்னாலும் உண்மை என்ன என்று எல்லா குடும்பத்தலைவர்களுக்கும் தெரியும்.குடும்ப தலைவரை இழந்த நிலையில் ஒரு குடும்பம் தத்தளிக்கும்போது அந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கைப்பற்றும் நிலையில் தான் பெரும்பாலான சொந்தங்கள் உள்ளன.ஒரு சில தான் இதற்கு விதிவிலக்கு.எனவேதான் இன்றைய காலகட்டத்தில் நம்மிடமிருந்தே நம்மை காத்துக்கொள்ளும் சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம் எனலாம்.
- இது எல்லாவற்றையும் விட முக்கிய விஷயம் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது.வாழ்வது ஒரு வாழ்க்கை தான்..அதில் பாதியை வாழ தெரியாமல் தொலைத்து இருக்கலாம்.இனி வரும் சொற்ப காலங்களில் குடும்பத்தை நேசியுங்கள்.அவர்களுக்காக உங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள்.ஒவ்வொருவருக்கும் தனித்தனி குடும்பம் உள்ளது.அவரவர் குடும்பத்தை அவரவர் பார்த்துக்கொள்ளும் திறமை வேண்டும்.தனக்கு மிஞ்சியது தான் தானமும்..தர்மமும்.உனக்கு இல்லாவிட்டால் நான் தருவேன்.எனக்கு இல்லாவிட்டால் நீ தருவாயா..என்று கேட்டு பாருங்கள்.எவனும் கிட்டே வரமாட்டான்.
தஞ்சாவூர் இட்லி..தயங்காம சாப்பிடலாம் வாங்க..
இட்லி என்பது தென்னிந்தியாவில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு.ஆனால் ஒருசிலருக்கு இட்லி பதம் சரியாக வருவதில்லை என்ற ஏக்கம் இருக்கும்.அந்த ஒருசிலருக்காக மட்டும் இந்த பதிவு.
தேவையான பொருட்கள் ;
புழுங்கல் அரிசி -2 கப்
உளுத்தம் பருப்பு -1/4 கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
சாதம் - 1/4 கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை
அரிசியை தனியாகவும் ,உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை தனியாகவும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.பின்னர் கிரைண்டரில் உளுத்தம்பருப்பை போட்டு நன்கு அரைக்கவும்.மாவை கையில் எடுத்தால் பந்து போல் உருண்டு வரும்.நன்கு அரைத்ததும் ஒரு பாத்திரத்துக்கு மாவை மாற்றிவிட்டு அடுத்து அரிசி மற்றும் சாதத்தை கிரைண்டரில் போடவும்.ரவை பதத்திற்கு வந்ததும் மாவை பாத்திரத்துக்கு மாற்றவும்.இப்போது அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.இதை எட்டு மணிநேரம் அப்படியே வைக்கவும்.
எட்டு மணிநேரம் கழித்து பார்த்தால் மாவு நன்கு புளித்திருக்கும்.இப்போது மாவை நன்கு கலக்காமல் இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஊற்றவும்.ஊற்றிய பிறகும் மாவை இட்லிதட்டில் அழுத்தக்கூடாது.பத்து நிமிடம் கழிந்ததும் அடுப்பை அணைக்கவும்.சற்று ஆறியதும் எடுத்தால் இட்லி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.இதில் சாதத்துக்கு பதிலாக ஜவ்வரிசியை 50கிராம் ஊறவைத்து சேர்த்து அரைத்தால் அது இன்னும் வித்யாசமான சுவையை கொடுக்கும்.
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.
தேவையான பொருட்கள் ;
புழுங்கல் அரிசி -2 கப்
உளுத்தம் பருப்பு -1/4 கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
சாதம் - 1/4 கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை
அரிசியை தனியாகவும் ,உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை தனியாகவும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.பின்னர் கிரைண்டரில் உளுத்தம்பருப்பை போட்டு நன்கு அரைக்கவும்.மாவை கையில் எடுத்தால் பந்து போல் உருண்டு வரும்.நன்கு அரைத்ததும் ஒரு பாத்திரத்துக்கு மாவை மாற்றிவிட்டு அடுத்து அரிசி மற்றும் சாதத்தை கிரைண்டரில் போடவும்.ரவை பதத்திற்கு வந்ததும் மாவை பாத்திரத்துக்கு மாற்றவும்.இப்போது அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.இதை எட்டு மணிநேரம் அப்படியே வைக்கவும்.
எட்டு மணிநேரம் கழித்து பார்த்தால் மாவு நன்கு புளித்திருக்கும்.இப்போது மாவை நன்கு கலக்காமல் இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஊற்றவும்.ஊற்றிய பிறகும் மாவை இட்லிதட்டில் அழுத்தக்கூடாது.பத்து நிமிடம் கழிந்ததும் அடுப்பை அணைக்கவும்.சற்று ஆறியதும் எடுத்தால் இட்லி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.இதில் சாதத்துக்கு பதிலாக ஜவ்வரிசியை 50கிராம் ஊறவைத்து சேர்த்து அரைத்தால் அது இன்னும் வித்யாசமான சுவையை கொடுக்கும்.
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.
இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று கூறப்படுகிறது..அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம் ,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உள்ளன.
அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற
அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்
செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.
இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.
லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.
Jan 28, 2017
ஜில்..ஜில்..ஜிகிர்தண்டா செய்வது எப்படி
மதுரை என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது மல்லி.அதற்கு அடுத்து ஜிகிர்தண்டா தான்.ஜிகிர்தண்டா பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.அந்த அளவுக்கு சுவையில் எல்லோரையும் கட்டிப்போடும் ஜிகிர்தண்டாவை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்.
பால் -1லிட்டர்
பாதாம் பிசின் -10 கிராம்
சர்க்கரை -10 தேக்கரண்டி
ரோஸ் சிரப் -3 தேக்கரண்டி
நன்னாரி சிரப் -3 தேக்கரண்டி
வெண்ணிலா ஐஸ் கிரீம் -2 ஸ்கூப்
உலர்ந்த திராட்சை &
முந்திரி,பாதாம் -சிறிதளவு
செய்முறை
முதலில் பாதாம் பிசினை நன்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும் .முதல் நாள் இரவே ஊற வைத்துவிடுவது நல்லது.பாலை நன்கு காய்ச்சி ஆறியதும் சர்க்கரை கலந்து பிரிட்ஜில் வைக்கவும்,பால் நன்கு குளிர்ந்ததும் வெளியே எடுத்து அதில் பாதாம் பிசின்,ரோஸ் சிரப் ,நன்னாரி சிரப் ,கலந்து ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.அதன் மேலே வெண்ணிலா ஐஸ்கிரீம் உலர்ந்த திராட்சை,முந்திரி,பாதாம் சேர்த்து பரிமாறவும்.சுவையான ஜிகிர்தண்டா உங்கள் வீட்டு சுட்டிகளுக்காக தயார்.
