இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Feb 28, 2017

அளவில்லா வருமானம் தரும் அப்ளிகேஷன் உருவாக்கம்.

 இருபது வருடங்களுக்கு முன்பு எல்லோருக்கும்  இந்திய அஞ்சல்துறை மட்டுமே தகவல் தொடர்பு சாதனமாக இருந்தது.ஒருவர் வெளியூர் செல்கிறார் என்றால் அவர் அந்த ஊரை அடைந்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஒரு கடிதம் எழுதுவார்.நான் நலமாக வந்து சேர்ந்தேன்,கவலை வேண்டாம் என்ற வாசகத்தை சுமந்துகொண்டு அந்த கடிதம் அவர் வீட்டை அடைய நான்கைந்து நாள் ஆகும்.இது ஒருவகை என்றால் ட்ரங்க் கால் போட்டு பேசுவது இன்னொரு வகை.ஒரு தெருவில் ஒரு சிலரிடம் மட்டுமே டெலிபோன் இணைப்பு இருக்கும்.அதுவும் உள்ளூர் தொடர்பு வசதி மட்டும் கொண்டதாகவே இருக்கும்.நாம் STD அழைப்பு மேற்கொள்ளவேண்டுமென்றால் இரவு வரை காத்திருக்க வேண்டும்.ஏனெனில் இரவு 7 மணிக்கு மேல் 50 சதவீதம் கட்டண கழிப்பில் பேசலாம்.இரவு வந்ததும் உள்ளூர்  தொலைத்தொடர்பு அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு நாம் பேச  வேண்டிய எண்ணை கொடுத்து "இந்த நம்பருக்கு இணைப்பு கொடுங்கள் "என்று சொன்னால் அவர் நமது அழைப்பை துண்டித்துவிட்டு சிலமணி நேரங்கள் கழித்து மீண்டும் நம்மை தொடர்புகொண்டு "நீங்கள் பேசவேண்டிய எண்ணுக்கு இணைக்கிறோம் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டு இணைப்பை கொடுப்பார் .அவர் கொடுக்கும் அந்த இணைப்பிற்காக சிலமணிநேரங்கள் டெலிபோன் அருகிலேயே காத்திருந்த அனுபவம் 1990 களில் அனைவருக்கும் உண்டு.இதையும் விட்டால் பொது தொலைபேசி இணைப்பகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பேசவேண்டிய எண்ணுக்கு பேசலாம்.

சரி ... இதெல்லாம் எதற்கு ?இன்றைய நிலைமையை பார்க்கலாம் என்றால் நம் கண்ணுக்கு முன்னால் கலர் கலராக தெரிகிறது அல்லவா ..அவைதான் ஆப்ஸ் எனப்படும் மொபைல் அப்ளிகேஷன்ஸ்.ஆமாம்.இப்போது எல்லோர் கைகளிலும் எல்லா நேரங்களிலும் ஸ்மார்ட் போன்கள் மூலமாக ஆப்ஸ் -கள் நம்மை நோக்கி கண்சிமிட்டிகொண்டேதான் இருக்கின்றன.ஒவ்வொரு சிமிட்டல்களிலும் எதோ ஒரு தகவலை ஒவ்வொரு ஆப்ஸ் -ம் நமக்கு தந்துகொண்டே இருக்கின்றன.நமக்கு தேவையானதா ...தேவையில்லாததா ..என்றெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை.காலையில் நம்மை எழுப்பிவிட  ஒரு  அப்ளிகேஷன் என்றால் நாம் சாப்பிட வேண்டியதை பட்டியலிட இன்னொரு ஆப்ஸ்.அரட்டைக்கு whatsapp..விளையாட temple run.. இசைக்கு la musique..அழைப்பவர் பற்றிய தகவலை ஆராய true caller..  டிஜிட்டல் தகவல் பரிமாற்றத்திற்கு share it..பண பரிமாற்றத்திற்கு BHIM..அழகான புகைப்படத்திற்கு youcam perfect ..புகைப்படத்தை அழகாக்க youcsm makeup..வீடியோ எடிட்டிங்-குக்கு ஒரு video show..இப்படி நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் நாம் ஆப்ஸ்களையே அண்டி வாழ்கிறோம்.

இப்படி எதிர்கால உலகமே ஆப்ஸ்களை நம்பி இருப்பதால் இதையே தொழிலாக கொண்டு புதுப்புது அப்ளிகேஷன்களை வடிமைப்பதில் ஆர்வத்தை கொண்டு வந்தால் குறைவில்லா வருமானத்தை எளிதாக பெறலாம்.இதை சொல்லி தருவதற்கென்றே நிறைய பயிற்சி நிலையங்கள் உள்ளன.சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் இந்த பயிற்சியை நிறைவுசெய்துவிடலாம்.சென்னை ஐஐடி -யும் இலவசமாக இந்த பயிற்சியை அளித்துவருகிறது.ஆன்லைன் மூலமாக இந்த பயிற்சிக்கு விண்ணப்பித்தால் உங்கள் மெயிலுக்கு பயிற்சிக்கான பாடங்கள் அனுப்பிவைப்பார்கள்.பயிற்சிகாலம் முடிந்ததும் தேர்வுக்கட்டணம் மற்றும் சான்றிதழ் கட்டணம் மட்டும் செலுத்தி ஆன்லைன் தேர்வை எதிர்கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு பதிவுசெய்யவேண்டிய இணைய முகவரி
www.imad.tech
இது தவிர பல ஆன்லைன் வலைதளங்கள் மூலமாகவும் கட்டணம் செலுத்தி இந்த பயிற்சியை நாம் பெறமுடியும்.

 

MUTTON THALAIKARI MASAALA

தேவையான பொருட்கள்;
தலை கறி                       - அரை கிலோ 
சின்ன வெங்காயம்      - 100 கிராம் 
தக்காளி                           - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
பச்சை மிளகாய்            -3
மிளகாய் பொடி             - 1 கால் தேக்கரண்டி 
மஞ்சள் தூள்                  -கால் தேக்கரண்டி 
மிளகு தூள்                     - ஒரு தேக்கரண்டி 
கரம் மசாலா பொடி      - கால் தேக்கரண்டி 
சோம்பு                             -சிறிதளவு 
உப்பு                                  - தேவையான அளவு 
எண்ணெய்                      - தேவையான அளவு.
கொத்துமல்லி                - சிறிதளவு



செய்முறை ;
  • முதலில் தலைக்கறியை நன்கு நீர்விட்டு நான்கைந்துமுறை கழுவவேண்டும்.பின் ஒரு குக்கரில் கறியை போட்டு சிறிதளவு மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு ,வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது,தக்காளி,பச்சைமிளகாய்  போன்றவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
  • பின்பு மிளகாய்  பொடி,மஞ்சள் தூள்,கரம் மசாலா பொடி போன்றவற்றை சேர்த்து வேகவைத்துள்ள தலைக்கறியை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து  கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் நன்கு வற்றி வரும்போது மிளகுப்பொடியை சேர்த்து கிளறி கொத்துமல்லியை தூவி இறக்கவும்.இது சாம்பார் சாதம்,சப்பாத்தி போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.சாதத்தில் அப்படியே பிசைந்தும் சாப்பிடலாம் 



HOW TO INCREASE JIO SPEED AFTER 1GB DATA LIMIT.. - IN TAMIL

கடந்த ஐந்து மாத காலமாக இணையத்தில் வலம் வருபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்டது ஜியோ என்ற ஒற்றை மந்திரம்தான்.வரம்பில்லா 4G இலவச சேவையை அளித்துவந்த ஜியோ கடந்த ஜனவரியிலிருந்து 1GB மட்டும் 4G இலவச சேவையை அளித்து வருகிறது.அந்த வரம்பிற்கு பிறகு வேகம் குறைந்த இலவச இணையத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம்.இரவு இரண்டுமணியிலிருந்து ஐந்து மணி வரை அளவில்லா 4G சேவையை பெறலாம்.இந்த நிலையில் நம்முடைய 1GB அளவிலான 4G சேவை அதிக பயன்பாட்டால் தீர்ந்துவிட்டால் உடனடியாக மீண்டும் 4G சேவையை  தொடர சில வழிமுறை தந்திரங்களை  பின்பற்றினால் போதும்.மீண்டும் 4G உலகிலேயே வலம்வரலாம். முதலில்  உங்கள் MY JIO APP -க்கு சென்று உங்கள் 4G பயன்பாடு எவ்வளவு மீதம் இருக்கிறது என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.உங்கள் 1GB அளவு முடிந்துவிட்டால் அல்லது முடிய இன்னும் சில MB அளவுகளே மீதம் இருக்கிறது என்றால் தாராளமாக இந்த வழிமுறைக்குள் நீங்கள் செல்லலாம் .



