இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Dec 28, 2016

HOW TO STOP HEAVY MENSTRUAL BLEEDING

                               

                                        Image result for over bleeding during periods

இன்று பெரும்பாலான பெண்களுக்கு பெரும்பாடு எனும் அதிக உதிரப்போக்கு ஏற்படுகிறது .பதினைந்து இருபது நாட்கள் கூட உதிரப்போக்கு நிற்காமல் அவதியுறுகின்றனர்.அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நாம் மருத்துவ ரீதியாக காரணங்கள் அறிந்து சிகிச்சை பெறுவதற்கு முன்பாக உதிரப்போக்கை உடனடியாக நிறுத்த வேண்டியது அவசியம்.அதற்கு ஒரு எளிமையான வழி தான் ஆடாதொடா குடிநீர்.

                                              Image result for adathoda

ஒரு பாத்திரத்தில் இரண்டு குவளை நீர் எடுத்து அதனோடு ஐந்து ஆடாதொடா இலையையும் சேர்த்து ஒரு குவளையாக வற்றும்வரை கொதிக்க விடவும்.இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.இதே போல் ஒரு நாளுக்கு மூன்று முறை குடிக்கலாம்.இது கொஞ்சம் கசப்பு சுவையுடன் இருக்கும் .இவ்வாறு குடித்து வரும்போது உங்களின் அதிகப்படியான உதிரப்போக்கு படிப்படியாக குறைவதை காணலாம்.இதை உங்கள் உறவுகளோடும் பகிருங்கள்.பயன்பெறட்டும்.

Dec 17, 2016

How to create menu bar with 10 simple steps in Blogger( in Tamil)

புதிதாக பிளாகர் தொடங்குபவர்களுக்காக இந்த பதிவு .
நம் பிளாகரில் நாம் பதிவேற்றும் பதிவுகள் அனைத்தும் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக  நீளமாக தோன்றும் .அவ்வாறு இல்லாமல் தனித்தனி மெனு பார்களின் (menu bar) கீழ் நம் பதிவுகளை கொண்டு வந்தால் தேடுவதற்கு சுலபமாக இருக்கும் .
அதற்கான வழிமுறைகளை தேடுபொறியில்(search engine ) தேடும்போது பல வழிமுறைகள் இதை வெட்டுங்கள் .. இதை ஒட்டுங்கள்.. என்று இருக்கும் .புதியவர்களுக்கு  இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.எனவே வெட்டவும் வேண்டாம் .. ஒட்டவும் வேண்டாம் . கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள். உங்கள் பிளாகரை அழகாக்குங்கள்.

                     Image result for blogger editing
                                                                             
1.முதலில் உங்கள் பதிவுகளுக்கு lable உருவாக்குங்கள்.அதற்கு உங்கள் பதிவுகளின் கீழே உள்ள edit ஐ க்ளிகபண்ணினால் வலது புறம் lable என்று இருக்கும்.அங்கு சென்று உங்கள் பதிவுக்கு பொருத்தமான lable ஐ டைப் பண்ணுங்கள்.(உதாரணமாக என்னுடைய lable ஹெல்த்,குக்கிங்,டிப்ஸ்,பியூட்டி.என்று நான்கு வகைகளாக உள்ளன)
பிறகு கீழே உள்ள done பட்டனை click பண்ணுங்கள்.நாம் எத்தனை lable உருவாக்குகிறோமோ அத்தனை மெனு பார்களை உருவாக்கலாம்.
2.இப்போது உங்கள் பிளாகர் பக்கத்துக்கு சென்று பார்த்தால் உங்கள் பதிவின் கீழே நீங்கள் உருவாக்கிய lable பெயர் இருப்பதை பார்க்கலாம்.
3.இப்போது உங்கள் lable பெயரை click பண்ணுங்கள்.மேலே உள்ள web address ஐ copy பண்ணுங்கள்.
4.இந்த வேலைகள் முடிந்த பிறகு உங்கள் பிளாகரின் layout பகுதிக்கு வாருங்கள்.layout ஐ க்ளிக் பண்ணினால் Header gadget kku கீழே உள்ள cross colomn ல் Add a gadgetஐ க்ளிக் பண்ணவும்.
5.இப்போது தோன்றும் விண்டோவில் pages ஐ செலக்ட் பண்ணுங்கள்.
6.Add external link ஐ க்ளிக் பண்ணுங்கள்.
Image result for blogger editing add external link
7.page title என்ற இடத்தில் நீங்கள் வைக்க விரும்பும் menu bar ன் பெயரை டைப் பண்ணுங்கள்.
8.web address என்ற இடத்தில் நீங்கள் காப்பி(copy) செய்து வைத்திருக்கும் web address ஐ(point 3) paste பண்ணுங்கள்.
                                          Image result for blogger editing  page title and web address
9.இவ்வாறு நீங்கள் எத்தனை menu உருவாக்கப்போகிறீர்களோ அத்தனைக்கும் செய்ய வேண்டும்.
10.பின்பு done பட்டனை அழுத்துங்கள்.
இப்போது உங்கள் பிளாகரை சென்று பார்த்தால் நீங்கள் உருவாக்கிய menu bar ல் உங்கள் பதிவுகள்  அனைத்தும் lable வாரியாக பதிவிடப்பட்டிருக்கும்.