பிள்ளைகளை படிக்க வைக்கிறது ரொம்ப ஈசி
இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் பெரும்பாலும் மிகுந்த அறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.அதற்கு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணம்.இருப்பினும் சில குழந்தைகள் இன்னமும் படிப்பில் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பது பெற்றோர்களின் பெரும் கவலைகளில் ஒன்று.படிப்பு என்பது நன்றாய் படிப்பவர்களுக்கு மட்டுமே உரிமையானது அல்ல.அது எல்லோருக்கும் பொதுவான ஒரு உரிமை.அதை நாம் எவ்வளவு உற்சாகத்தோடு பற்றிக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உரிமையோடு நம்மில் நெருங்கி உறவாடும்.இது தவிர சில எளிமையான வழிமுறைகள் மூலம் நாம் எப்படிப்பட்ட பிள்ளைகளையும் படிப்பில் சிறந்த மாணவர்களாக உருவாக்க முடியும்.
- முதலில் நம் பிள்ளைகளை அடுத்த பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள்.இது அவர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
- பிள்ளைகள் செய்ய நினைக்கும் காரியங்களுக்கு ஆரம்பத்திலேயே தடை போடாதீர்கள்.அதிலுள்ள தீயவைகளை விளக்கி சொல்லி இப்படியெல்லாம் இருக்கிறது ..இது எனக்கு சரியாய் படவில்லை என்று சொன்னால் அவர்களாகவே முடிவெடுப்பார்கள்.எனவே சிறு வயதிலிருந்தே முடிவெடுக்கும் பொறுப்பை அவர்களுக்கு கொடுங்கள்.
- சிறுபிள்ளைகள் படிக்கும்போது சிறு..சிறு மெமரி டெக்னிக் மூலம் படிக்க உதவுங்கள். உதாரணமாக ..சூரிய குடும்பத்தின் கோள்களினுடைய வரிசையை பிள்ளைகள் ஞாபகம் வைத்துக்கொள்ள தடுமாறும்போது MY VERY EDUCATED MOTHER JUST SHOW US NEPTUNE &PLUTO என்று சொல்லி கொடுங்கள்.இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை பாருங்கள்.M என்பது MERCURY ,V என்பது வீனஸ் ,E என்பது EARTH,,M என்பது MARS ,J என்பது ஜுபிடர் ,S என்பது SATURN ,U என்பது யுரேனஸ் ஆகும்.இப்போது உங்கள் குழந்தையிடம் சூரிய குடும்பத்தில் ஐந்தாவது கோள் எது என்று கேட்டால் உங்கள் குழந்தை பதில் சொல்லுமா..சொல்லாதா
- அதுமட்டுமல்ல..எட்டு எட்டா..நாலு எட்டு எடுத்து வச்சா எவரெஸ்ட் உயரத்துக்கே போயிடலாம்.இதிலிருந்து என்ன புரியுது உங்களுக்கு..ஆமாங்க எவரெஸ்டின் உயரம் 8848 மீட்டர் என்பதுதான்.
- பஸ் ,கால்குலேட்டர் ரெண்டையும் கண்டுபிடிச்சது யாருன்னா பாஸ்கல் ன்னு சொல்லிடலாம்.(BUS-PAS, CAL-CAL) இப்ப புரியுதா..
- இது மாதிரி உங்க பிள்ளைகள் மனசுக்குள் நுழைய கஷ்டப்படுற விஷயங்களுக்கு மெமரி டெக்னீக்கோட முயற்சி பண்ணுங்க.நிச்சயமா எல்லா பாடங்களும் உள்ளே வரும்.அது மட்டுமில்ல..வந்த விஷயங்கள் மறுபடியும் மனச விட்டு போகாது .
- இந்த மெமரி டெக்னிக் எங்கே கிடைக்கும்னு கேட்காதீங்க .அது உங்களுக்குள்ளேயே தன இருக்கு.உங்க வீட்டு விஷயங்களை கூட டெக்னீக்கா யூஸ் பண்ணுங்க.யாரு கேட்க போறாங்க..ஒரு வாட்டி ட்ரை பண்ணிதான் பாருங்களேன்.
Jan 27, 2017
SIMPLE WAY TO SPEED UP YOUR ANDROID MOBILE... IN TAMIL
- இன்று பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன் எனப்படும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் வாங்கிய சில மாதங்களிலேயே அத்தகைய போன்களின் செயல்படும் வேகம் குறைந்துவிடும்.அதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில முக்கிய காரணங்களை இங்கு பார்ப்போம்.
- இப்போது எல்லா மொபைல்களிலும் கேமரா வசதி இருப்பதால் நாம் பார்க்கும் எல்லா விஷயங்களையும் போட்டோ அல்லது வீடியோ எடுக்கும் பழக்கம் எல்லோருக்கும் உள்ளது.இதனால் நம்முடைய மொபைல்களில் கேளரி நிறைந்து காணப்படுகிறது.இதுவே நம் மொபைகளின் செயல்வேகம் குறைய முக்கிய காரணமாக உள்ளது.எனவே உங்கள் போட்டோ மற்றும் விடியோவை SD கார்டு அல்லது உங்கள் கம்ப்யூட்டர் போல்டர்களில் சேமித்து வைத்துக்கொண்டு போனில் உள்ள போட்டோக்களை அழித்துவிடுங்கள்.
- உங்கள் மொபைலில் தரமான மெமரி கார்டை பயன்படுத்துங்கள்.அதை கண்டுபிடிக்க எளிய வழி நீங்கள் வாங்கும் SD கார்டில் ஒரு வட்டமிட்டு அந்த வட்டத்திற்குள் 10 என்று எழுதியிருக்கும்.
- ஆண்ட்ராய்டு மொபைலை வாங்கிய உடனேயே எல்லோரும் தமக்கு விருப்பப்பட்ட APP -ஐ டவுன்லோட் பண்ண தொடங்கிவிடுவர் .பின்னர் அது பயனில்லை என்று தெரிந்து UNINSTALL பண்ணுவர் அவ்வாறு UNINSTALL பண்ணினாலும் சில பைல்கள் நமது மொபைல்களிலேயே தங்கிவிடும்.இதனாலும் நமது மொபைல்கள் தன் வேகத்தை இழக்கும்.எனவே ஒரு APP -ஐ டவுன்லோட் பண்ணும்முன் யோசித்து பண்ணுங்கள்.
- உங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத ரன்னிங் app -ஐ செட்டிங்ஸ் க்கு சென்று நிறுத்துங்கள் .இதுவும் உங்கள் மொபைலின் வேகத்தை அதிகப்படுத்த உதவும்.