  • முதலில் உங்கள்  மொபைல் டேட்டாவை  நிறுத்தி வையுங்கள்.
  • பிறகு உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று  DATE & TIME -ஐ செலக்ட் பண்ணுங்கள்.
  • அதிலுள்ள AUTOMATIC DATE & TIME -ஐ நிறுத்துங்கள்.
  • இப்போது அதற்கு கீழ் உள்ள SET DATE என்ற இடத்தில இன்றைய தினத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு நாளுக்கு பிறகு வரும் தேதியை செட் பண்ணுங்கள்.உதாரணமாக இன்றைய தேதி ஒன்று என்றால் உங்கள் மொபைலில் மூன்று என்ற தேதியை நீங்கள் பதிவு செய்யலாம்..
  • இப்போது மீண்டும் உங்கள் மொபைல் டேட்டாவை ON பண்ணுங்கள்.
  • மீண்டும் உங்கள் MY JIO APP-க்கு சென்று பார்த்தல் உங்கள் டேட்டா அளவு முழுமையாக 1GB இருப்பதை பார்ப்பீர்கள்.
அவ்வளவுதான்.இனி நீங்கள் தொடர்ந்து 4G இணைய வேகத்தில் பயணிக்கலாம்.

Feb 23, 2017

எதிரியை அழிக்க வியூகம் அமைப்போம். -கருவேலமரங்கள் ஒரு பார்வை

"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" இது ஒவ்வொரு மனிதனும் உளமார சொல்லும் வாக்கு.ஆனால் வேரோடு வெட்டி ஏறி என்று உலகமே ஒரு மரத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறதென்றால் அந்த மதிப்பு மிக்க எதிரி 'கருவேல மரம்' தான்.வேலியாகவும்,விறகாகவும் பயன்படும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் 1877 ம் ஆண்டு அயல்நாட்டிலிருந்து விதை ரூபமாக நம் நாட்டுக்குள் நுழைந்த மாபெரும் பாதகன் இந்த கருவேலமரங்கள். குறிஞ்சி தவிர மற்ற நால்வகை நிலங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்  இந்த கருவேலமரங்கள் நம்முடைய சுற்றுசூழலை அழித்து நம் வாழ்வாதாரங்களை சிதைத்துக்கொண்டிருக்கிறது என்பதை அவசர அவசரமாக அனைவருக்கும் பகிரவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.எந்த வறட்சியையும் வென்று நிலத்தடி நீரை உறிஞ்சி தனக்கு அருகில் எந்த தாவரத்தையும் வளரவிடாத சர்வாதிகாரி இது.இதன் வேர்கள் ஆழமாக மட்டுமல்லாமல் பக்கவாட்டு வரிசையிலும் படர்ந்து வளர்வதால் மழை நீரையும் உறிஞ்சி பூமிக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.கருவேலமரங்கள் தானாகவே தங்கள் குடும்பத்தை பெருக்கி தன்னை சுற்றியுள்ள அத்தனை இடங்களையும் ஆக்கிரமித்துக்கொள்ளும் திறன் பெற்றவை.இதன் நஞ்சுள்ள முட்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தை அள்ளிக்கொடுக்கக்கூடியவை.இவை வளர்ந்துள்ள இடங்களில் புல் பூண்டிலிருந்து அரியவகை மூலிகை வரை எதையும் வளர விடாமல் அழிக்கும் ஆற்றல் கொண்ட அந்நிய சக்தி இது.ஆஸ்திரேலியா,ஐரோப்பா உட்பட 71 நாடுகள் இதை மிகவும் அபாயகர ஒன்றாக தடை செய்துள்ளன.கேரளா  அரசும் கருவேலமரங்களுக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளது.


விலங்குகள் இதன் விதைகளை தின்று வெளியேற்றும்போது விழுகிற இடங்களிலெல்லாம் இது முளைக்கிறது.மேலும் காற்றின் மூலமாகவும் இதன் விதைகள் பரவுகின்றன.இது சாதாரண தாவரங்களைவிட மூன்று மடங்கு   தண்ணீரை உறிஞ்சக்கூடியது.இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.கோடைகாலங்களில் பிற மரங்கள் காய்ந்தாலும்  இது பசுமையாக தழைத்து நிற்கும்.இதன் உயரம் 15 அடிக்கு மேல் வளராது என்றாலும் இதன் வேர் 60 முதல் 70 அடிவரை பூமிக்குள் ஊடுருவி செல்லும் வல்லமை பெற்றது.இந்த மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்றாவிட்டால் நிலத்தடி நீர் அழிந்து போகும்.கடும் வெப்பம் சூடேற்றும்.விலை நிலங்களும் ,கால் நடைகளும் மலடாகும்.புல், பூண்டுகள் அனைத்தும் பூண்டோடு அழிந்து போகும்.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூட  இந்த கருவேலமரங்களுக்கு எதிராக தன் வாழ்நாள் உள்ளவரை குரல்கொடுத்தார்.இன்றைய காலகட்டத்தில் வைகோ அவர்கள் கூட கருவேல மரத்திற்கு எதிராக களப்பணியில் குதித்தார்.ஆனாலும் அறியாமை விலகும் வரை இதை அழிக்க முடியாது.எனவே ஒவ்வொருவருக்கும் உணர்த்துங்கள் இதன் தீமையை.ஒவ்வொரு  ஊரிலும் ,ஒவ்வொரு தெருவிலும் கருவேல மரத்திற்கு எதிராக ஆலோசனை நடத்துங்கள்.உள்ளவர்களிடம் உதவி பெற்று இல்லாதவர்களிடம் உழைப்பை பெற்று ஒவ்வொரு இன்ச் ஆகவாவது ஒழிக்கலாம் இந்த எதிரியை.



STR=SMILE,TALK AND RAISE YOUR HANDS மாரடைப்புக்கு ஒரு முதலுதவி

."மாரடைப்பு" இந்த வார்த்தையை கேட்டாலே ஒரு வித திகில் எல்லோர் மனதையும் ஆட்கொண்டுவிடும்.உலகம் முழுதும் அதிகம் பேர் பயப்படுவது மற்றும் பாதிக்கப்படுவது இதய நோய்களால்தான்.இதயத்துக்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்தஓட்டத்தில் தடை ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.இதை கண்டறிந்து சிகிச்சை பெறாவிடில் இறுதிக்கட்டமாக இதய செயலிழப்பு ஏற்படுகிறது.மாரடைப்பு வரும்போது அதற்கான அறிகுறிகளாக நெஞ்சு,முதுகு ,இடது கை  மற்றும் தோள்பட்டைகளில் வலியை ஏற்படுத்துகிறது.மேலும் வாந்தி,மயக்கம்,தலைசுற்றல் போன்றவையையும் ஏற்படுத்துகிறது.மாரடைப்பு ஏற்படுவதை உணரும்போது முதலுதவியாக ஆஸ்பிரின் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர் ஆனால் இது முதலுதவி மட்டுமே.உடனடியாக ICU எனப்படும் அவசர சிகிச்சை பிரிவு வசதியுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்ற முடியும்.மாரடைப்பு வந்தபிறகு எவ்வளவு விரைவாக செயல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறோமோ அந்த அளவுக்கு உயிர்பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


வீட்டில் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும்போது முதலில் அவரை காற்றோட்டமான சமதளத்தில் படுக்கவைத்து அவரது நெஞ்சின் மையப்பகுதியில் இடதுகையின்  அடிப்புறத்தை வைத்து அதன் மேலே வலது கையை வைத்து நன்கு அழுத்தம்  கொடுக்கவேண்டும்.பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் உணர்வு வரும்வரை அல்லது மருத்துவ உதவி கிடைக்கும் வரை இவ்வாறு அழுத்துவதை தொடரவேண்டும்.
மேலும் மாரடைப்பு வரும்போது STR என்ற எழுத்தை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.
S =SMILE,  T=TALK,  R=RAISE BOTH ARMS
அதாவது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவர் அதை உணராமல் சமாளித்துவந்தால்  அவரை சிரிக்கச்செய்யவேண்டும்,பேச செய்யவேண்டும்,இரு கைகளையும் மேலே தூக்க செய்யவேண்டும்.இதை அவரால் சரியாக செய்யமுடியாத பட்சத்தில் அவருக்கு வந்துள்ளது மாரடைப்பு என்று கணிக்கமுடியும்.அந்த கட்டத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

இந்த மூன்று செயலையும் அவர் சரியாக செய்துவிட்டாரென்றால் மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள அவர் நாக்கை நீட்டசொல்ல வேண்டும்.அவர் நேராக நாக்கை நீட்டிவிட்டால் அவர் நலமாக உள்ளார்.அவ்வாறில்லாமல் இடம் அல்லது வலப்புறமாக சாய்த்து நீட்டினாலும் மருத்துவ உதவியை உடனே பெறவேண்டும் என்று அர்த்தம்.
இந்த பதிவு  யாரையும் பயமுறுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.இன்றைய மருத்துவ உலகில் முடியாதது எதுவும் இல்லை.மருத்துவ உதவி கிடைக்கபெறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் இப்படி சிலவிஷயங்களை நாம் அறிந்து வைத்துக்கொள்ளும்போது யாருக்கேனும் பயன்பட்டால் உதவிய திருப்தி உங்கள் அனைவருக்கும் வரும்.அதற்காகவே இந்த பதிவு.



