இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Feb 4, 2017

பெண்ணே உனக்காக....

நாகரீக வளர்ச்சியின் காரணமாக நமது வாழ்க்கை முறையில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.அதில் ஒன்று தான் சானிடரி நாப்கின்கள்.பண்டைய காலத்தில் பெண்கள் துணிகளையே பயன்படுத்தி வந்தனர்.ஆனால் அதிலுள்ள பராமரிப்பு சிக்கல் காரணமாக எல்லோரும் சானிடரி நாப்கின்கள் உபயோகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே உண்மை.இன்று அதிகம் விற்பனையாகும் பொருட்களில் இதுவும் ஒன்று.அனால் இதை முறையாக பயன்படுத்தாத போது  அவ்வளவு பாதுகாப்பானது  அல்ல  என்பதும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக உள்ளது.

சானிட்டரி நாப்கின்கள் உற்பத்தியில் செலவை குறைப்பதற்காக பெரும்பாலும் மறுசுழற்சி பொருட்களாலேயே தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது .பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள் மற்றும் ரசாயனங்களால் தயாரிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.இதில் ஈரத்தை உறிஞ்ச பயன்படுத்தப்படும் ரசாயனமான HEXACLORODIBENZOFURAN(HXCDF) கருமுட்டை உற்பத்தி திறனை குறைக்கக்கூடியவை. எல்லா பாதிப்புகளையும் அறிந்திருந்தாலும் அதை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் நம் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எச்சரிக்கையோடு உபயோகிப்பது நல்லது.

  • முழுவதும் நனையும்வரை காத்திருக்காமல்அடிக்கடி நாப்கின்களை மாற்றி வருவது நோய் தொற்று உருவாவதை தடுக்கும்.
  • வாசனை சேர்க்கப்பட்ட நாப்கின்களை தேர்ந்தெடுக்காமல் மேற்பகுதி பருத்தியினாலான நாப்கின்களை தேர்ந்தெடுங்கள்.
  • நாப்கின்களை உபயோகப்படுத்திய பின்பு பாதுகாப்பான முறையில் உரையிலிட்டு அப்புறப்படுத்தும் முறையை பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.
  • அப்புறப்படுத்திய பின்பு கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்யுங்கள்.
  • பிள்ளைகள் வெளியே செல்லும்போது பையில் நாப்கின்கள் கொடுத்து அனுப்பினால் அதை அப்புறப்படுத்தவும் தேவையான கவர்களை கொடுத்தனுப்புங்கள்.இது பொது இடங்களை அசுத்தப்படுத்துவதிலிருந்து தடுக்கும்.




No comments:

Post a Comment