Dec 16, 2016

கேன்சரா...? கவலைப்படாதீங்க.. இதை படிங்க முதல்ல... Stop Cancer

நம் பகைவர்களுக்கு கூட வரக்கூடாத நோய் ஒன்று உண்டு என்றால் அது கேன்சர் தான்.அத்தகைய கொடிய நோய் கண்டவர்களுக்கு மருந்தோடு அன்பும் ஆதரவும் அதிகம் தேவை.கேன்சர் நோய் கண்டவர்கள் கருப்பு திராட்சையை விதையோடு தின்று வரவேண்டும். ஏனெனில் இதன் விதை கேன்சர் செல்களை 48மணி நேரத்தில் அழிக்க ஆரம்பிக்கிறது.
மேலும் இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்தபுற்றுநோயை(Blood Cancer) முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக
மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....

                                    Image result for cancer

அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet"
ஆகும்
இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள
கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக
வழங்கப்படுகிறது.....
அணுக வேண்டிய முகவரி :----
Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.
PHONE:---------
044 -24910754
044 -24911526
044 -22350241
இந்த தகவல் பலருக்கும் பயன்படும் என்பதால் இங்கே பதிவிடுகிறேன்.நீங்களும் பிறருக்கு உதவலாமே....

அழகாய் எடை குறைக்கலாம் வாங்க.. natural tips for weight loss

உடல் எடை குறைக்க முயற்சிக்கும் முன் எடை அதிகரித்ததற்கான காரணத்தை ஆராய்ந்து அறியவேண்டும்.ஐந்து நாளில் பத்து கிலோ குறைக்கலாம் என்று வாயால் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களை தெரிந்துகொண்டு நீங்கள் முழு முயற்சி எடுத்தால் மட்டுமே அதிகப்படியான எடையை குறைக்க முடியும்.
                                    Image result for weight loss

1.உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும் பட்சத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று அதற்கான மருந்துகளை உட்கொள்ளவேண்டும்.ஏனெனில் தைராய்டு பிரச்சனை இருக்கும்போது எடை குறைப்பு முயற்சிகள் பலனளிக்காது.
2.தினமும் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை என்றாலும் பத்துக்கு பத்து இடத்தில் எட்டு போடுவது போல் அரைமணி நேரம் நடந்து பழகுங்கள்.இது மிகவும் சிறப்பான முறை.
3.காலை உணவாக பல்வேறு தானியக்கலவைகள் சேர்த்து அரைக்கப்பட்ட சத்து மாவு கஞ்சியும்,ஒரு அவித்த முட்டையும் எடுத்து வாருங்கள்.வேறு எதுவும் தேவையில்லை .
4.மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகவும் உங்கள் வழக்கமான உணவுகள் குறைவாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

                                         Image result for weight loss


5.நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக பழங்கள் மற்றும் கடலை மிட்டாய்,எள்ளுருண்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ள பழகுங்கள்.
6.தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடியுங்கள்.இது உங்கள் இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பை கொஞ்சம் கொஞ்சமாக கரைக்க உதவும்.
7.மனதை தளர்வாக வைத்துக்கொள்ள பழகுங்கள்.
8.எப்போதும் வெதுவெதுப்பான நீரையே குடித்து பழகுங்கள்.
இவ்வாறு நீங்கள் செய்து பழகும்போது திடீரென உங்கள் எடை குறையாமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உங்கள் ஆயுள் காலம் முழுவதுமே நீங்கள் அழகாய் இருப்பீர்கள்.