Feb 22, 2017

கூண்டுக்கிளி சொன்ன குட்டிக்கதை

அவள் பெயர் அவள் ..ஆம் அவள்தான் அவள்.
சின்னஞ்சிறு கிளியே பாடி பெரிய,பெரிய கதைகள் சொல்லும் சரியான சுட்டி. கல்வி மீது காதல் அதிகம்.உறவுகள் ஒரு பக்கம்.நட்புகள் ஒரு பக்கம்.நாளெல்லாம் பத்தாது அவளின் கதைக்கேக்க..



 சீரோடும் சிறப்போடும் அவளை சிறைபிடித்த சந்தோஷம் வேரோடு பறித்து வேறு இடம் நட்டது.வசந்த கால மயக்கத்தில் வருடங்கள் தெரியவில்லை.கண்ணாடி காட்டிக்கொடுத்த கால மாற்றம் திடுக்கிட்டு திரும்பவைக்க எதையோ தொலைத்த வெறுமை.இத்தனை வருட பயண தூரத்தில் தொலைத்தது  எதுவும் தேடும் தொலைவில் இல்லை.கண் மூடி யோசித்ததில்  தொலைத்தது ஒன்றல்ல..இரண்டல்ல ..ஓராயிரம் மேலே.உறவும் நட்பும் ஒவ்வொரு திசைகளில்.வாய்திறந்து பேசும் வார்த்தைகளின் அசைவுகள் மட்டுமே அவளுக்கு சொந்தம்.ஆசையாய் உடுத்திய நீல சேலை நிறம் மாறி பளபளக்கும் பச்சை பட்டாய் ..இன்னும்.இன்னும் வரிசையாய் வர படபடத்த காகிதம் தட்டி எழுப்பியது.உற்றுப்பார்த்தால் உயர் கல்வி சான்றிதழ்.ஏளனமாய் கேட்டது எங்கே உன் எதிர்கால லட்சியம்?
திரும்பி சொன்னாள் .இரண்டு லட்சியங்களும்,ஒரு சந்தோஷமும் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது.லட்சியங்களுக்கு வழிகாட்டுவதும்சந்தோஷத்தை சந்தோஷப்படுத்துவதுமே என் லட்சியம்.எண்ணங்களை கூட எதிர்வாதிக்கு தெரிவிக்காத அதே பிடிவாதம்.லட்சியங்களை தொலைத்தாலும் அவள் தொலைந்துபோகவில்லை.வாழ்த்துக்கள்.


Feb 21, 2017

HOW TO CUT SAREE BLOUSE -IN TAMIL

நிறைய பேருக்கு அடிப்படை தையல் தெரிந்தாலும் அளவுகள் மற்றும் வெட்டும் முறைகள் தெரியாத காரணத்தினால் தைப்பதற்கு தயங்குவார்கள்.அவ்வாறு அடிப்படை தெரிந்தவர்களுக்கு பயனுள்ள வகையில் இதை பதிவிடுகிறேன்.உங்களுக்கு தெரிந்த அடிப்படை விஷயங்களோடு இதையும் இணைத்து உங்கள் கற்பனை வடிவத்தை நீங்கள் உங்கள் பிளவுஸ்களில் கொண்டுவர  உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

பிளவுஸ் கட்டிங் என்பது புரிந்துகொண்டவர்களுக்கு மிக எளிதான ஒன்றுதான்.அளவு பிளவுஸை வைத்து அப்படியே அளவெடுப்பது ஒரு வகை என்றால் அளவுகளை குறித்து வைத்துக்கொண்டு அந்த அளவுகளின்படி அளவெடுத்து வெட்டுவது இன்னொரு வகை.இதில் நாம் இரண்டாவது வகையைதான் பார்க்கப்போகிறோம். இதற்கு முக்கியமான அளவுகள் மொத்தம் பதிமூன்று.
1.பின் உயரம்
2.பின் அகலம்
3 முன் உயரம்
4. முன் அகலம்
5. பின்கழுத்து உயரம்
6.முன்கழுத்து உயரம்
7.கழுத்து அகலம்
8.தோள்பட்டை அகலம்
9.அக்குள் உயரம்
10.கை நீளம்
11. கை சுற்றளவு
12. பெல்ட் அகலம்
13. பெல்ட் உயரம்.

பிளவுஸ் பின்புறம் ;
முதலில் துணியை இரண்டாக மடித்து மடிப்புப்பகுதி நம்மை நோக்கி இருக்குமாறு வைத்துக்கொள்ளவும்.இப்போது நாம் எடுத்துள்ள துணி ஒரு மீட்டர் என்றால் ஒரு மீட்டர் உயரத்துக்கு இரண்டாய் மடிக்கப்பட்ட துணி நம்முன் இருக்கும்.
இப்போது துணியின்  கீழ்ப்பகுதியில்   பின் உயரம் ,பின் அகலம் இரண்டையும் குறித்து இணைத்தால் ஒரு செவ்வக வடிவம் கிடைக்கும்.செவ்வகத்தின் மேல் பகுதியில் மடிப்பு பக்கமாக கழுத்து அகலத்தை குறிக்கவேண்டும்.பின் கழுத்து உயரத்தை குறித்து இரு புள்ளிகளையும் இணைத்தால் படத்தில் உள்ள 1 என்ற செவ்வகம் கிடைக்கும்.பிறகு அதனுள்ளே கழுத்து வடிவத்தை வளைத்து வரைந்துகொள்ளவேண்டும்.

பிறகு தோள்பட்டை அகலத்தை 1 என்ற புள்ளியில் தொடங்கி குறித்தால்
2 என்ற புள்ளி கிடைக்கும்.அந்த புள்ளியிலிருந்து நேர் கீழே அக்குள் அளவை குறித்தால் 2 என்ற செவ்வகம் கிடைக்கும்.அதனுள்ளும் வளைத்து வரைந்துகொள்ளவேண்டும்.
அடுத்து இடுப்பு பகுதியில் ஒரு இன்ச் அளவுக்கு சாய்வாக குறித்து 2-ஐ இணைத்தால் நமது பிளவுசின் பின் பக்கம் தயார்.

பிளவுஸ் முன்புறம் ;
நாம் பின்புறத்திற்கு செய்தது போலவே முன் பக்கத்துக்கும் கழுத்து ,கை வளைவுகளை வரைந்து குறித்துக்கொள்ளலாம்.ஆனால் கைக்கு மட்டும் வெட்டிய பிறகு அரை இன்ச் அளவுக்கு கூடுதலாக மீண்டும் குடைந்து வெட்டிக்கொள்ளவேண்டும்.
மேலும் முன்பக்க உயரத்தை தோள்பட்டையிலிருந்து நேர் கீழாக அளவெடுத்து பெல்ட் வரை குறித்துக்கொண்டு C1,C2 வை மாதிரியாக கொண்டு வளைத்து வரைந்து வெட்டிக்கொள்ளலாம்.பெல்ட் வெட்டிய பிறகு அதையே அளவு வைத்து தடிமனான துணியில் வெட்டி எடுத்துக்கொண்டால் பெல்டின் உள்பக்கத்துக்கு வைத்துக்கொள்ளலாம்.இப்போது பிளவுசின் முன் பக்கமும் தயார்.

பிளவுசின் கை பகுதி ;



பிளவுஸ் கை வெட்டும்போது துணியை நான்காக மடிக்கவேண்டும் .ஒரு கைக்கு இரண்டாக என்றால் இரண்டு கைக்கு நான்கு தானே..
கையின் நீளம் மற்றும் சுற்றளவு குறித்த பிறகு A யிலிருந்து B ஐ வரைந்து .கொள்ளவேண்டும். B என்பது A யில் மூன்றில் ஒரு பங்கு.கையிலும் C2பகுதியில் ஒரு இன்ச் குறைத்து குறித்துக்கொண்டு B யோடு இணைத்து சாய்வாக வெட்டவேண்டும்.அடுத்து  படம் இரண்டில் உள்ளதுபோல கையின் முன்பக்க பகுதியில் குடைந்து வெட்டிக்கொள்ளுங்கள்.இப்போது கை பகுதியும் தயார்.
பின்பு பட்டன் பட்டிக்காக 2 இன்ச் அகலமுள்ள இரண்டு பீஸ்களை வெட்டிக்கொள்ளலாம்.கழுத்துக்கும் கிராஸ் பீஸ்களை வெட்டி இணைத்து வைத்துக்கொள்ளலாம்.



Feb 20, 2017

சீரியஸா சொல்றேன் ..சீரியல் வேண்டாம்.

நம் எல்லோர் வீட்டிலும் அத்துமீறி ஆக்கிரமித்திருக்கும் ஒரு தவிர்க்க முடியாத நபர் நம் டீவியார் தான்.அதுவும் பெண்களை தன் அடிமைகளாகவே மாற்றிவிட்டது இந்த டீவி நிகழ்ச்சிகள்.காலை எழுந்ததும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பரபரப்பில் இருக்கும் தாய்மார்கள் ஒரு பக்கம் என்றால் அத்தனை பரபரப்பிலும் தொலைக்காட்சியின் மீதும் கண் வைத்துள்ள தாய்மார்கள் இன்னொரு பக்கம்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் "பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்ப டைம் மிஸ் ஆயிடக்கூடாது" என்பதுதான்.


