கேக் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.ஆனால் கேக்கை பேக்கரியில் மட்டுமே வாங்கி சுவைக்கும் நமக்கு வீட்டிலேயே நம் கையால் செய்து சுவைக்கும் கலை தெரிந்தால் சும்மா இருப்போமா..? வாங்க போகலாம்..நம்ம சமயலறைக்கு...
தேவையான பொருட்கள்;
மைதா -250 கிராம்
சீனி -250 கிராம்
முட்டை -3
வெண்ணெய் -50 கிராம்
பேகிங் சோடா -அரை தேக்கரண்டி
கோக்கோ பவுடர் -2 தேக்கரண்டி
செய்முறை;
முதலில் மைதா,பொடித்த சீனி,கோக்கோ பவுடர்,பேகிங் சோடா ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும்.பின் அதனுடன் முட்டையை சேர்த்து அடிக்கவும்.நன்கு நுரைத்து வெண்ணெய் போல வரும்.பின்னர் சலித்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அடிக்கவும்.
பின்னர் கேக் பேனில் பட்டர் தடவி மைதாவை தூவவும்.அதில் அடித்து வைத்துள்ள மாவை ஊற்றி அழுத்தாமல் சமன் செய்யவும்.
பிறகு குக்கரை அடுப்பில் வைத்து மணலை குக்கரில் இரண்டு இன்ச் உயரத்துக்கு பரப்பவும்.பின்னர் மணலின் மேல் கேக் பாத்திரத்தை வைத்து விசில் போடாமல் மிதமான தீயில் வைக்கவும்.25 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.இப்போது கேக் பாத்திரத்தை எடுத்து அகலமான தட்டில் மெதுவாக கவிழ்த்தால் உங்கள் குக்கர் கேக் தயார். தேவைப்பட்டால் முந்திரி,பாதாம் போன்றவற்றை குக்கர் மூடும் முன் மாவில் தூவி அழகுபடுத்தலாம்.

No comments:
Post a Comment