Dec 9, 2016

Clear your underarm darkness

gram flour and lemon for dark underarms~
4 Gram flour paste is a great natural remedy, it works like a magic too!
You have to mix gram flour with lemon juice, turmeric and curd and prepare a paste. You have to apply the paste three times a week for 2 months. You have to apply and rub the paste first, and then let it dry for next 20 minutes.

                                             under arm க்கான பட முடிவு

Then, you should rinse the skin with cool water and wash it away.
You should apply the mixture before taking shower. After that, you should apply baking soda on the underarm skin instead of the deodorant and see the magic.

Dec 8, 2016

அழகு குறிப்புகள் (Beauty tips)

சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம்
பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன்
பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம்
மிருதுவாகும்.
* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக
மாறும்.
* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால்
ஏற்படும் கருமை நிறம் மாறும்.
* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி,
ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி
செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி
மறையும்.
தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால்
ஏற்பட்ட வடு மறையும்.
* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச்
சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,
கரும்புள்ளி ஆகியவை மறையும்.
* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம்
பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன்
கிடைக்கும்.
* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய்
எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து
தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை
நிறம் மறையும்.
தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும்
கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ
வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.
* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு
மறைந்து விடும்.

                                      Image result for beauty girl
* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி
சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில்
கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு
நிறப் புள்ளி மறையும்.
* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும்
எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை
அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து
முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.
* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ
வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின்
முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்
மறையும்.
கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10
சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து
பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி
கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.
* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து
முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக
இருக்கும்.
* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி,
தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி,
வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து,
எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில்
வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின்
வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில்,
தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி
கருமையாகும், பொடுகு நீங்கும்.
* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம்.
பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை
உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட
வேண்டும்.
புருவங்களை சீர்திருத்தி கொண்டால் முகம் அழகாக இருக்கும். மிக மெல்லிய
புருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக அடர்த்தியான புருவம் வைத்துக்
கொள்வதும் தற்போது நாகரிகம் இல்லை.
*நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில்
தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
*லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள் இளம் வண்ணங்களையும்,
பருமனான உதடு உடையவர்கள் ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப் படுத்த வேண்டும்.

Online income (இணையத்தில் சம்பாதிப்பது எப்படி)

கூகுள் நிறுவனத்தின் Adsense, Adword போன்ற வசதிகள் மூலம், இணையத்தில் வருமானம் பெற முடியும்.
நம் வெப்சைட்டில் பிற நிறுவனங்களின் விளம்பரங்களைப் போடுவதற்கு அனுமதி கொடுத்து, அதுக்கு அவர்களிடம் இருந்து கட்டணத்தைப் பெறுவது ஒரு வகையான வியாபார உத்தி. இதுக்கு நாம்தான் மார்கெட்டிங் செய்ய வேண்டும். வெப்சைட்களில் விளம்பரங்கள் ஆங்காங்கே வெளிவந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை இந்த வகையைச் சேர்ந்தவை.
மற்றோர் உத்தி, நம் வெப்சைட்டின் சில பகுதிகளை அப்படியே கூகுளுக்கு வாடகைக்கு விட்டுவிட்டால், அவர்கள் அந்த இடங்களில் விளம்பரங்களை வெளியிட்டுக்கொள்வார்கள். நமக்கு அதுக்கான வாடகையும் கொடுப்பார்கள்.
கூகுள் மூலம் வெளிவரும் விளம்பரங்களில் Ads by Google, AdChoices, AdWords என்ற இணைப்பு வார்த்தைகள் இருப்பதைக் கவனியுங்கள். இதற்கு நீங்கள் மார்க்கெட்டிங் செய்ய வேண்டாம். கூகுள் அவற்றைப் பார்த்துக்கொள்ளும். உங்கள் சார்பில் மார்க்கெட்டிங் செய்து, விளம்பரம் பெற்று, அவற்றை உங்கள் வெப்சைட்டில் வெளியிட்டு, கட்டணமும் கொடுக்கும்.