அடுத்து பிள்ளைகள் பள்ளிக்கு போய்விடுவார்கள்.கணவரும் அலுவலகத்துக்கு கிளம்பிவிடுவார்.இனி ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் ஒவ்வொரு குடும்பமாக வந்து சீரியல் என்ற பெயரில் ஒப்பாரி வைத்துவிட்டு போவார்கள்.அல்லது தங்கள் சதி திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு போவார்கள்.இதையும் விட்டால் அடுத்தவள் புருஷனை ஆட்டை போடுவது எப்படி என்று செயல்முறை வகுப்பு எடுத்துவிட்டு போவார்கள்.இதை தவிர வேறு எதுவும் இன்றைய சீரியல்களில் கிடையாது.இந்த அவலங்கள் தொடர்கதைகளாக ஒரு வருடம்..இரண்டு வருடம் என்று நீண்டுகொண்டே இருக்கும்.


ஒரு நாளைக்கு அரை மணிநேரம் என்றால் ஒரு மாதத்திற்கு பதினைந்து மணி நேரம் செலவிடுகிறோம்.இதுவே ஒரு வருடத்திற்கு என்றால் நூற்று எண்பது மணி நேரம் செலவாகிறது.அதிர்ச்சி ஆகாதீங்க .இது ஒரே ஒரு சீரியல் கணக்குதான்.நம்ம சகோ.க்கள் குறைந்தது ஐந்து சீரியல் பார்ப்பவர் என்றால் இந்த கணக்கு ஒரு வருடத்திற்கு தொள்ளாயிரம் மணி நேரங்கள் ஆகும்.தலையை சுற்றுகிறதா..?பெண்களால் இந்த தொள்ளாயிரம் மணி நேரத்தில் என்னவெல்லாம் செய்யமுடியும்.அவர் தையல் தெரிந்தவராக இருந்தால் ஒரு மணிக்கு ஒரு பிளவுஸ் என்ற வீதத்தில் தைக்கும் பொது குறைத்து எழுபத்தைந்து ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.அவர் அடிப்படை கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பின்  பத்து அல்லது பதினைந்து பேருக்கு டியூஷன் எடுப்பதிலிருந்து தொண்ணூறு ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் வரை ஈட்ட முடியும்.இப்படி அவரவர் அறிவுக்கு தக்கதாக என்ன தெரியுமோ அதை வீட்டிலிருந்தே செய்யலாம்.டீவி பார்ப்பது தவறல்ல. மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதுதான் தவறு.எனவேதான் மறுபடியும் சீரியஸா சொல்றேன் சீரியல் வேண்டாம் என்று..



தண்ணீர்...தண்ணீர்...

இந்த பதிவு  இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனைக்கு தீர்வை தரப்போகிறது என்றால் அது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சந்தோஷம் தான்.அப்படி என்ன பிரச்சனை என்றால் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீர் பிரச்சனைதான்.பருவமழை பொய்த்து போன இந்நாளில் ஆங்காங்கே தண்ணீர் கடைகள் முளைத்துவிட்டன.ஒரு குடம் தண்ணீர் வீட்டிற்கு வரவேண்டுமென்றால் பதினைந்து ரூபாய் செலவழிக்க வேண்டும்.இதை சமைக்கவும்,மற்ற சமையலறை உபயோகத்துக்கும் மட்டுமே சிக்கனமாக பயன்படுத்த இயலும்.குடிப்பதற்கு தனியாக கேன் வாங்க முப்பத்தைந்து ருபாய் எடுத்துவைக்கவேண்டும்.இந்த நிலையில் ஆழ் குழாய் மூலம் எடுக்கும் நீர் உவர் நீராக இருந்தால் அதோ கதிதான்.குளிக்க தகுந்த நீராக அது இருக்காது.அப்போது ஒரு வீட்டில் நான்கு நபருக்கும் அறுபது ரூபாய் கூடுதலாக செலவாகும்.இது ஒரு நாள் செலவு.இனி வரக்கூடிய பெரும் தண்ணீர் பஞ்சத்தை எப்படி சமாளிப்பது.குடிக்க..சமைக்க காசு கொடுத்து தண்ணீர் வாங்கினாலும் குளிக்க..துவைக்க என்ன செய்வது..? தொடர்ந்து படியுங்கள்.

முதலில் கடையில் எளிதாக கிடைக்கும் திருகு குழாய் அமைப்புள்ள வாட்டர் கேனை வாங்கிக்கொள்ளுங்கள்.அதை ஒரு உயரமான மேடையிலோ அல்லது ஸ்டூலிலோ வைத்து அதனுள்ளே சிறிய அளவிலான அடுப்புக்கரியை  இரண்டு அல்லது மூன்று இன்ச் அளவு உயரத்துக்கு பரவலாக நிரப்புங்கள்.அதன் மேலே மணலை  இரண்டு இன்ச் அளவுக்கு நிரப்புங்கள்.அதற்கும் மேலே சிறிய அளவிலான கருங்கற்களை நிரப்புங்கள்.பெரிய கேனாக இருந்தால் இதே வரிசைமுறையில் மீண்டும் ஒரு அடுக்கு இந்த பொருட்களை போடலாம்.


 இப்போது உங்கள் பில்டர் தயார்.இந்த கேனை அசைக்காமல் மெதுவாக உங்கள் வீட்டு உவர் நீரை ஊற்றுங்கள்.நீங்கள் ஊற்றிய நீரானது கருங்கல் ஜல்லி,மணல்,அடுப்புக்கரி போன்றவற்றின் மூலம் வடிகட்டப்பட்டு ஓரளவு நல்ல நீராக நமக்கு கிடைக்கும்.இதை கொஞ்சம் கொஞ்சமாக வேறு ஒரு கலனில் நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டால் குளிப்பதற்கும் காசுகொடுக்காமல் தண்ணீர் தயார்.தேவைப்பட்டால் திருகு குழாய் முனையில் சிறிய துணி அல்லது வலை அமைப்புடைய தண்ணீர் வடிகட்டியை கட்டி சிறு துகள்கள் வராமல் வடிகட்டிக்கொள்ளலாம்.முயற்சி பண்ணுங்கள்
இது தவிர லாரிகளில் விநியோகப்படுத்தப்படும்  நீர்  கலங்கலான நீராக இருக்கும் பட்சத்தில் வெறும் படிகாரம் ஒன்றை மட்டுமே கொண்டு நீரிலுள்ள துகள்களை படிய வைக்க முடியும்.தண்ணீரில் படிகாரத்தை இரண்டு மூன்று  சுற்று சுற்றி எடுத்துவிட்டாலே தண்ணீர் தெளிந்துவிடும்.இதை குடிநீராகவும் பயன்படுத்தலாம்.


Feb 19, 2017

சர்க்கரை நோயிலிருந்து தப்பமுடியுமா ...?

சில காலங்களுக்கு முன் பணக்கார வியாதியாக  மட்டுமே இருந்த சர்க்கரை நோய் இப்போது எல்லாத்தரப்பு மக்களையும் ஆட்டி படைக்கும் வியாதியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு குறைபாடே தவிர வியாதி அல்ல என்பதை மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்.நீரிழிவு நோய் என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் சர்க்கரை நோய் ஆரம்ப காலகட்டத்தில் எந்த வித அறிகுறிகளையும் நமக்கு காட்டுவதில்லை.ஆனால் நம்மில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோய்  பாதிப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் செல்கிறதாம்.உடலின் உள் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படும்போதுதான் நம்மில் பலபேர் இந்நோய் இருப்பதை கண்டறிகின்றனர்.எனவே தான்  முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.நம்முடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நாம் தயாராகும்போதே ஒரு சிறிய பரிசோதனைக்கும் நேரத்தை ஒதுக்குவதில் தவறில்லை தானே..?


மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரிசி உள்ளிட்ட மாவுசத்து பொருட்களை அறவே தவிர்த்துவிடுகிறார்கள்.அது தவறு.அளவோடு மாவுச்சத்துப்பொருட்களை நாம் எடுத்துக்கொள்வது உடல் செயல்பாட்டுக்கு உதவும்.நம்முடைய சராசரி எடையைவிட அதிக எடையில் நாம் இருக்கும்போது சர்க்கரை நோய்க்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது சர்க்கரை நோயை அருகில் வரவிடாமல் தடுக்கும் முதல் வழி என்றே கூறலாம்.ஒல்லியாக உள்ளவர்களுக்கும் வயிற்றில் அதிக கொழுப்பு படிவதால் சர்க்கரை நோய் அபாயம் உண்டு.


சர்க்கரை நோய்க்கு சர்க்கரை மட்டுமேகாரணம் இல்லை.மரபணு,சுற்று சூழல் போன்ற பிற பல காரணங்களும் உண்டு.ஆரோக்கியமான உணவுமுறை,பழக்கவழக்கம் போன்றவற்றின் மூலம்  இதனை நாம் தடுத்திடமுடியும்.மேலும் சர்க்கரை நோய்களுக்கென்றே சில உணவுப்பொருட்களை நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றுள்ளனர்.வெந்தயம்,பாகற்காய்,நாவற்பழம்,ஆடாதொடை ,கோவைக்காய்,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இவற்றை தினம் ஒரு உணவு என்று நாம் எடுத்துக்கொண்டாலே சர்க்கரை நோய் அபாயத்திலிருந்து எளிதாக தப்பிவிடமுடியும்.



