இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Feb 1, 2017

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி..?

 சுறா புட்டுக்கு மயங்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு அசைவ பிரியர்களை கட்டி போட்டு சுவையால் சுண்டி இழுக்கும் மோகினி தான் இந்த சுறா புட்டு.தொடர்ந்து படியுங்கள்.மறவாமல் செய்துபாருங்கள்.


தேவையான பொருட்கள்

சுறா மீன்                                  -250 கிராம்
வெங்காயம்                            -3
பச்சை மிளகாய்                     -5
பூண்டு                                       -2
இஞ்சி பூண்டு விழுது           -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                           -அரை தேக்கரண்டி
மிளகு தூள்                              -2 தேக்கரண்டி
உப்பு                                          - தேவையான அளவு
எண்ணெய்                              -தேவையான அளவு
பட்டை,சோம்பு                      -சிறிதளவு
கறிவேப்பிலை                      -சிறிதளவு

செய்முறை 

சுறா மீனை சுத்தம் செய்து மீன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் மற்றும் சிறிது மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வேகவிடவும்.பின்னர் நீரை வடிகட்டி தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு உதிர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு,பட்டை இரண்டையும் சேர்க்கவும்.

அடுத்து வெங்காயம் கறிவேப்பிலை,பச்சைமிளகாய் மூன்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கி உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை சேர்க்கவும்.மீண்டும் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு உதிரியாக வரும்வரை கிளறவும்.இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.தேவைப்பட்டால் கொத்துமல்லி தழையை போட்டு கிளறி பரிமாறலாம்.சுவையான சுறா புட்டு தயார்.


No comments:

Post a Comment