தங்கமே தங்கம் Gold is Gold

உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை வியாபாரமேயாகும். முதலாவது மோசடி என்னவென்றால் கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும். நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது. நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்
கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள். அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை. இரண்டாவது மோசடி: சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது. 916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது. மூன்றாவது மோசடி: தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் தயார் செய்வதற்கான கூலியாகும்.
                                       Image result for gold

 ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை. ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு *சேதாரம்* என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள். நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது. நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை. அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான். ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு தங்கத்தின் மீது வைத்துள்ள மோகத்தை குறைப்பதுதான்.

Dec 7, 2016

மீன் ஊறுகாய் செய்வது எப்படி? Easy way to make fish pickle

தேவையான பொருட்கள்
மீன் (முள் நீக்கியது) – 1 கிலோ
இஞ்சி – 125 கிராம்
பூண்டு – 125 கிராம்
கடுகு – 60 கிராம்
மஞ்சள் பொடி – 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை – 1 கோப்பை
வினிகர் – 400 கிராம்
மிளகாய் வற்றல் – 60 கிராம்
சீரகம் – 35 கிராம்
உப்பு – 2 மேஜைக்கரண்டி
கடலை எண்ணெய் – 1/2 கிலோ
மிளகாய்தூள் – 1 மேஜைக்கரண்டி

                                         Image result for fish pickles

செய்முறை
1. மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக்
கொள்ளவும்.
2. உப்பு, மிளகாய்த்தூள் தடவி 1 மணிநேரம் ஊர
வைக்கவும்.
3. எண்ணெயை நன்றாக சூடாக்கி மீன்
துண்டுகளை பொறித்தெடுக்கவும்.
4. இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம்,
கடுகு ஆகியவற்றை விழுதாக அரைத்துக்
கொள்ளவும்.
5. எண்ணெயை சூடாக்கி அரைத்த
மசாலாவை நன்றாக வதக்கவும்.
6. மீன், வினிகர்,
சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து எண்ணெய்
பிரியும் வரை சமைக்கவும்.
மீன் ஊறுகாய் தயார்.

