சிறுநீரிலுள்ள உப்புக்கள் ஒன்று திரண்டு சிறு சிறு கற்களாக உருவாகின்றன.இவை காலப்போக்கில் தடிமனாகி சிறுநீரோடு வெளியே வர தள்ளப்படும்போது அதன் கூரிய முனைகளால் சிறுநீர்ப்பாதை கிழிக்கப்பட்டு இரத்தம் வெளியேறுகிறது. 5 மி.மீ க்கு குறைவான அளவில் உள்ள கற்கள் சிறுநீரோடு வெளியே வந்துவிடும். 8 மி.மீ.அளவிலான கற்கள் சிறுநீரோடு வெளியே வர 80% வரை வாய்ப்புண்டு.ஆனால் 1 செ .மீ.க்கு மேல் அளவுள்ள கற்கள் சிறுநீரோடு வெளியேற வாய்ப்புகள் மிக குறைவு.இந்த அளவானது அபாயகரமானதும் கூட.சிறுநீர் கழிக்கும்போது வலி,எரிச்சல்,இரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.சில உணவுப்பழக்கவழக்கமுறைக்கு நாம் நம்மை மாற்றிக்கொள்வதன் மூலம் இந்த உபாதைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.
- பார்லி கஞ்சியை உட்கொள்வதன் மூலம் அதிக சிறுநீர் பிரிதல் ஏற்பட்டு கற்கள் உருவாவதை தடுக்கலாம்.
- அகத்திக்கீரை,உப்பு,சீரகம் இவை மூன்றையும் வேகவைத்து அந்த தண்ணீரை குடித்தால் கற்கள் கறையத்தொடங்கும்.
- முள்ளங்கி சாறும் சிறுநீர் உற்பத்தியை பெருக்கும் .
- புதினா,பரங்கிக்காய்,சுரைக்காய் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- தினமும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது சிறுநீரக கல் அபாயத்தை குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் கொண்டுவரும்.
- வெள்ளரிப்பிஞ்சு,எலுமிச்சை சாறு,வாழைத்தண்டு சாறு போன்றவற்றையும் அதிகஅளவில் உணவில் சேர்க்கவேண்டும்.
- சிறுநீரகக்கற்கள் பிரச்சனையை சந்தித்தவர்கள் வெயிலில் அதிகம் செல்வதை குறைத்துக்கொள்ளவேண்டும்.
- கோழி,மீன் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஆட்டிறைச்சியை உணவில் தவிர்க்கவேண்டும்.
- கொத்துமல்லி இலைகளை சாறு எடுத்து தொடர்ந்து குடித்துவர சிறுநீரகக்கற்கள் மறையத்தொடங்கும்.
- பீன்ஸ் -ஐ வேகவைத்து அரைத்து அந்த சாறையும் தொடர்ந்து குடித்துவர சிறுநீரகக்கற்கள் மறையும்.


No comments:
Post a Comment