சிக்கன் பொடிமாஸ் என்பது புரோட்டீன் நிறைந்த உணவு.இது செய்வதற்கும் மிக எளிமையானது.குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இதன் செய்முறைகளை தொடர்ந்து பார்ப்போமா...
தேவையான பொருட்கள் ;
கோழி இறைச்சி -250 கிராம்.(எலும்பு இல்லாதது)
முட்டை -5
வெங்காயம் -2
தக்காளி -1
பச்சைமிளகாய் -4
மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
மிளகுத்தூள் -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் -அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
கறிவேப்பிலை,கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை;
கோழியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக கொத்துக்கறி போல் எடுத்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.நன்கு உதிரியாக வந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு,பட்டை தாளித்து சிறிதாக நறுக்கி வைத்த வெங்காயம் ,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.நன்கு வாசனை வந்ததும் தக்காளி சேர்க்கவும்.
பின்னர் கோழி இறைச்சியை சேர்த்து நன்கு வதக்கவும். நிலையில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள்,உப்பு சேர்க்கவும்.கோழி நன்கு வெந்து மசாலாவுடன் நன்கு கலந்து உதிரியாக வரும்வரை இளம் சூட்டில் கிளறவேண்டும்.இறுதியாக மிளகுத்தூள்,கொத்துமல்லி,பொறித்துவைத்த முட்டை அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.சுவையான சிக்கன் பொடிமாஸ் தயார்.
- சிறு குழந்தைகளுக்கு சாதத்தில் கொஞ்சம் இந்த பொடிமாஸை கலந்து மெதுவாக கிளறி கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.லஞ்ச் பாக்ஸ் க்கும் தயார் பண்ணி கொடுக்கலாம்.
- பரோட்டா செய்யும்போது பரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக பொடித்து அதனுடன் இந்த பொடிமாஸை சேர்த்து கிளறினால் சுவையான சிக்கன் கொத்து பரோட்டா தயார்.
- மைதா மாவு பிசைந்து பூரி அளவுக்கு தேய்த்து அதனுள் இந்த பொடிமாஸை வைத்து உருளையாக உருட்டி எண்ணையில் இட்டு எடுத்தால் சுவையான சிக்கன் ரோல் தயார்.
- உருவத்தை மாற்றி சமோசாவாகவும் போட்டு எடுக்கலாம்.
- தோசையின் மேல் இதனை பரப்பி பரிமாறினால் சுவையான சிக்கன் மசால் தோசை தயார்.

No comments:
Post a Comment