புற்றுநோய்க்கு மாங்காய் இஞ்சி Mango Ginger Vs Cancer

புற்றுநோயின் நிவாரணத்திற்க்க
ு மாங்காய் இஞ்சி
பார்ப்பதற்கு இஞ்சியின் சாயலிலும், வாசனையில் மாங்காயின் மணத்தையும் கொண்டது மாங்காய் இஞ்சி. அதனால்தான் அதற்கு இப்படியொரு வித்தியாசமான பெயர்.மாங்காய் இஞ்சி, மஞ்சள் குடும்பத்தை சார்ந்தது. இது இந்தியாவில் குறிப்பாக குஜராத், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அதிகம் விளைகிறது.
மாங்காய் இஞ்சி என ஒன்று இருப்பதே பலருக்கும் தெரியாது. அதைப் பலரும் வாழ்நாளில் சுவைத்திருக்கவும் மாட்டார்கள். இஞ்சியா என முகம் சுளிப்பவர்களும், இஞ்சி தின்ன குரங்கு பழமொழியை நினைத்துக் கொள்கிறவர்களும், தைரியமாக மாங்காய் இஞ்சியை சுவைக்கலாம். அதன் மணமும் சுவையும் யாருக்கும் பிடிக்கும்..
என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)
மாங்காய் இஞ்சியில் கலோரி மிகக் குறைவு. இதில் நார்ச்சத்து மட்டும் அதிகமாக இருக்கிறது. முழுக்க முழுக்க மருந்தாக பயன்படுகிறது.
கலோரி 53 கிலோ கலோரிகள்
புரதம் 1.1 கிராம்
நார்ச்சத்து 1.3 கிராம்
கொழுப்பு 0.7 கிராம்
கால்சியம் 25 மி.கி.
இரும்புச் சத்து 2.6 மி.கி.
மஞ்சள், இஞ்சி போல் மாங்காய் இஞ்சியும் சிறந்த மருத்துவப் பயனைக் கொண்டது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல நோய்களை குணப்படுத்த இதை பயன்படுத்துகின்றனர். சரும நோய்களைக் குணப்படுத்தவும், இருமல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தவும், ஜுரம், விக்கல், காது வலி போன்ற நோய்களை குணப்படுத்தவும் ஆயுர்வேதத்தில் மாங்காய் இஞ்சி பயன்படுகிறது.
மாங்காய் இஞ்சியின் மருத்துவப் பயன்கள்
வயிறு சம்பந்தமான பிரச்னைகளையும், வாயுத் தொல்லையையும் சரியாக்குகிறது. ஜீரணத்தை அதிகப்படுத்துதல், பசியைத் தூண்டுதல் போன்றவற்றிற்கு மாங்காய் இஞ்சி பயன்படுகிறது.
நுரையீரல் மற்றும் ஆஸ்துமா, இருமல் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்த பயன்படுகிறது.
புற்றுநோயை குணப்படுத்துவதிலும் மஞ்சளைப் போல ஆன்டி-ஆக்ஸிடென்ட் ஆக பயன்படுகிறது. கேரட், பீட்ரூட் இவற்றுடன் புதினா, மாங்காய் இஞ்சி கலந்து செய்யும் ஜூஸ் புற்றுநோயைக் குணப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

                       Image result for mangai inji

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூஞ்சை நோய்களை குணப்படுத்த சரும மருத்துவத்தில் பயன்படுகிறது. சருமத்தில் ஏற்படும் காயம் மற்றும் அரிப்பை குணப்படுத்த இதன் சாறு பயன்படுகிறது.
உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் தசை வலியைக் குறைக்க மாங்காய் இஞ்சி கலந்த தேநீர் பயன்படுகிறது. சமையலில் மாங்காய் சீசன் இல்லாத நேரங்களில் மாங்காய் இஞ்சி பயன் படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் முக்கியமாக ஊறுகாய் செய்யப் பயன்படுகிறது.உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்பதால், ஊறுகாய்க்குப் பதிலாக மாங்காய் இஞ்சியை எலுமிச்சைச்சாறுடன் பயன்படுத்தலாம்.

எட்டு போட கத்துக்கோங்க.... Eight makes good Health

வீட்டிலேயே காற்றோட்டமும் , வெளிச்சமும் இருக்கும் இடமாக தேர்வு செய்து ஆறு அடி விட்டமுள்ள இரு வட்டங்களை ஒன்றை ஒன்று தொட்டிருக்கும் படியாக எட்டு வடிவில் (8) தரையில் வரைந்து கொள்ள வேண்டும். வாய்ப்பு இருந்தால் அந்த பாதையில் கூழங்கற்களை பதிக்கலாம்.
பாதையில் செய்யும் நடைப்பயிற்சியில் கவன சிதறல் இருக்கும். மற்றவர்கள் மீதும். வாகனங்கள் மீதும் கவனம் போகும். நம்மோடு பாதையில் நடைப்பயிற்சி செய்பவர்கள் இருந்தால் அவர்களோடு பேசுவது, டீ காபி குடிப்பது என்று பல இடையூறுகள் வரும்.ஆனால் இந்த எட்டு வடிவ நடை பயிற்சியில் அவ்வாறான கவனச் சிதறல்கள் இடையூறுகள் இருக்காது.