- உங்கள் மொபைலில் live வால்பேப்பர் இருந்தால் அதை மாற்றுங்கள்.
- இவை அனைத்திற்கும் உங்கள் மொபைல் கட்டுப்படாமல் குறைந்த வேகத்தோடே செயல்பட்டால் செட்டிங்ஸ் சென்று பேக்டரி டேட்டா ரீசெட் கொடுங்கள்.உங்கள் மொபைல் நிச்சயம் வேகமாக செயல்பட தொடங்கும்.
HAIR FALL SOLUTION IN TAMIL
தலைமுடி பிரச்சனை என்பது இன்று அனைவருக்கும் தலையாய பிரச்சனையாக உள்ளது.தலைமுடி முளைக்கிறதோ ..இல்லையோ இதை கொண்டு லாபம் பெற பல இடங்களில் கிளினிக் -களும் பியுட்டி பார்லர் -களும் முளைக்க ஆரம்பித்துவிட்டன.ஆனாலும் சிகிச்சையின் பலன் என்னவோ ஸீரோ தான்.முதலில் அனைவரும் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.நம்மை சுற்றி கவனித்து பார்த்தால் தெரியும்.அடர்த்தியான கூந்தல் உள்ளவர்கள் பெரும்பாலும் பாரம்பரியமாக இந்த பண்பை பெற்றவர்களாக இருப்பார்கள்.அவர்களுடைய அம்மா,பாட்டி என்று அனைவருக்கும் வளமையான கூந்தல் இருந்திருக்கும்.
ஆனாலும் முறையான பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் மூலம் நாமும் அதுபோன்ற கூந்தலை பெறமுடியும்.தொடர்ந்து ஆறு மாதங்கள் எந்தவித சலிப்பும் இல்லாமல் முயற்சித்து பாருங்கள்.ஏனெனில் இது மேஜிக் போன்று கண்மூடி திறப்பதற்குள் நடந்துவிடும் விஷயம் அல்ல.
ஆனாலும் முறையான பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் மூலம் நாமும் அதுபோன்ற கூந்தலை பெறமுடியும்.தொடர்ந்து ஆறு மாதங்கள் எந்தவித சலிப்பும் இல்லாமல் முயற்சித்து பாருங்கள்.ஏனெனில் இது மேஜிக் போன்று கண்மூடி திறப்பதற்குள் நடந்துவிடும் விஷயம் அல்ல.
1.முதலாவதாக நாம் தலைமுடியை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.தரமான சீயக்காய் அல்லது ஷாம்பூ கொண்டு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தலையை அலசவேண்டும்.
2.அடுத்ததாக ஊட்டச்சத்துமிக்க உணவு.இதில் காய்கறி,கீரைகள்,பழங்கள்,பேரிச்சை,முளைகட்டிய பயறு வகைகள் அனைத்தும் அடங்கும்.தினமும் இவற்றில் முடிந்தவற்றை உணவில் சேர்த்துவர பழகுங்கள்.
3.அடுத்த முக்கிய விஷயம் மனம் சம்மந்தப்பட்டது.உங்கள் மனம் கவலைகள்,சஞ்சலங்களின்றி அமைதியாக வைத்துக்கொள்ள பழகுங்கள். உங்கள் மனதுக்கும் முடி உதிர்தலுக்கும் நிறைய சம்மந்தம் உண்டு.
இந்த மூன்று முறைகளை நாம் சிரமம் பார்க்காமல் பின்பற்றி வந்தாலே போதும்.சில மாதங்களில் உங்கள் முடி வளர்ச்சி தூண்டப்பட்டு உங்கள் முடி உதிர்தல் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.
அதன் பின்னர் ஆயில் மசாஜ் மற்றும் உங்களுக்கு கிடைக்கும் மூலிகை கொண்டு ஹேர் பேக் போடுதல் போன்றவற்றின் மூலம் மீண்டும் பிரச்சனைகள் வராமல் தடுத்துக்கொள்ளவேண்டும்,
அதன் பின்னர் ஆயில் மசாஜ் மற்றும் உங்களுக்கு கிடைக்கும் மூலிகை கொண்டு ஹேர் பேக் போடுதல் போன்றவற்றின் மூலம் மீண்டும் பிரச்சனைகள் வராமல் தடுத்துக்கொள்ளவேண்டும்,
Jan 25, 2017
20/20 HOME TIPS IN TAMIL
- அடுப்பில் எண்ணெய் கரை அதிகம் இருந்தால் ஒரு தேக்கரண்டி ஷாம்பூ போட்டு சுத்தம் செய்யும்போது எத்தகைய எண்ணெய் பிசுக்கும் மறைந்துவிடும்.
- துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்கும் போது சலவைத்தூளுடன் சிறிது ஷாம்பூ கலந்து துவைத்தால் துணிகள் மிகவும் வாசனையாக இருக்கும்.
- பட்டு துணிகளை துவைக்க ஷாம்பூ மட்டுமே போதுமானது.
- இரவில் படுக்கும்முன் கன்னங்களில் பால் ஏடு அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி தடவி படுத்தால் கன்னங்கள் மிகவும் செழிப்பாக இருக்கும்
- இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் உலர்ந்த திராட்சை அல்லது பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர குறைபாடு மறையும்.
- இரவே வெந்தயத்தை ஊறவைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர விரைவில் இரும்புச்சத்து குறைபாடு மறையும்.உடல் எடையும் குறையும்.பாத வலிகளும் பறந்தோடும்.
- இப்போது அழகான ஸ்டோரேஜ் கண்டைனர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.அவற்றை வாங்கி பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உள்ளாடைகள்,கைகுட்டைகள்,சாக்ஸ் என்று போட்டு வைத்தால் பார்க்கவும் அழகாக இருக்கும்.பிள்ளைகள் பள்ளி கிளம்பும் அவசரத்தில் தேடும் பிரச்னைகளும் இருக்காது.
- சாம்பாரோ ,ரசமோ கொதிக்கும்போது அதிக வாசனை வந்தால் உப்பு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
- திடீர் சிற்றுண்டி தயார் பண்ண இட்லி மாவில் வெல்லக்கரைசல்,தேங்காய் துருவல் ,மற்றும் ஏலக்காய் சேர்த்து பணியாரமாக செய்யலாம்.
- தேங்காயை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் நாளடைவில் மிகவும் கடினமாகிவிடும்.இதை தவிர்க்க தேங்காயை துருவி ஒரு பாக்ஸில் போட்டு வைக்கலாம்.
- வீட்டில் குழாய் தண்ணீர் கலங்கலாக வந்தால் சிறிது படிகாரத்தை தண்ணீரில் கலக்கினால் தண்ணீர் மழை நீரைப்போல் மாறும்.படிகார கட்டியை தண்ணீரில் விட்டு நாலைந்து சுற்று பிசைந்தாற்போல் சுற்றினாலே போதும்.நிறைய போடவேண்டாம்.இதை குடிநீராகவும் பயன்படுத்தலாம்.