EASY WHEAT LADDU

கோதுமை லட்டு வட இந்தியர்களிடம் மிக  பிரபலமான ஒரு இனிப்பு வகை.இதை செய்வதும் மிக எளிது.அதற்கான செய்முறைகளை   தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள்;

கோதுமை மாவு                          -1 கப்
சர்க்கரை                                       - 1 கப்
நெய்                                               - அரை கப்
முந்திரி                                         -25 கிராம்
உப்பு                                               - சிறிதளவு


செய்முறை;
முதலில் கோதுமை மாவை உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவதை விட கெட்டியாக பிசைந்து கொள்ளவேண்டும்.பின்னர் அதை சிறிய பூரிகளாக தேய்த்து எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்து ஆறவைத்துக்கொள்ளவும்.நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.பின்பு சர்க்கரையையும் தனியாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் பொடித்து வைத்துள்ள கோதுமை ரொட்டி,சர்க்கரை ,வறுத்த முந்திரி மூன்றையும் போட்டுகலக்கவும்.பிறகு  சூடு பண்ணிய நெய்யை ஊற்றி சூடு ஆறுவதற்குள் உருண்டைகளாக உருட்டவும்.இப்போது சுவையான கோதுமை லட்டு தயார்.



Feb 13, 2017

சிறுநீரக கற்கள் மறைய சில குறிப்புகள்

சிறுநீரிலுள்ள உப்புக்கள் ஒன்று திரண்டு சிறு சிறு கற்களாக உருவாகின்றன.இவை காலப்போக்கில் தடிமனாகி சிறுநீரோடு வெளியே வர தள்ளப்படும்போது அதன் கூரிய முனைகளால் சிறுநீர்ப்பாதை கிழிக்கப்பட்டு இரத்தம் வெளியேறுகிறது. 5 மி.மீ க்கு குறைவான அளவில் உள்ள கற்கள் சிறுநீரோடு வெளியே வந்துவிடும். 8 மி.மீ.அளவிலான கற்கள் சிறுநீரோடு வெளியே வர 80% வரை  வாய்ப்புண்டு.ஆனால் 1 செ .மீ.க்கு மேல் அளவுள்ள கற்கள் சிறுநீரோடு வெளியேற வாய்ப்புகள் மிக குறைவு.இந்த அளவானது அபாயகரமானதும் கூட.சிறுநீர் கழிக்கும்போது வலி,எரிச்சல்,இரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.சில உணவுப்பழக்கவழக்கமுறைக்கு நாம் நம்மை மாற்றிக்கொள்வதன் மூலம் இந்த உபாதைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.



  • பார்லி கஞ்சியை உட்கொள்வதன் மூலம் அதிக சிறுநீர் பிரிதல் ஏற்பட்டு கற்கள் உருவாவதை தடுக்கலாம்.
  • அகத்திக்கீரை,உப்பு,சீரகம் இவை மூன்றையும் வேகவைத்து அந்த தண்ணீரை குடித்தால் கற்கள் கறையத்தொடங்கும்.
  • முள்ளங்கி சாறும் சிறுநீர் உற்பத்தியை பெருக்கும் .
  • புதினா,பரங்கிக்காய்,சுரைக்காய் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • தினமும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது சிறுநீரக கல் அபாயத்தை குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் கொண்டுவரும்.

  • வெள்ளரிப்பிஞ்சு,எலுமிச்சை சாறு,வாழைத்தண்டு சாறு போன்றவற்றையும் அதிகஅளவில் உணவில் சேர்க்கவேண்டும்.
  • சிறுநீரகக்கற்கள்   பிரச்சனையை சந்தித்தவர்கள் வெயிலில் அதிகம் செல்வதை குறைத்துக்கொள்ளவேண்டும்.
  • கோழி,மீன் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஆட்டிறைச்சியை உணவில் தவிர்க்கவேண்டும்.
  • கொத்துமல்லி இலைகளை சாறு எடுத்து தொடர்ந்து குடித்துவர சிறுநீரகக்கற்கள்  மறையத்தொடங்கும்.
  • பீன்ஸ் -ஐ  வேகவைத்து அரைத்து அந்த சாறையும் தொடர்ந்து குடித்துவர சிறுநீரகக்கற்கள்  மறையும்.

Feb 11, 2017

வாயுத்தொல்லையை விரட்ட சில வழிமுறைகள்.

இன்றைய காலகட்டத்தில் நமக்கு பலப்பல உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பரவலாக பெரும்பாலோனோர்கள் சந்திக்கும் ஒரு விஷயம் வாயுத்தொல்லை. வாயுத்தொல்லையால் வரும் சுகவீனங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். நெஞ்சுவலி,மூட்டுவலி,நரம்புவலி என்று இதன் விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.இதிலிருந்து நாம் வெளியே வரமுடியுமா என்றால் நிச்சயமாக முடியும்.நமது உணவு பழக்கவழக்கமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலே போதும்.. நாம் இந்த பிரச்சனையை முற்றிலும் நீக்கிவிடலாம்.வாயுத்தொல்லையை நீக்குவதற்கான சில எளிய வழிமுறைகளை இங்கு பார்ப்போம்

1.பிரண்டை.. இது எலும்பு உறுதிக்கு மட்டுமல்ல..வாயுத்தொல்லைக்கும் சிறந்த இயற்கை நிவாரணி.வாரம் ஒரு முறை பிரண்டையை உணவில் சேர்த்துவர வாயுத்தொல்லை நீங்கும்.
2.உணவில் துவரம்பருப்புக்கு பதிலாக பாசிப்பருப்பை சேருங்கள்.
3.தினமும் ஒரு முறை சுக்குமல்லி காபி அருந்துங்கள்.
4.இரவு உறக்கத்துக்கு முன்பு பாலோடு பூண்டு சேர்த்து வேகவைத்து அருந்துங்கள்.

5.புதினா,முடக்கத்தான் கீரையை உணவில் வழக்கப்படுத்துங்கள்
6.சுக்கு 20கிராம்,மிளகு 20கிராம், திப்பிலி 20 கிராம், ஓமம் 20 கிராம், வாய்விளங்கம் 20 கிராம், பெருங்காயம் 20கிராம், இந்துப்பு 10 கிராம் எடுத்து, இவற்றை வறுத்து பொடிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் அரை தேக்கரண்டி வீதம் இதை தண்ணீரோடு கலந்து உட்கொண்டு வரும்போது நாளடைவில் வாயுத்தொல்லையை வரட்டிவிட முடியும்.
7. ஆள்காட்டி விரலை கட்டைவிரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்தம்கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

 இந்த வாயு முத்திரையை தொடர்ந்து செய்து வர வாயுத்தொல்லை நீங்கும்.

Feb 7, 2017

மூல நோய்க்கு ஒரு முக்கிய மருந்து

நத்தை என்பது மிகவும் மருத்துவ குணம் கொண்டது.இதிலுள்ள ஒமேகா 3 மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இதய நோய்களை தடுக்கக்கூடியது.மூல நோயை முற்றிலும் குணப்படுத்தக்கூடியது.

பெரும்பாலான சைனீஸ் ரெஸ்டாரன்ட்களில் SNAIL FRY எனப்படும் நத்தை வறுவல் மிக பிரபலம்.ஆனால் அது ஓடுகளோடு பரிமாறப்படுவதால் நம் பழக்க வழக்க முறைக்கு சாப்பிடுவது கடினம்.ஆனால் மூல நோய் உள்ளவர்கள் அந்த இன்னலிலிருந்து வெளியே வர இது பெரிதும் உதவுவதால் வீட்டிலேயே இதன் மருத்துவ குணத்தை பெறும் நோக்கில் இதை பதிவிடுகிறேன்.என்றாவது..யாராவது.. இதன் பலன்களை பெறுவார்களாயின் அது எனக்கு மகிழ்ச்சியே..!
    வயல்களில் உள்ள நத்தைகள் நமக்கு கிடைக்காது.எனவே நாம் மழை முடிந்து வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் காலங்களில் கிராமத்து நண்பர்களிடம் சொல்லி வைத்தே பெறமுடியும்.அதை உயிரோடு ஒரு நாள்  முழுதும் ஒரு வாலி நீரில் விட்டுவிடுங்கள்.இதனால் நத்தையின் வயிற்றில் உள்ள மணல்கள் நீரில் வெளியேறிவிடும்.மறுநாள் அரை வாலி கொதிக்கவைத்த நீரில் நத்தையை போடுங்கள்.அரை மணிநேரம் கழித்து  வடிகட்டிவிட்டு ஒரு குச்சியால் நத்தையின் ஒட்டு பகுதியிலிருந்து சதைப்பகுதியை குத்தி எடுத்தால் சுலபமாக வந்து விடும்.இந்த சதை பகுதியை உப்பு சேர்த்து பிசைந்து நான்கைந்து முறை நன்கு கழுவவும்.அப்போதுதான் அதன் அழுக்குகள், மற்றும் கெட்ட வாசனைகள் அகலும்.