                                      Image result for 8 walking
எட்டு நடைப்பயிற்சி தொடர்ந்து முப்பது நிமிடங்கள் செய்வதால் முதலில் நல்ல தூக்கம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் காலடி எடுத்து வைக்கும் போதும் உடல் கொஞ்சம் திருப்பம் அடைகிறது. உடலின் எல்லாப் பகுதிகளும் சமமான அசைவுக்கு உட்படுகின்றன. 72000 நரம்புகளும் வலுப்பெறும்.
சுவாசம் தொடர்பான கோளாறுகள் உடலில் இருந்து வெளியேறும். மனமும், சுவாசமும் சீரடைவதால் ரத்த ஓட்டமும் சீராக நடைபெறும். பாதங்களும், கால்களும் பலம் பெறும். சர்க்கரை நோயாளி, அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மருந்தே இல்லாமல் இந்த நடை பயின்றால் வியாதியின் சுவடே இல்லாமல் குணமாகும். எட்டு நடை மிகச் சிறந்த நோய் நிவாரணி. தினசரி இந்த பயிற்சி செய்வதால் அதிக தொல்லைகள் தரும் வியாதிகள் நம் உடலை விட்டு வெளியேறும்.

கருஞ்சீரக ஜுஸ் BLOCK CUMIN JUICE

இயற்கை தன்னுள் இத்தகைய பல பொருள்களை உள்ளடக்கியுள்ளது. மனிதர்கள் காலங்காலமாக அவற்றைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஆனால், அலோபதி மருத்துவமுறையின் பிரவேசம் அத்தகைய இயற்கை வைத்தியமுறைகளை பின்தள்ளியுள்ளத
ு. இப்போது சிறிது சிறிதாக மனிதர்கள் இயற்கை முறையிலான வைத்தியத்தின் சிறப்பை உணர ஆரம்பித்து பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர். இந்த எளிய கருஞ்சீரக ஜீஸ் பல நோய்களை குணப்படுத்தும்
தண்ணீர் - 3/4 கப்
எலுமிச்சை நீர் - 1 ஸ்பூன்
பட்டை பொடி - 1/4 ஸ்பூன்
கருஞ்சீரக எண்ணை(Black seed oil) - 5 சொட்டு
தேன் - 1 ஸ்பூன்


                                                      Image result for karunjeeragam                               
மேற்கண்ட அனைத்தையும் கலந்து காலை வெறும் வயிற்றிலும் மாலை இரவு உணவுக்கு பின்னும் அருந்தவும்.
எண்ணிலடங்காத நோய்களை உடலிலிருந்து விரட்டும் தன்மை கொண்டது.தினமும் தவறாமல் எடுத்து வர உடல் இளைக்கும்,பலம் பெறும். இறப்பை தவிற அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி கருஞ்சீரகத்திற்கு உண்டு என்பது இஸ்லாமியர்களின் தூதர் முஹம்மத் நபியவர்களின் கூற்று.
மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் கூடிய ஆற்றல் கருஞ்சீரக எண்ணெய்க்கு உண்டு. அரை டீஸ்பூன் எண்ணயை எடுத்து அதே அளவுள்ள தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
உடலுக்கு நோய் வந்துவிட்டால், நோயைக் கட்டுப்படுத்த கருஞ்சீரக எண்ணெய் மிகவும் உதவும், நோய்க்கு ஏற்றாற்போல் வெந்நீர், பால், பழச்சாறு ஆகியவற்றுடன் இந்த எண்ணெய்யை கலந்து சாப்பிட்டால் நோய் கட்டுக்குள் வந்துவிடும். இந்த எண்ணெய்யை ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
                                                                     
வலி நிவாரணி, கிருமிநாசினி; அழற்சி, குடற்புண், பூஞ்சை ஆகியவற்றை எதிர்க்கின்றது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது, வலிப்பை குறைக்கின்றது, வைரஸ் கிருமிகளை எதிர்க்கின்றது, நுறையீரல் அடைப்பைப் போக்கவல்லது.
கல்லீரலைப் பாதுகாக்கின்றது, நீரிழிவை எதிர்க்கின்றது, சிறுநீரகத்தைப் பாதுகாக்கின்றது, புற்றுநோய்க்கான காரணிகளைத் தடுக்கும் சக்தியுடையது.
தோல் நோய்களை குறைக்கும்.
பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும்.