- வீட்டில் சிமெண்ட் தரை உள்ளவர்கள் மார்க்கெட்டில் அழகழகாக கிடைக்கும் புளோர் ஷீட் -ஐ தரைகளில் ஒட்டிவிட்டால் டைல்ஸ் போட்டது போல் அழகாக இருக்கும்.இது பத்து வருடங்களுக்கு மேல் தாங்கும்.குழந்தைகள் விளையாட,படிக்க சுத்தமாக இருக்கும்.
- கற்றாழை செடியை வீட்டிலேயே தொட்டியில் வளர்த்து வந்தால் சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.அது காற்றையும் சுத்தப்படுத்தும்.
- காலில் பித்த வெடிப்பு அதிகம் இருந்தால் கட் ஷூ பயன்படுத்துங்கள்.பாதம் வியர்க்கும்போது வெடிப்புகள் மறையும்.
- குளியலறையில் உள்ள வாளிகள் உப்பு மற்றும் அழுக்கு படிந்து காணப்பட்டால் ஆசிட் கொண்டு கழுவுங்கள்.பளிச் என்று ஆகிவிடும்.
- வாஷிங் மெஷின் உள்ளே அழுக்கு படிந்திருந்தாலும் அரை பாட்டில் ஆசிட் ஐ மெசினில் ஊற்றி ஊறவைத்து பின் வெறும் மெஷின் ஐ தண்ணீர் ஊற்றி ஓடவிட்டு கழுவுங்கள்.
- தலை நரைக்க ஆரம்பம் ஆன உடனேயே தலை சாயம் பயன்படுத்த துவங்காதீர்கள்.மருதாணி இலையை அரைத்து தலைக்கு பூசலாம்.அல்லது மெஹந்தி பேக் என்று கடைகளில் கிடைக்கும். பயன்படுத்தலாம்.45 வயது வரை இப்படியே சமாளிக்கலாம்.
- தையல் மெஷின் பக்கத்தில் பீரோ அல்லது எதாவது உலோக பொருள் இருந்தால் அதில் ஒரு காந்தத்தை ஒட்டி வைத்து அதில் ஊசி ,பின் போன்ற பொருள்களை ஒட்டி வைக்கலாம்.அவசரத்துக்கு உதவும்.
- சட்னிக்கு தேங்காய் இல்லாவிட்டால் பரவாயில்லை.பொட்டுக்கடலை,வேர்க்கடலை,மிளகாய்,பூண்டு பல்,உப்பு போட்டு அரைத்து பாருங்கள்.வேறு சட்னியை தேடமாடீர்கள்.தேவைப்பட்டால் கொத்துமல்லியும் சேர்த்துக்கொள்ளலாம்.
- கைகளால் துடைக்க முடியாத பகுதிகளை துடைக்க பெயிண்ட் பிரஷ் -ஐ பயன்படுத்தலாம்.உதாரணமாக மிக்ஸி,ஜன்னல்.
Jan 23, 2017
MINT RICE- புதினா சாதம்
புதினா சாதம் என்பது மிகவும் ஆரோக்யமான ஒரு உணவு. குழந்தைகளுக்கு மதிய உணவாக பள்ளிக்கு கொடுத்தனுப்ப உகந்த ஒன்று.தினமும் குழம்பு கூட்டு என்று சலித்துப்போய் உள்ளவர்களுக்கு மிகவும் சுவையான மாறுதல் புதினா சாதம்.இன்று உங்களுக்காக...
தேவையான பொருட்கள்;
வேகவைத்த சாதம் - 1 கப்
புதினா இலை - 1கட்டு
கொத்து மல்லி இலை -ஒரு பிடி
பச்சை மிளகாய் - 5
பூண்டு பல் -10
வெங்காயம்
பொடியாக நறுக்கியது - 2
புளி - சிறிதளவு
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் -அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் -சிறிதளவு
செய்முறை;
முதலில் மிக்ஸியில் புதினா,கொத்துமல்லி, பச்சைமிளகாய் ,புளி ,பூண்டு பல் மூன்று எல்லாவற்றையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு சேர்த்து அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை,பூண்டு இரண்டையும் சேர்க்கவும். நன்கு வதங்கியதும்
அரைத்து வைத்துள்ள புதினா கலவை ,மஞ்சள்பொடி,மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும்,நன்கு வதங்கியதும் சாதத்தை சேர்த்து கிளறவும்.கடைசியாக நெய்யை ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.சுவையான புதினா சாதம் தயார்.
தேவையான பொருட்கள்;
வேகவைத்த சாதம் - 1 கப்
புதினா இலை - 1கட்டு
கொத்து மல்லி இலை -ஒரு பிடி
பச்சை மிளகாய் - 5
பூண்டு பல் -10
வெங்காயம்
பொடியாக நறுக்கியது - 2
புளி - சிறிதளவு
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் -அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் -சிறிதளவு
செய்முறை;
முதலில் மிக்ஸியில் புதினா,கொத்துமல்லி, பச்சைமிளகாய் ,புளி ,பூண்டு பல் மூன்று எல்லாவற்றையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு சேர்த்து அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை,பூண்டு இரண்டையும் சேர்க்கவும். நன்கு வதங்கியதும்
அரைத்து வைத்துள்ள புதினா கலவை ,மஞ்சள்பொடி,மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும்,நன்கு வதங்கியதும் சாதத்தை சேர்த்து கிளறவும்.கடைசியாக நெய்யை ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.சுவையான புதினா சாதம் தயார்.
Jan 21, 2017
WEIGHT LOSS DIET PLAN IN TAMIL
அதிக எடை என்பது கண்ணாடியில் நம் உடலை பார்க்கும்போது நம் மனதை பாதிக்கும் ஒரு பிரதான காரணி.இதை களைய நாம் நிறைய முயற்சி எடுத்தாலும் சில நாள்களில் நமக்கு ஏற்படும் சலிப்பு காரணமாக முயற்சியை கைவிட்டுவிடுகிறோம்.நமக்கு பிடித்த உணவுகளை தியாகம் செய்ய நம் மனம் ஒத்துக்கொள்வதில்லை.எனவே நமக்கு பிடித்த உணவுகளை அளவோடு சாப்பிட்டு நாம் உண்ணும் உணவினுடைய கலோரி அளவுகள் 1200 க்கு மிகாமல் பார்த்துக்கொண்டால் நாம் நினைத்த இலக்கை அடையலாம்.இதில் நான் தரும் குறிப்புகள் பெரும்பாலான சகோதரிகளுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் இதை பதிவிடுகிறேன்.