நன்கு கழுவி சுத்தம்  செய்த நத்தையை உப்பு மஞ்சள்தூள்,சிறிய வெங்காயம் இஞ்சிபூண்டு, விழுது மிளகுப்பொடி சேர்த்து வேகவைத்து அந்த தண்ணீரை சூப் போல குடிக்கலாம்.அல்லது வெங்காயம்,தக்காளி,இஞ்சிபூண்டு விழுது,மிளகாய் பொடி ,மஞ்சள்பொடி கறிமசால்பொடி உப்பு சேர்த்து வறுவலாக செய்தும் சாப்பிடலாம்..எப்படி சாப்பிட வைக்கிறோம்  என்பதைவிட அதன் மருத்துவ பயன்களை மனதில் கொண்டு சாப்பிடவையுங்கள்,நிச்சயம் பலன் கிடைக்கும்.



Feb 6, 2017

நாகூர் மட்டன் தாளிச்சா ஆனம் ...செய்வது எப்படி ..?

நாகூர் என்றாலே பிரியாணியும் மட்டன் தாளிச்சா குருமாவும் தான்.அதுவும் திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய சகோதரிகள் மரவை என்று சொல்லப்படும் பெரிய தாம்பாளங்களில் பிரியாணியை போட்டு அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு பேர்  உட்கார்ந்து கொண்டு தாளிச்சாவோடு பகிர்ந்துண்ணும் அழகு அந்த ஊருக்கு மட்டுமே சொந்தமான பெருமை.அத்தகைய பெருமை வாய்ந்த ,சுவை மிகுந்த தாளிச்சா குருமாவை செய்து பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்.
மட்டன்                                       -அரை கிலோ
துவரம் பருப்பு                          - கால் கிலோ
வெங்காயம்                              - 2
தக்காளி                                      -3
பச்சை மிளகாய்                       -5
கத்திரிக்காய்                             -2
முருங்கைக்காய்                      - 1
உருளைக்கிழங்கு                    -2
வாழைக்காய்                            -1
கேரட்                                           -2
புளி                                               - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது              -2 தேக்கரண்டி
தேங்காய் சிறியது                    -அரை மூடி
பட்டை,கிராம்பு,சோம்பு
ஏலக்காய்                                    -சிறிதளவு
சீரகம்                                           -அரை தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி                       -1 தேக்கரண்டி
சாம்பார்பொடி                           -1 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி                  - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை.கொத்துமல்லி - சிறிதளவு
பெருங்காயம்                               - அரை தேக்கரண்டி
எண்ணெய்                                    - தேவையான அளவு 
செய்முறை ;
1.முதலில் துவரம் பருப்பை மஞ்சள்பொடி,பெருங்காயம் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்
2..மட்டனை சுத்தம் செய்து உப்பு ,மஞ்சள்பொடி,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.மட்டன் எலும்புகளோடு பெரிய..பெரிய துண்டுகளாக இருக்கவேண்டும்.
3.காய்கறிகளை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்
4.ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு,பட்டை,கிராம்பு ,ஏலக்காய் தாளிக்கவும்.பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,கறிவேப்பிலை,பச்சைமிளகாய்  சேர்க்கவும்.அது நன்கு வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் தக்காளியை சேர்க்கவும்.தக்காளி நன்கு வதங்கியதும் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இப்போது மிளகாய்ப்பொடி,சாம்பார்பொடி,சிறிது மஞ்சள்பொடி,சேர்த்துவிடலாம்,மசாலா வதங்கியதும் வேகவைத்த மட்டனை தண்ணீரோடு சேர்த்து வேகவிடவும்,இப்போது உப்பும் சேர்த்துவிடவேண்டும்.
மட்டனோடு காய்கறிகளும் சேர்ந்து வேகவேண்டும்.காய்கள் நன்கு வெந்ததும் வேகவைத்துள்ள பருப்பை சேர்க்கவும்.எல்லாம் கலந்து கொதி வரும்போது புளிக்கரைசலை சேர்க்கவும்.அதிகம் சேர்த்துவிடவேண்டாம்.பின்பு தேங்காயோடு சீரகம் சேர்த்து அரைத்து கலந்து விடவும்.இறுதியாக கொத்துமல்லி தூவி இறக்கி பரிமாறலாம்.
குறிப்பு; இது கெட்டி பதத்தில் இருக்கவேண்டும்.எனவே அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
இதில் காரம் அதிகம் இருக்காது.சாம்பாரோடு மட்டன் குழம்பு கலந்ததுபோல் வித்யாசமான சுவையை கொடுக்கும்.




Feb 5, 2017

பிளாகரில் BACK TO TOP பட்டனை கொண்டுவருவது எப்படி..?

உங்களுக்கு சொந்தமான பிளாகரில் நீங்கள் நிறைய எழுதியிருப்பீர்கள்.உங்கள் வாசகர் உங்கள் பக்கத்துக்கு வந்து உங்கள் பதிவுகளை படிக்கும்போது ஒரு பக்கத்தின் கடைசி பதிவிலிருந்து மீண்டும் மேலே உள்ள பதிப்புக்கு செல்ல ஆசைப்பட்டால் அவர் SCROLLING பட்டனை தான் உபயோகிக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் உங்கள் பக்கத்தில் BACK TO TOP பட்டன் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்.
அதற்கு நீங்கள் பெரிதாக நிறைய படித்து தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.தொடர்ந்து நான்கு அடி எடுத்து வையுங்கள்.நீங்கள் BACK TO TOP போகலாம்.


  • முதலில் உங்கள் பிளாகரின் LAYOUT பகுதிக்கு செல்லுங்கள்.
  • அங்கு RIGHT SIDE BAR-ல் ADD A GADGET -ஐ  கிளிக் பண்ணுங்கள்.
  • அங்கே HTML/JAVASCRIPT-ஐ செலக்ட் பண்ணுங்கள்.
  • கீழே கொடுத்துள்ள CODE-ஐ அங்கே பேஸ்ட் பண்ணிவிட்டு சேவ் பண்ணுங்கள்.

<!--Smooth Back to Top Button Start-->

<script>
jQuery(document).ready(function() {
var offset = 220;
var duration = 500;
jQuery(window).scroll(function() {
if (jQuery(this).scrollTop() > offset) {
jQuery('.back-to-top').fadeIn(duration);} else {
jQuery('.back-to-top').fadeOut(duration);}});
jQuery('.back-to-top').click(function(event) {
event.preventDefault();
jQuery('html, body').animate({scrollTop: 0}, duration);
return false;})});</script>
<style>
div#page {
max-width: 900px;
margin-left: auto;
margin-right: auto;
padding: 20px;}
.back-to-top {
position: fixed;
bottom: 2em;
right: 0px;
text-decoration: none;
color: #000000;
background-color: rgba(235, 235, 235, 0.80);
font-size: 12px;
padding: 1em;
display: none;}
.back-to-top:hover {
text-decoration: none;}</style>
<a href="#" class="back-to-top"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdf6O2T4Q8NQ_fPYGyt5chbq3WHbKaNd8TLLFpITQtwNoJZptgZnITPWXAIuvxJRx60Zks2fq0SsjAwI3J6U_dxQDb78hR6cOpVqMl-IhFwsYUrDaWHcUu63Fpyf7zId9jNfN1G3-dOuY/s1600/11.png
" alt="Back to Top" / /></a>
<!--Smooth Back to Top Button End-->




அவ்வளவு தான்.உங்கள் BACK TO TOP BUTTON ரெடி. உங்கள் பிளாகரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.





Feb 4, 2017

பெண்ணே உனக்காக....

நாகரீக வளர்ச்சியின் காரணமாக நமது வாழ்க்கை முறையில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.அதில் ஒன்று தான் சானிடரி நாப்கின்கள்.பண்டைய காலத்தில் பெண்கள் துணிகளையே பயன்படுத்தி வந்தனர்.ஆனால் அதிலுள்ள பராமரிப்பு சிக்கல் காரணமாக எல்லோரும் சானிடரி நாப்கின்கள் உபயோகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே உண்மை.இன்று அதிகம் விற்பனையாகும் பொருட்களில் இதுவும் ஒன்று.அனால் இதை முறையாக பயன்படுத்தாத போது  அவ்வளவு பாதுகாப்பானது  அல்ல  என்பதும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக உள்ளது.

சானிட்டரி நாப்கின்கள் உற்பத்தியில் செலவை குறைப்பதற்காக பெரும்பாலும் மறுசுழற்சி பொருட்களாலேயே தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது .பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள் மற்றும் ரசாயனங்களால் தயாரிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.இதில் ஈரத்தை உறிஞ்ச பயன்படுத்தப்படும் ரசாயனமான HEXACLORODIBENZOFURAN(HXCDF) கருமுட்டை உற்பத்தி திறனை குறைக்கக்கூடியவை. எல்லா பாதிப்புகளையும் அறிந்திருந்தாலும் அதை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் நம் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எச்சரிக்கையோடு உபயோகிப்பது நல்லது.

