நம் எல்லோர் வீட்டிலும் அத்துமீறி ஆக்கிரமித்திருக்கும் ஒரு தவிர்க்க முடியாத நபர் நம் டீவியார் தான்.அதுவும் பெண்களை தன் அடிமைகளாகவே மாற்றிவிட்டது இந்த டீவி நிகழ்ச்சிகள்.காலை எழுந்ததும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பரபரப்பில் இருக்கும் தாய்மார்கள் ஒரு பக்கம் என்றால் அத்தனை பரபரப்பிலும் தொலைக்காட்சியின் மீதும் கண் வைத்துள்ள தாய்மார்கள் இன்னொரு பக்கம்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் "பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்ப டைம் மிஸ் ஆயிடக்கூடாது" என்பதுதான்.
அடுத்து பிள்ளைகள் பள்ளிக்கு போய்விடுவார்கள்.கணவரும் அலுவலகத்துக்கு கிளம்பிவிடுவார்.இனி ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் ஒவ்வொரு குடும்பமாக வந்து சீரியல் என்ற பெயரில் ஒப்பாரி வைத்துவிட்டு போவார்கள்.அல்லது தங்கள் சதி திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு போவார்கள்.இதையும் விட்டால் அடுத்தவள் புருஷனை ஆட்டை போடுவது எப்படி என்று செயல்முறை வகுப்பு எடுத்துவிட்டு போவார்கள்.இதை தவிர வேறு எதுவும் இன்றைய சீரியல்களில் கிடையாது.இந்த அவலங்கள் தொடர்கதைகளாக ஒரு வருடம்..இரண்டு வருடம் என்று நீண்டுகொண்டே இருக்கும்.
ஒரு நாளைக்கு அரை மணிநேரம் என்றால் ஒரு மாதத்திற்கு பதினைந்து மணி நேரம் செலவிடுகிறோம்.இதுவே ஒரு வருடத்திற்கு என்றால் நூற்று எண்பது மணி நேரம் செலவாகிறது.அதிர்ச்சி ஆகாதீங்க .இது ஒரே ஒரு சீரியல் கணக்குதான்.நம்ம சகோ.க்கள் குறைந்தது ஐந்து சீரியல் பார்ப்பவர் என்றால் இந்த கணக்கு ஒரு வருடத்திற்கு தொள்ளாயிரம் மணி நேரங்கள் ஆகும்.தலையை சுற்றுகிறதா..?பெண்களால் இந்த தொள்ளாயிரம் மணி நேரத்தில் என்னவெல்லாம் செய்யமுடியும்.அவர் தையல் தெரிந்தவராக இருந்தால் ஒரு மணிக்கு ஒரு பிளவுஸ் என்ற வீதத்தில் தைக்கும் பொது குறைத்து எழுபத்தைந்து ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.அவர் அடிப்படை கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பின் பத்து அல்லது பதினைந்து பேருக்கு டியூஷன் எடுப்பதிலிருந்து தொண்ணூறு ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் வரை ஈட்ட முடியும்.இப்படி அவரவர் அறிவுக்கு தக்கதாக என்ன தெரியுமோ அதை வீட்டிலிருந்தே செய்யலாம்.டீவி பார்ப்பது தவறல்ல. மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதுதான் தவறு.எனவேதான் மறுபடியும் சீரியஸா சொல்றேன் சீரியல் வேண்டாம் என்று..

No comments:
Post a Comment