1.காலையில் எழுந்ததும் வெந்நீருடன் அரை மூடி எலுமிச்சை சாறு அல்லது ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு தேக்கரண்டி கலந்து குடியுங்கள்.இதில் பெரிதாக எந்த கலோரியும் கிடையாது.
2. பின்னர் ஒரு சிறிய குவளை தேநீர் அதிக சர்க்கரை இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம்.இது 40 கலோரிகள் அளவிலேயே இருக்கும்.
3.காலை சிற்றுண்டியாக நான்கு இட்லி அல்லது இரண்டு தோசை எடுக்கலாம்.இது சட்னியுடன் சேர்த்து 200-220 கலோரிகள் ஆகும்.
4.பதினோறு மணிக்கு ஒரு டீ அல்லது ஒரு கப் பழச்சாறு எடுத்துக்கொண்டால் 80 கலோரிகள் வரை வரும்.
5.மதிய உணவுக்கு ஒரு கப் அரிசி சாதமும் ,ஒரு கப் காய்கறி பொரியலும் சாம்பாருடன் எடுத்துக்கொள்ளலாம்.இதன் அளவு 350 கலோரிகள்.
6.மாலை சிற்றுண்டியாக சுண்டல் அல்லது வேகவைத்த வேர்க்கடலை அளவோடு எடுக்கலாம் . இத்துடன் சர்க்கரை இல்லாத தேநீர் 120 கலோரிகள் வரும் .
7.இரவு உணவுக்கு இரண்டு சப்பாத்தியை தயிர் பச்சடி அல்லது காய்கறி கலவையுடன் எடுத்துக்கொள்ளலாம்.இது 300 கலோரிகள்.
8.படுக்கைக்கு முன் ஒரு கப் பால் எடுக்கலாம்.இது 75 கலோரிகள்.
போதிய நடைப்பயிற்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவுமுறை என்று நீங்கள் இந்த வட்டத்திற்குள் செல்லும்போது ஒரு நாளைக்கு தோராயமாக 1200 கலோரிகள் என்ற எல்லைக்குள் நீங்கள் வரமுடியும்.இந்த வாழ்க்கை முறை உங்கள் எடையையும் கட்டுக்குள் வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது தவிர வேறு எதுவும் சாப்பிட நீங்கள் ஆசைப்பட்டால் மற்ற வகைகளை குறைத்து ஒரு நாளுக்கு 1200 கலோரிகள் மிகாமல் பார்த்துக்கொண்டாலே போதும்.உங்கள் மன உறுதி உங்கள் கைகளில் மட்டுமே.
1.காலையில் எழுந்ததும் வெந்நீருடன் அரை மூடி எலுமிச்சை சாறு அல்லது ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு தேக்கரண்டி கலந்து குடியுங்கள்.இதில் பெரிதாக எந்த கலோரியும் கிடையாது.
2. பின்னர் ஒரு சிறிய குவளை தேநீர் அதிக சர்க்கரை இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம்.இது 40 கலோரிகள் அளவிலேயே இருக்கும்.
3.காலை சிற்றுண்டியாக நான்கு இட்லி அல்லது இரண்டு தோசை எடுக்கலாம்.இது சட்னியுடன் சேர்த்து 200-220 கலோரிகள் ஆகும்.
4.பதினோறு மணிக்கு ஒரு டீ அல்லது ஒரு கப் பழச்சாறு எடுத்துக்கொண்டால் 80 கலோரிகள் வரை வரும்.
5.மதிய உணவுக்கு ஒரு கப் அரிசி சாதமும் ,ஒரு கப் காய்கறி பொரியலும் சாம்பாருடன் எடுத்துக்கொள்ளலாம்.இதன் அளவு 350 கலோரிகள்.
6.மாலை சிற்றுண்டியாக சுண்டல் அல்லது வேகவைத்த வேர்க்கடலை அளவோடு எடுக்கலாம் . இத்துடன் சர்க்கரை இல்லாத தேநீர் 120 கலோரிகள் வரும் .
7.இரவு உணவுக்கு இரண்டு சப்பாத்தியை தயிர் பச்சடி அல்லது காய்கறி கலவையுடன் எடுத்துக்கொள்ளலாம்.இது 300 கலோரிகள்.
8.படுக்கைக்கு முன் ஒரு கப் பால் எடுக்கலாம்.இது 75 கலோரிகள்.
போதிய நடைப்பயிற்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவுமுறை என்று நீங்கள் இந்த வட்டத்திற்குள் செல்லும்போது ஒரு நாளைக்கு தோராயமாக 1200 கலோரிகள் என்ற எல்லைக்குள் நீங்கள் வரமுடியும்.இந்த வாழ்க்கை முறை உங்கள் எடையையும் கட்டுக்குள் வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது தவிர வேறு எதுவும் சாப்பிட நீங்கள் ஆசைப்பட்டால் மற்ற வகைகளை குறைத்து ஒரு நாளுக்கு 1200 கலோரிகள் மிகாமல் பார்த்துக்கொண்டாலே போதும்.உங்கள் மன உறுதி உங்கள் கைகளில் மட்டுமே.
சிறு பருப்பு பாயசம்...உங்களுக்காக...
சிறு பருப்பு பாயசம் இன்று பரவலாக கிராமம்,நகரம் என்று எல்லா இடங்களிலும் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சுவைக்கப்படும் இனிப்பு வகை.ஆனால் இன்றைய இளம் தலைமுறைகள் சேமியா பாயசத்தை மட்டுமே நன்கு அறிந்திருக்கின்றனர்.அவர்களும் ஆரோக்கியமான இதன் செய்முறையை அறியவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.
தேவையான பொருட்கள்
சேமியா ; 100 கிராம்
சேமியா ; 100 கிராம்
சிறுபருப்பு ;100 கிராம்
பசும்பால் ;500 மி .லி
பசுநெய் ;50 கிராம்
பால்கோவா ;50 கிராம்
(சர்க்கரை இல்லாதது)
ஏலக்காய் ; 4
முந்திரி & திராட்சை ;சிறிதளவு
வெல்லம் ; 250 கிராம்
செய்முறை;
1.முதலில் வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் விட்டு வெல்லம் நன்கு கரையும்வரை கொதிக்க விடவும்.
2. சிறுபருப்பை வறுத்து ,பின் ஒன்றிரண்டாக உடைத்து பசும்பாலில் வேகவிடவும்.பின் அதில் சேமியாவை சேர்த்து வேகவிடவும்.
3.வேகும்போதே ஏலக்காயை தட்டி அதில் போடவும்.
4.சேமியா மற்றும் பருப்பு நன்கு வெந்ததும் பால்கோவாவை அதில் சேர்க்கவும்.(பால்கோவா சேர்க்க விரும்பாதவர்கள் பால் கொஞ்சம் அதிகப்படியாக சேர்க்கலாம்.
5.முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.
