கொள்ளு என்பது உடலுக்கு உறுதியை தரக்கூடியது.உடலிலுள்ள கொழுப்பை கரைக்கக்கூடியது.அதனால்தான்
" இளைத்தவனுக்கு எள்ளு.. கொழுத்தவனுக்கு கொள்ளு" என்று முன்னோர்கள் சொல்லிவைத்தனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த கொள்ளில் சுவையான சூப் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
" இளைத்தவனுக்கு எள்ளு.. கொழுத்தவனுக்கு கொள்ளு" என்று முன்னோர்கள் சொல்லிவைத்தனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த கொள்ளில் சுவையான சூப் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தேவையான பொருட்கள் ;
கொள்ளு -2 பிடி (ஒரு நபருக்கு ஒரு பிடி)
வெங்காயம் -1
தக்காளி - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லி -சிறிதளவு
பூண்டு -5 பல்
சோள மாவு - 1 தேக்கரண்டி
மிளகு -2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -2 தேக்கரண்டி
கரம் மசாலா போடி - இரண்டு சிட்டிகை
செய்முறை;
முதலில் கொள்ளை கழுவிவிட்டு தண்ணீரில் குறைந்தது 2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.பின்னர் குக்கரில் கொள்ளு,தக்காளி இரண்டையும் போட்டு நன்கு வேகவைக்கவும்.வெந்தபின் நன்கு ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு அதனோடு பூண்டு,மிளகு,சீரகம்,மஞ்சள்பொடி சேர்த்து நன்கு அரைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலையை போட்டு நன்கு வதக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள கொள்ளு கலவையை போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் அடிபிடிக்காமல் வதக்கவும்.பின்னர் சோள மாவை தண்ணீரில் கரைத்து வதங்கிக்கொண்டிருக்கும் கொள்ளு கலவையோடு சேர்த்து,தேவையான அளவு உப்பு , தண்ணீர் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.நன்கு கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை தூவி இறக்கி பரிமாறவும்
இதை பரிமாறும்போது மேலே CORN FLAKES தூவி பரிமாறவும். இதில் பூண்டு,மிளகு,சீரகம் இவற்றை பச்சையாக அரைத்து சேர்ப்பதால் வாசனை பத்திய ரசம் போல தூக்கலாகவே இருக்கும்.சுவையும் அமோகமாக இருக்கும்.முயற்சித்துத்தான் பாருங்களேன்.

No comments:
Post a Comment