  • முழுவதும் நனையும்வரை காத்திருக்காமல்அடிக்கடி நாப்கின்களை மாற்றி வருவது நோய் தொற்று உருவாவதை தடுக்கும்.
  • வாசனை சேர்க்கப்பட்ட நாப்கின்களை தேர்ந்தெடுக்காமல் மேற்பகுதி பருத்தியினாலான நாப்கின்களை தேர்ந்தெடுங்கள்.
  • நாப்கின்களை உபயோகப்படுத்திய பின்பு பாதுகாப்பான முறையில் உரையிலிட்டு அப்புறப்படுத்தும் முறையை பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.
  • அப்புறப்படுத்திய பின்பு கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்யுங்கள்.
  • பிள்ளைகள் வெளியே செல்லும்போது பையில் நாப்கின்கள் கொடுத்து அனுப்பினால் அதை அப்புறப்படுத்தவும் தேவையான கவர்களை கொடுத்தனுப்புங்கள்.இது பொது இடங்களை அசுத்தப்படுத்துவதிலிருந்து தடுக்கும்.




MANGO KULFI... VERY EASY.. TASTY TASTY..

 குல்ஃபியை விரும்பாதவர்கள் யாருமில்லை.நடு இரவில் கூட  குல்ஃபியை ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள் நம் மக்கள்.எல்லா நேரங்களிலும்  குல்ஃபியை தேடி வெளியே செல்லவேண்டிய அவசியமில்லை.நம் வீட்டு குளிர்சாதன பெட்டியியிலேயே நாம் உருவாக்கலாம்  குல்ஃபி .சுரங்கத்தை..   வாங்க போகலாம் ..சுரங்கத்தை தேடி..

தேவையான பொருட்கள் ;
பால்                                                -1லிட்டர்
சர்க்கரை                                        -200 கிராம்
பழுத்த மாம்பழ துண்டு            - 1 கப்
மேங்கோ  எஸென்ஸ்                  -அரை தேக்கரண்டி
சோள மாவு                                  -2 தேக்கரண்டி

செய்முறை
பாலை நன்கு கொதிக்கவைக்கவும். மேலே வரும் ஏடுகளை எடுக்காமல்  சுண்டவைக்க வேண்டும்.அதில் சோள மாவை கரைத்து ஊற்றி அடி பிடிக்காமல் கொதிக்கவிடவும்.மாம்பழ துண்டுகளை அரைத்து சேர்க்கவும்.மாம்பழ சீசன் இல்லாத போது பாட்டில்களில் கிடைக்கும் மாம்பழச்சாறை உபயோகப்படுத்தலாம்.சர்க்கரை,மேங்கோ எஸென்ஸ் சேர்த்து நன்கு ஆறவிடவும்.  பின்னர் குல்ஃபி அச்சுகளில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.இனி நினைத்த நேரத்தில் நீங்கள் குல்ஃபி சாப்பிட வெளியே செல்லவேண்டாம்.செய்து பாருங்கள்.சுவைத்து மகிழுங்கள்.

கொழுப்பை கரைக்கும் கொள்ளு சூப் (HORSE GRAM SOUP) செய்வது .எப்படி..?

கொள்ளு என்பது உடலுக்கு உறுதியை தரக்கூடியது.உடலிலுள்ள கொழுப்பை கரைக்கக்கூடியது.அதனால்தான்
" இளைத்தவனுக்கு எள்ளு.. கொழுத்தவனுக்கு கொள்ளு" என்று முன்னோர்கள் சொல்லிவைத்தனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த கொள்ளில் சுவையான சூப் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.


தேவையான பொருட்கள் ;
கொள்ளு                                    -2 பிடி (ஒரு  நபருக்கு ஒரு பிடி)
வெங்காயம்                             -1
தக்காளி                                      - 1
கறிவேப்பிலை                        - 1 கொத்து 
கொத்துமல்லி                         -சிறிதளவு 
பூண்டு                                         -5 பல் 
சோள மாவு                               - 1 தேக்கரண்டி 
மிளகு                                         -2 தேக்கரண்டி 
சீரகம்                                          - 2 தேக்கரண்டி 
மஞ்சள் பொடி                         - சிறிதளவு 
உப்பு                                             - தேவையான அளவு 
எண்ணெய்                                 -2 தேக்கரண்டி 
கரம் மசாலா போடி                 -  இரண்டு சிட்டிகை 
செய்முறை;
முதலில் கொள்ளை கழுவிவிட்டு தண்ணீரில் குறைந்தது 2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.பின்னர்  குக்கரில் கொள்ளு,தக்காளி இரண்டையும் போட்டு  நன்கு வேகவைக்கவும்.வெந்தபின் நன்கு ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு அதனோடு பூண்டு,மிளகு,சீரகம்,மஞ்சள்பொடி சேர்த்து நன்கு அரைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலையை போட்டு நன்கு வதக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள கொள்ளு கலவையை போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் அடிபிடிக்காமல் வதக்கவும்.பின்னர் சோள மாவை தண்ணீரில் கரைத்து வதங்கிக்கொண்டிருக்கும் கொள்ளு கலவையோடு சேர்த்து,தேவையான அளவு உப்பு , தண்ணீர் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.நன்கு  கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை தூவி இறக்கி பரிமாறவும் 
இதை பரிமாறும்போது மேலே  CORN FLAKES தூவி பரிமாறவும். இதில் பூண்டு,மிளகு,சீரகம் இவற்றை பச்சையாக அரைத்து சேர்ப்பதால்  வாசனை  பத்திய ரசம் போல தூக்கலாகவே இருக்கும்.சுவையும் அமோகமாக இருக்கும்.முயற்சித்துத்தான் பாருங்களேன்.


Feb 3, 2017

சுவையான குக்கர் கேக் செய்வது எப்படி..?

கேக் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.ஆனால் கேக்கை பேக்கரியில் மட்டுமே வாங்கி சுவைக்கும் நமக்கு வீட்டிலேயே நம் கையால் செய்து சுவைக்கும் கலை தெரிந்தால் சும்மா இருப்போமா..? வாங்க போகலாம்..நம்ம சமயலறைக்கு...

தேவையான பொருட்கள்;
மைதா                                         -250 கிராம்
சீனி                                              -250 கிராம்
முட்டை                                      -3
வெண்ணெய்                             -50 கிராம்
பேகிங் சோடா                            -அரை தேக்கரண்டி
கோக்கோ பவுடர்                      -2 தேக்கரண்டி



செய்முறை;
முதலில் மைதா,பொடித்த சீனி,கோக்கோ பவுடர்,பேகிங் சோடா ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும்.பின் அதனுடன் முட்டையை சேர்த்து அடிக்கவும்.நன்கு நுரைத்து வெண்ணெய் போல வரும்.பின்னர் சலித்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அடிக்கவும்.
பின்னர்  கேக் பேனில் பட்டர்  தடவி மைதாவை தூவவும்.அதில் அடித்து வைத்துள்ள மாவை ஊற்றி அழுத்தாமல் சமன் செய்யவும்.
பிறகு குக்கரை அடுப்பில் வைத்து மணலை குக்கரில் இரண்டு இன்ச் உயரத்துக்கு பரப்பவும்.பின்னர் மணலின் மேல் கேக் பாத்திரத்தை வைத்து விசில் போடாமல் மிதமான தீயில் வைக்கவும்.25 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.இப்போது கேக் பாத்திரத்தை எடுத்து அகலமான தட்டில் மெதுவாக கவிழ்த்தால் உங்கள் குக்கர் கேக் தயார். தேவைப்பட்டால் முந்திரி,பாதாம் போன்றவற்றை குக்கர் மூடும் முன் மாவில் தூவி அழகுபடுத்தலாம்.




HOW TO DOWNLOAD YOUTUBE VIDEOS WITHOUT ANY APPLICATION IN TAMIL

யூடியூப் வீடியோவை பதிவிறக்கம்   பண்ணுவதற்கு நிறைய அப்ளிகேஷன்கள் உண்டு.ஆனால் எந்த அப்ளிகேஷனும் இல்லாமல் யூடியூப் வீடியோவை பதிவிறக்கம் செய்வது  எப்படி என்று இங்கு பார்ப்போம்.



  • முதலில் யூடியூப் தளத்திற்கு சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் விடியோவை ஓட விடுங்கள்.
  • அப்போது மேலே உள்ள அட்ரஸ் பாரில் WWW என்ற எழுத்துக்கு பக்கத்தில் உள்ள புள்ளிக்கு அடுத்து SS என்று டைப் பண்ணுங்கள்.அதாவது WWW.SSYOUTUBE.COM என்று வரவேண்டும்.இப்போது ENTER கொடுங்கள்.
  • இப்போது என்.savefrom .net என்ற தளத்திற்கு நீங்கள் திருப்பப்படுவீர்கள்.
  • அங்கே உங்கள் வீடியோவுக்கு கீழே download என்பதை கிளிக் பண்ணுங்கள்.