6.கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு வெல்லக்கரைசலை சேர்க்கவும்.(பால் திரிந்துவிடாமல் இருக்க அடுப்பை அணைத்தபின் மட்டுமே சேர்க்கவேண்டும்)
இப்போது நமக்கான சிறுபருப்பு பாயசம் ரெடி.இதிலுள்ள பசும்பால்,வெல்லம் ,பசுநெய்,சிறுபருப்பு எல்லாமே ஆரோக்யம் தரக்கூடியவை தான்.இதை நன்கு ஆறியபின் குடித்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
Jan 16, 2017
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கைக்கீரை.
உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் எல்லா நேரத்திலும்,எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு கீரை உண்டென்றால் அது முருங்கைக்கீரைதான்.இதில் A,B,C உயிர்சத்துக்கள் நிறைந்துள்ளன.புரதம், இரும்பு, சுண்ணாம்புச்சத்துக்கள் அதிகமாகவே உள்ளன.
பிரசவித்த பெண்கள் இந்த கீரையை தொடர்ந்து உண்டுவர பால் பெருகும்.
முருங்கைக்கீரை சாறுடன் தேன் கலந்து இரவு படுப்பதற்கு முன் சாப்பிட்டுவர வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும்.
இது கண் நோய்களை குணமாக்கும்.இரத்தத்தை சுத்தப்படுத்தும்.இந்த கீரையை நாற்பது நாட்களுக்கு நெய்விட்டு வதக்கி பொரியல் செய்து சாப்பிட்டுவர நீரிழிவு நோய் குணமாகும்.இது இரத்தத்தில் சேரும் கொழுப்பு சக்தியை குறைக்க வல்லது.இவ்வாறு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கைக்கீரையை தினமும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
ஆரோக்கியத்தை வாங்க பத்து ரூபாய் போதும் ..
"பொன்னை கொடுத்து பொன்னாங்கன்னி வாங்கு" என்று கிராமங்களில் சொல்வார்கள்.இதிலிருந்தே இதன் மதிப்பை நாம் உணரமுடிகிறது.இந்த கீரையை தொடர்ந்து நாம் உணவில் சேர்த்துவர நம் உடல் பொன் போல மின்னத்தொடங்குமாம்.இந்தக்கீரையில் இரண்டு வகைகள் உண்டு.இரண்டுமே மிகுந்த பலனை கொடுக்கக்கூடியது தான் .
இந்தக்கீரையை நாம் குழம்பு,கூட்டு,பொரியல் என்று எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.இந்தக்கீரையில் இரும்பு,புரதம்,சுண்ணாம்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த கீரையை தொடர்ந்து உண்டுவர கண்பார்வை மேம்படும்.இது உடல் உஷ்ணத்தை தணித்து சமநிலையில் வைக்கும்.
இந்த கீரையை பூண்டு சேர்த்து தொடர்ந்து உண்டுவர மூலநோய் குணமாகும்.
பொன்னாங்கன்னி கீரையை தேங்காய் எண்ணையோடு சேர்த்து காய்ச்சி தைலமாக தயாரித்து தினமும் தலைக்கு தடவிவர கண் எரிச்சல்,உடல் உஷ்ணம் குறையும்.கூந்தல் வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும்.
இது உடலுக்கு உறுதியையும்,பலத்தையும் கொடுக்கும்.இதன் சுவையும் குழந்தைகள்கூட விரும்பி உண்ணும் அளவுக்கு சுவை மிகுந்ததாக இருக்கும். எனவே சிறு வயது முதலே குழந்தைகளுக்கு இந்தக் கீரையை பழக்கப்படுத்தி ஆரோக்கியத்தோடு வளர்க்கலாம்.
HOW TO READ TAMIL FONT IN YOUR MOBILE BROWSER- தமிழில் ....
பெரும்பாலான மொபைல்களில் தமிழ் மொழியில் தேடுதல் நிகழ்த்துவது என்பது கடினம்.ஏனெனில் ஆங்கிலம் தவிர மற்ற எழுத்துத்துக்கள் சிறிய கட்டங்களாகவே திரையில் தெரியும். அவ்வாறான சூழ்நிலைகளில் திரையில் தோன்றும் வாக்கியங்களை நாம் படித்து தெரிந்துகொள்ள நம்முடைய mobil -ல் சில மாற்றங்களை செய்யவேண்டியது அவசியம்.
முதலில் play store க்கு சென்று opera mini browser -ஐ பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.பின்னர் அதனை திறந்து அதன் address bar -இல் opera :config என்று டைப் செய்து ok கொடுக்கவும்.
அப்போது உங்கள் screen இல் தோன்றும் மெனுவின் கீழ்ப்பகுதிக்கு சென்றால் use bitmap fonts for complex scripts என்று இருக்கும் இடத்தில் no என்று இருக்கும்.அதை yes என்று மாற்றுங்கள்.
அவ்வளவுதான்..இப்போது நீங்கள் ஓபரா மினி பிரௌசரில் உங்கள் மொழியிலேயே உலாவரலாம் .
Jan 13, 2017
HOW TO MAKE STILL VIDEO WITH FEW SIMPLE STEPS- IN TAMIL
இன்றைய காலகட்டத்தில் நம்முடைய எல்லா சந்தேகங்களுக்கும் விடை தேடக்கூடிய தளங்களில் கூகுளுக்கு அடுத்தபடியாக யூ டியூப் அமைந்துள்ளது.சமையல் முதல் சாக்ரடீஸ் வரை அத்தனை சந்தேகங்களுக்கும் இந்த தளம் வழிகாட்டுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த யூ டியூப் தளத்தில் நாமும் ஏதாவது ஸ்டில் வீடியோ போடவேண்டும் என்று பலரும் ஆசைப்படுவர்.ஆனால் ஸ்டில் வீடியோ தயாரிப்பது எப்படி என்று பலருக்கும் தெரியாது.நம்மிடம் ஏற்கனவே வீடியோ இருந்தால் அதை நம்முடைய ஜிமெயில் கணக்கு மூலம் நாம் பதிவேற்றிவிடலாம்.ஆனால் போட்டோ ஸ்டில்களின் மூலம் வீடியோ தயாரிப்பது என்பது ஆரம்பத்தில் கொஞ்சம் சிக்கலான வேலையாகத்தான் தெரியும்.எனவேதான் இந்த பதிவில் நம்முடைய மொபைல் போன் மூலமே எளிமையான முறையில் ஸ்டில் வீடியோ தயாரிப்பது எப்படி என்று இங்கு பதிவிடுகிறேன் .
- முதலில் நீங்கள் சொல்லவிரும்பும் விஷயத்தை உங்கள் மொபைல் போனில் உள்ள வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் பேசி பதிவு செய்து கொள்ளுங்கள்.
