இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Feb 7, 2017

மூல நோய்க்கு ஒரு முக்கிய மருந்து

நத்தை என்பது மிகவும் மருத்துவ குணம் கொண்டது.இதிலுள்ள ஒமேகா 3 மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இதய நோய்களை தடுக்கக்கூடியது.மூல நோயை முற்றிலும் குணப்படுத்தக்கூடியது.

பெரும்பாலான சைனீஸ் ரெஸ்டாரன்ட்களில் SNAIL FRY எனப்படும் நத்தை வறுவல் மிக பிரபலம்.ஆனால் அது ஓடுகளோடு பரிமாறப்படுவதால் நம் பழக்க வழக்க முறைக்கு சாப்பிடுவது கடினம்.ஆனால் மூல நோய் உள்ளவர்கள் அந்த இன்னலிலிருந்து வெளியே வர இது பெரிதும் உதவுவதால் வீட்டிலேயே இதன் மருத்துவ குணத்தை பெறும் நோக்கில் இதை பதிவிடுகிறேன்.என்றாவது..யாராவது.. இதன் பலன்களை பெறுவார்களாயின் அது எனக்கு மகிழ்ச்சியே..!
    வயல்களில் உள்ள நத்தைகள் நமக்கு கிடைக்காது.எனவே நாம் மழை முடிந்து வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் காலங்களில் கிராமத்து நண்பர்களிடம் சொல்லி வைத்தே பெறமுடியும்.அதை உயிரோடு ஒரு நாள்  முழுதும் ஒரு வாலி நீரில் விட்டுவிடுங்கள்.இதனால் நத்தையின் வயிற்றில் உள்ள மணல்கள் நீரில் வெளியேறிவிடும்.மறுநாள் அரை வாலி கொதிக்கவைத்த நீரில் நத்தையை போடுங்கள்.அரை மணிநேரம் கழித்து  வடிகட்டிவிட்டு ஒரு குச்சியால் நத்தையின் ஒட்டு பகுதியிலிருந்து சதைப்பகுதியை குத்தி எடுத்தால் சுலபமாக வந்து விடும்.இந்த சதை பகுதியை உப்பு சேர்த்து பிசைந்து நான்கைந்து முறை நன்கு கழுவவும்.அப்போதுதான் அதன் அழுக்குகள், மற்றும் கெட்ட வாசனைகள் அகலும்.


நன்கு கழுவி சுத்தம்  செய்த நத்தையை உப்பு மஞ்சள்தூள்,சிறிய வெங்காயம் இஞ்சிபூண்டு, விழுது மிளகுப்பொடி சேர்த்து வேகவைத்து அந்த தண்ணீரை சூப் போல குடிக்கலாம்.அல்லது வெங்காயம்,தக்காளி,இஞ்சிபூண்டு விழுது,மிளகாய் பொடி ,மஞ்சள்பொடி கறிமசால்பொடி உப்பு சேர்த்து வறுவலாக செய்தும் சாப்பிடலாம்..எப்படி சாப்பிட வைக்கிறோம்  என்பதைவிட அதன் மருத்துவ பயன்களை மனதில் கொண்டு சாப்பிடவையுங்கள்,நிச்சயம் பலன் கிடைக்கும்.



No comments:

Post a Comment