இப்போது உங்கள் வீடியோ பதிவிறக்கமாக  ஆரம்பித்துவிடும். அப்ளிகேஷனையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு எளிமையான முறையில் உங்கள் வீடியோவை பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்.


Feb 2, 2017

நீங்கள் இறந்த பின் யார் அழப்போகிறார்கள்-ராபின் ஷர்மா.. ஒரு பார்வை

Who Will Cry When You Die?"    இது  ராபின் ஷர்மா எழுதிய புத்தகம். 

“நீ பிறந்த போது, நீ அழுதாய்...உலகம் சிரித்தது..
நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் நெஞ்சை நெகிழவைக்கும் பல அற்புதவரிகளை எழுதியிருக்கிறார்.




1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.




10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான  மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்...
இந்த வரிகள் உங்கள் மனதையும் தொடுகிறது தானே...

CHICKEN PODIMAS --- ஒரு உணவு..பல அவதாரம்..

சிக்கன் பொடிமாஸ் என்பது புரோட்டீன் நிறைந்த உணவு.இது செய்வதற்கும் மிக எளிமையானது.குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இதன் செய்முறைகளை தொடர்ந்து பார்ப்போமா...




தேவையான பொருட்கள் ;

கோழி இறைச்சி                        -250 கிராம்.(எலும்பு இல்லாதது)
முட்டை                                       -5
வெங்காயம்                                -2
தக்காளி                                        -1
பச்சைமிளகாய்                          -4
மிளகாய்த்தூள்                           -1 தேக்கரண்டி 
மிளகுத்தூள்                                -1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள்                               -1 தேக்கரண்டி 
கரம் மசாலா தூள்                     -அரை தேக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது               -1 தேக்கரண்டி 
உப்பு                                              - தேவையான அளவு 
எண்ணெய்                                  -தேவையான அளவு 
கறிவேப்பிலை,கொத்துமல்லி  - சிறிதளவு 

செய்முறை;

கோழியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக கொத்துக்கறி போல் எடுத்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.நன்கு உதிரியாக வந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி  சோம்பு,பட்டை தாளித்து சிறிதாக நறுக்கி வைத்த வெங்காயம் ,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை  போட்டு வதக்கவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.நன்கு வாசனை வந்ததும் தக்காளி சேர்க்கவும்.



பின்னர் கோழி இறைச்சியை சேர்த்து நன்கு வதக்கவும். நிலையில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள்,உப்பு சேர்க்கவும்.கோழி நன்கு வெந்து மசாலாவுடன் நன்கு கலந்து உதிரியாக வரும்வரை இளம் சூட்டில் கிளறவேண்டும்.இறுதியாக மிளகுத்தூள்,கொத்துமல்லி,பொறித்துவைத்த முட்டை அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.சுவையான சிக்கன் பொடிமாஸ் தயார்.
  • சிறு குழந்தைகளுக்கு சாதத்தில் கொஞ்சம் இந்த பொடிமாஸை கலந்து மெதுவாக கிளறி கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.லஞ்ச் பாக்ஸ் க்கும் தயார் பண்ணி கொடுக்கலாம்.
  • பரோட்டா செய்யும்போது பரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக பொடித்து அதனுடன் இந்த பொடிமாஸை சேர்த்து கிளறினால் சுவையான சிக்கன் கொத்து பரோட்டா தயார்.
  • மைதா மாவு பிசைந்து பூரி அளவுக்கு தேய்த்து அதனுள் இந்த பொடிமாஸை வைத்து உருளையாக உருட்டி எண்ணையில் இட்டு எடுத்தால் சுவையான சிக்கன் ரோல் தயார்.
  • உருவத்தை மாற்றி சமோசாவாகவும் போட்டு எடுக்கலாம்.
  • தோசையின் மேல் இதனை பரப்பி பரிமாறினால் சுவையான சிக்கன் மசால் தோசை தயார்.

கனவா மீன் மசாலா ---KANAVA MEEN MASAALA

தேவையான பொருட்கள் ;
கனவா மீன்                                     - 250 கிராம்
வெங்காயம்                                     -2
தக்காளி                                             -2
இஞ்சிபூண்டு விழுது                     -1 தேக்கரண்டி
மிளகாய் தூள்                                  -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                                    -அரை தேக்கரண்டி
மிளகு தூள்                                       - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள்                          -அரை தேக்கரண்டி
சோம்பு                                              - அரை தேக்கரண்டி 
கறிவேப்பிலை                               - சிறிதளவு
கொத்துமல்லி                                 -சிறிதளவு
உப்பு                                                    -தேவையான அளவு
எண்ணெய்                                        -தேவையான அளவு 

செய்முறை ;
கனவாமீனை சுத்தம் செய்து தனியே வைக்கவும்.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு சேர்த்து பின் வெங்காயம்,கறிவேப்பிலையை  சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வாசனை வரும்வரை கிளறவும்.பின்னர் தக்காளியை சேர்க்கவும்.தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்க்கவும்.இந்த நிலையில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் ,உப்பு,கரம் மசாலா தூள்,சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.மீனில் உள்ள தண்ணீரே இது வேக போதுமானது.மீனிலிருந்து வெளியேறிய தண்ணீர் வற்றும்வரை நன்கு வதக்கிவிட்டு இறுதியாக மிளகுத்தூள் மற்றும் கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கவும்.சுவை மற்றும் மணம் கொண்ட கனவா மீன் மசாலா தயார்.

DRY SQUID FRY---கனவா மீன் வறுவல்

கனவா மீன் (SQUID ),கடம்பா மீன் என்று பல பெயர்களில் அறியப்படும் இந்த மீன் சுவைப்பதற்கு கடல் வாழ் உயிரினம் போல் அல்லாமல் வித்யாசமான சுவையை கொடுக்கக்கூடியது.அதன் செய்முறைகள் இதோ உங்களுக்காக....



தேவையான பொருட்கள் ;
கனவா மீன்                     - 250 கிராம்
மிளகாய் பொடி              -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                    - 1 தேக்கரண்டி
 இஞ்சி பூண்டு விழுது   -1 தேக்கரண்டி
சோள மாவு                     - 2 தேக்கரண்டி
உப்பு                                  - தேவையான அளவு
எண்ணெய்                      - தேவையான அளவு

செய்முறை;

முதலில் கனவா மீனை சுத்தம் செய்து வளையங்களாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.அதனுடன் மிளகாய் பொடி ,மஞ்சள் பொடி ,உப்பு,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும்.பின்னர் இந்த கலவையை சோளமாவில் பிரட்டி எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் மீன் கலவையை போட்டு நிறம் மாறும் வரை இளம் சூட்டில் பொரித்தெடுக்கவும்.இப்போது சுவையான கனவா  மீன் வறுவல் தயார்.

HOW TO REMOVE " SUBSCRIBE TO ATOM'" BUTTON WITH FOUR SIMPLE STEPS..

நம்முடைய பிளாகரில் SUBSCRIBE TO ATOM என்ற பட்டன் ஐ  அகற்றுவது எப்படி என்று நிறைய  பேருக்கு தெரியாது.மிகவும் எளிமையான முறையில் atom பட்டனை அகற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க...


STEP 1.GO TO YOUR DASHBOARD >CLICK TEMPLATE> EDIT HTML



STEP 2. CLICK  ctrl+f   TO OPEN BLOGGER'S SEARCH BOX



STEP 3.  NOW SEARCH  ...    <b:include data='feedLinks' name='feedLinksBody'/>



STEP 4. REMOVE THE UNDERLINED LINE AND SAVE TEMPLATE.


இப்போ எங்கே போச்சு உங்க ATOM பட்டன் ...?


Feb 1, 2017

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி..?

 சுறா புட்டுக்கு மயங்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு அசைவ பிரியர்களை கட்டி போட்டு சுவையால் சுண்டி இழுக்கும் மோகினி தான் இந்த சுறா புட்டு.தொடர்ந்து படியுங்கள்.மறவாமல் செய்துபாருங்கள்.


தேவையான பொருட்கள்

சுறா மீன்                                  -250 கிராம்
வெங்காயம்                            -3
பச்சை மிளகாய்                     -5
பூண்டு                                       -2
இஞ்சி பூண்டு விழுது           -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                           -அரை தேக்கரண்டி
மிளகு தூள்                              -2 தேக்கரண்டி
உப்பு                                          - தேவையான அளவு
எண்ணெய்                              -தேவையான அளவு
பட்டை,சோம்பு                      -சிறிதளவு
கறிவேப்பிலை                      -சிறிதளவு

செய்முறை 

சுறா மீனை சுத்தம் செய்து மீன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் மற்றும் சிறிது மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வேகவிடவும்.பின்னர் நீரை வடிகட்டி தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு உதிர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு,பட்டை இரண்டையும் சேர்க்கவும்.

அடுத்து வெங்காயம் கறிவேப்பிலை,பச்சைமிளகாய் மூன்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கி உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை சேர்க்கவும்.மீண்டும் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு உதிரியாக வரும்வரை கிளறவும்.இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.தேவைப்பட்டால் கொத்துமல்லி தழையை போட்டு கிளறி பரிமாறலாம்.சுவையான சுறா புட்டு தயார்.