- பின்னர் அந்த குரல் பதிவுக்கு தேவையான புகைப்படங்களை உங்கள் போனில் சேமித்துக்கொள்ளுங்கள் .உங்களுக்கு தேவையான புகைப்படங்கள் கூகுள் இமேஜ் -ல் கிடைக்கும்.
- பின்னர் கூகுள் play ஸ்டோர் க்கு சென்று video show என்ற app ஐ டவுன்லோட் பண்ணுங்கள்.
- பின்னர் அந்த ஆப் -ஐ ஓபன் பண்ணினால் video edit என்று இருக்கும்.அதை கிளிக் பண்ணுங்கள்.
- அங்கு உங்களுக்கு தேவையான புகைப்படங்களை தேர்ந்தெடுத்து start - ஐ சொடுக்குங்கள்.
- அங்கு duration -ஐ கிளிக் பண்ணி நீங்கள் எவ்வளவு நேரம் வாய்ஸ் ரெகார்ட் பண்ணினீர்களோ (see point number -1)அவ்வளவு நேரத்தை செட் பண்ணுங்கள்.இது உங்கள் வாய்ஸ்- ஐயும் வீடியவையும் மிக்ஸ் பண்ணும்போது ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை களையும்.
- பின்னர் music என்பதை கிளிக் பண்ணி நீங்கள் முன்னமே பேசி வைத்த வாய்ஸ்-ஐ சேருங்கள்.
Jan 12, 2017
முதுமையை விரட்ட திரிபலா மட்டும் போதும் ...
திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய் ,தான்றிக்காய் ஆகிய மூன்று பொருள்களின் கலவை ஆகும்.இது சூரணமாகவும், சாறு வகையாகவும் ,கேப்ஸுல் வகையிலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள்.அவ்வாறான குறைவற்ற செல்வத்தை பெற இந்த திரிபலா நமக்கு பயன்படுகிறது.
- இது நம் இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- அஜீரண கோளாறை சரிசெய்கிறது.
- மலச்சிக்கலை நீக்குகிறது.
- கல்லீரல்,நுரையீரலை பாதுகாக்கிறது.
- ஆஸ்துமா, மஞ்சள்காமாலை போன்றவற்றிற்கு இது சிறந்த மருந்து.
- உடலிலுள்ள கொழுப்பு,கெட்டநீர் இவைகளை இயற்கை கழிவுகளாக இது வெளியேற்றும்.
- உடல் எடையை குறைக்கும்.
- இளமையை தக்கவைக்கும்.
- தோல் பளபளப்பு ,கண் கூர்மையை ஏற்படுத்தும்.
- இதிலுள்ள தான்றிக்காயின் பனி உடல் வெப்பத்தை குறைத்து முடி பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதுதான்.
- புண்களை கழுவ இதை பயன்படுத்தலாம்.
- ஈறுகளில் இரத்தக்கசிவு ,வாய் துர்நாற்றம் ,பல் சொத்தை போன்றவற்றிர்க்கு இதை பல்பொடியாக பயன்படுத்தலாம்.
- இது புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேட்டிஸ் (metastatis ) வளரும் அபாயத்தை குறைப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
இதை காலை எழுந்ததும் வெறும் வயிற்றிலோ அல்லது இரவு படுக்க போகும் முன்போ ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் இரண்டு தேக்கரண்டி கலந்து குடித்து வரவேண்டும்.அடிக்கடி கழிவுகள் ஏற்பட்டால் பயம் கொள்ள தேவையில்லை.
சர்க்கரை வியாதியை விரட்டுங்க.. நிரந்தரமாக..
இன்று அதிகப்படியான மக்கள் நீரிழிவு நோய் காரணமாக பலவிதமான பின்விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.இதை தவிர்க்க நாம் இரத்தத்தலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.சிலர் மருந்து மாத்திரை என்று தவறாமல் எடுத்துவந்தாலும் திடீரென ஒருநாள் இரத்தப்பரிசோதனை செய்யும்போது இரத்தத்தின்அளவு உச்சத்தில் இருக்கும்.
இதனால் மனதில் ஒரு சோர்வு வந்து உட்கார்ந்துகொள்ளும். இதனை தவிர்க்க இயற்கை மருத்துவமே சிறந்த வழி.இயற்கை மருத்துவத்தால் மட்டுமே நாம் நிரந்தர பலனை பெறமுடியும்.அந்த வகையில் நான் உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்த விரும்பிய அற்புதமான ஒரு பானம் கரேலா ஜாமூன்( karela jamun) . கரேலா என்பதற்கு பாகற்காய் என்று அர்த்தம்.ஜாமூன் என்பது நாவல்பழம்.அதாவது பாகற்காய் மற்றும் நாவல்பழம் இரண்டிலிருந்தும் எடுக்கப்பட்ட அற்புத பானம் தான் இந்த கரேலா ஜாமூன்.
முதலில் உங்கள் இரத்தத்தலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.இது வித்யாசத்தை அறிந்துகொள்ள உதவும்.
பின்னர் தினமும் காலை ,மாலை இரு வேளையும் உணவுக்கு முன்னதாக ஒரு குவளை நீருடன் 30மிலி கரேலா ஜாமூன் கலந்து குடியுங்கள்.உணவு கட்டுப்பாட்டுடன் இதை நீங்கள் தொடர்ந்து உட்கொண்டு வாருங்கள்.15நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை இரத்த பரிசோதனை செய்து முந்தைய பரிசோதனை முடிவோடு ஒப்பிட்டு பாருங்கள்.நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.
தொடர்ந்து இதை நீங்கள் உட்கொண்டு வரும்போது ஒருசில மாதங்களில் நீங்கள் உங்கள் நீரிழிவு நோய் மருந்துகளை கூட விட்டுவிடலாம்.இது என் உறவுகளின் அனுபவத்தில் கிடைத்த உண்மை.எனவே எல்லோரும் பயன்படுத்தி பயன்பெறுங்கள். கரேலா ஜாமூன் எல்லா சித்த மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்.
Jan 10, 2017
மீன் எண்ணெய் மாத்திரை - ஒரு பார்வை
பெரிய வகை மீன்களை நாம் உணவுக்காக எடுத்துக்கொள்வதில்லை.ஆனால் பெரிய வகை மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரைகளை அதன் பலவித பலன்களுக்காக தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.இது வைட்டமின் மாத்திரைகளாக எல்லா மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்.
மீன் எண்ணெய் மாத்திரைகள் உடலில் கெட்ட கொழுப்புகள் தேங்காமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது இதிலுள்ள EPA எனும் நோய் எதிர்ப்பு பொருள் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.மூட்டுவலிகளை சரி செய்ய உதவுகிறது.
பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் இடுப்பு வலிகளை சரி செய்கிறது.பற்று நோயை எதிர்த்து போராடும் குணம் கொண்டது.கர்ப்பினிகள் இதை சாப்பிட்டுவர வயிற்றிலுள்ள குழந்தைக்கு கண்பார்வை,மூளைவளர்ச்சி பலப்படும்.
Jan 9, 2017
6 PROVEN HEALTH BENEFITS OF APPLE CIDER VINEGAR -IN TAMIL
நமது வட்டாரத்தை பொறுத்தவரை இதன் பயன்கள் பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது.எனவேதான் எல்லோரும் பயன்படும் வகையில் இதை பதிவிடுகிறேன்.இதை அளவோடு பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
1.தலையில் பொடுகு தொல்லை அதிகமுள்ளவர்கள் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீர் இரண்டையும் சம அளவு கலந்து தலையில் தேய்த்து ஒருமணி நேரம் கழிந்ததும் குளிக்கவும்.வாரத்திற்கு இரண்டு முறைஇவ்வாறு செய்ய பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
2.உலர்ந்த தலைமுடி உள்ளவர்கள் தலைக்கு ஷாம்பூ போட்ட குளித்தபின் இரண்டு மூடி ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு குவளை தண்ணீரில் கலந்து கடைசியாக தலையில் ஊற்றி அலசிவிட்டஉ வரவும்.இவ்வாறு செய்வதால் உங்கள் முடி மிகவும் மிருதுவாக மாறும்.
2.உலர்ந்த தலைமுடி உள்ளவர்கள் தலைக்கு ஷாம்பூ போட்ட குளித்தபின் இரண்டு மூடி ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு குவளை தண்ணீரில் கலந்து கடைசியாக தலையில் ஊற்றி அலசிவிட்டஉ வரவும்.இவ்வாறு செய்வதால் உங்கள் முடி மிகவும் மிருதுவாக மாறும்.
3.தினமும் காலாயில் எழுந்ததும் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர், ஒரு தேக்கரண்டி தேன் இரண்டையும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடித்துவர உங்கள் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.
4.தோலில் அறிப்பு, ஒவ்வாமை ஏற்பட்டால் சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில் நனைத்து அந்த இடத்தில் தடவிவர உங்கள் பிரச்சனைகள் மாறும்.
5.ஆப்பிள் சீடர் வினிகரை நீருடன் கலந்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் மறைந்து பற்கள் வெண்மை பெறும்.
6. இஞ்சி சாறு,பூண்டு சாறு, எலுமிச்சை சாறு, தேன்,ஆப்பிள் சீடர் வினிகர் ஐந்தையும் சமஅளவு கலந்து இளம் சூட்டில் கொதிக்கவைத்து லேகிய பதத்தில் எடுத்துக்கொண்டு தினமும் காலை,மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவர இரத்தக்குழாயில் படிந்துள்ள எப்படிப்பட்ட கொழுப்பும் கரையும்.
Jan 6, 2017
How to find unwanted phone call's owner info
இன்றைய காலகட்டத்தில் நமக்கு தேவையில்லாத பல தொலைபேசி அழைப்புகள் வந்து நம்மை சங்கடப்படுத்தும்.அதை நாம் அலட்சியமாக விட்டாலும் நம்மை தொலைபேசியில் அழைத்தது யார் என்று தெரிந்துகொள்வது நாம் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க உதவும்.அதற்கான சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

1. True caller: ஆண்ட்ராய்டு மொபைலிலிருந்து play store க்கு சென்று ட்ரு காலர் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். பின் அதன் உள்ளே சென்று உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து ஆக்டிவேட் பண்ணுங்கள்.
பிறகு search என்ற பகுதியை தேர்ந்தெடுங்கள்.இப்போது நீங்கள் தேடவேண்டிய நம்பரை பதிவிட்டால் அந்த நம்பருக்கு உரியவரின் பெயர் மற்றும் ஊர் தெரியும்.
2.அந்த முறை உங்களுக்கு கை கொடுக்கவில்லை என்றால் இரண்டாவதாக நீங்கள் தேடவேண்டிய நம்பரை உங்கள் மொபைலில் சேமி(save)யுங்கள்.பிறகு உங்கள் WhatsApp செயலிக்கு சென்று refresh கொடுங்கள்.இப்போது அந்த நபர் WhatsApp ல் இருந்தால் அவருடைய புகைப்படத்துடன் உங்களுக்கு தெரியவரும்.
3.அந்த முறையும் உங்களுக்கு கை கொடுக்கவில்லை என்றால் மூன்றாவதாக உங்கள் முகநூல்(Facebook)பக்கத்திற்கு செல்லுங்கள்.அங்கே search பகுதியில் அந்த நம்பரை பதிவிட்டு தேடுங்கள்.அந்த நம்பருக்கு உரியவர் அந்த நம்பரில் முகநூல் கணக்கு வைத்திருந்தால் அவருடைய பக்கம் உங்களுக்கு தெரியவரும்.
Jan 5, 2017
How to write tamil font in Android mobile
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலின் settings பகுதிக்கு சென்று language&input ஐ தேர்ந்தெடுக்கவும்.
2.பிறகு keyboard input method ஐ தேர்ந்தெடுக்கவும்.
3.இப்போது language ஐ க்ளிக் பண்ணினால் வரிசையாக உங்கள் மொபைலில் உள்ள மொழிகளின் வரிசை இருக்கும்.அதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது உங்கள் மொபைல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் டைப் பண்ணுவதற்கு தயாராகிவிட்டது.சிலவகை மொபைல்களில் இந்த வழிமுறைகள் மாறுபடலாம்..
Jan 1, 2017
How to use BHIM app for money transaction... in tamil.
2.பிறகு செயலியின் உள் சென்றால் நான்குஇலக்க எண்ணை (pass code)பதிவு செய்ய கட்டளையிடும்.
3. நான்கு இலக்க எண்ணை பதிவு செய்த பிறகு மீண்டும் ஒரு முறை அதே எண்ணை பதிவு செய்ய வேண்டிவரும்.
4.பின் உங்கள் மொபைலில் நீங்கள் வங்கியோடு இணைத்துள்ள உங்கள் செல்பேசி எண்ணை தேர்ந்தெடுக்கவும் .
5.அடுத்ததாக உங்கள் வங்கியை தேர்ந்தெடுக்கவும்
அவ்வளவுதான்.உங்கள் பண பரிமாற்றத்திற்காக BHIM தயாராகிவிட்டது.இப்போது பண பரிமாற்றத்திற்கான முகவரி அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்தி உங்கள் உறவினர்கள் ,நண்பர்கள்,மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்பலாம்..பெறலாம்.
அதிகபட்சமாக 20000 ரூபாய் வரை மட்டுமே ஒரு நாளுக்கு அனுப்ப இயலும்.
தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இச்செயலி செயல்படுகிறது.














































