இன்றைய காலகட்டத்தில் கால்சியம் பற்றாக்குறையால் பெரும்பாலான பெண்களும் குழந்தைகளும் பாதிப்படைகின்றனர்.இதை நிவர்த்தி செய்ய இயற்கையான முறையை பின்பற்றுவது நிரந்தர தீர்வை தரும் .கால்சியம் பற்றாக்குறையை தீர்ப்பதில் பிரண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.இதை சுத்தம் செய்யும் போது கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டால் கையில் அறிப்பு எற்படுவதை தடுக்கலாம்.இதை துவையலாக செய்து சாப்பிடும் போது சுவை அதிகமாக சிறு பிள்ளைகள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் .எளிமையான முறையில் பிரண்டை துவையல் செய்யும் முறை பற்றி இங்கு பார்ப்போம் .
தேவையான பொருட்கள் :
பிரண்டை _ தேவையான அளவு
அல்லது 50கிராம்
காய்ந்த மிளகாய் _ 4
புளி _ சிறிதளவு
உளுத்தம்பருப்பு _ 4 தேக்கரண்டி
உப்பு _ தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரண்டையை தோல் உறித்து சுத்தம் செய்த பிறகு நன்கு எணணெய் விட்டு வதக்க வேண்டும்.நன்கு வதக்காவிட்டால் நாக்கில் அறிப்பு ஏற்படும்.பின்அதனுடன்உளுத்தம்பருப்பும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் .
முதலில் பிரண்டையை தோல் உறித்து சுத்தம் செய்த பிறகு நன்கு எணணெய் விட்டு வதக்க வேண்டும்.நன்கு வதக்காவிட்டால் நாக்கில் அறிப்பு ஏற்படும்.பின்அதனுடன்உளுத்தம்பருப்பும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் .
பின் இத்துடன் எடுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கி அரைக்கவும்.
இப்போது சுவையான.. சத்தான பிரண்டை துவையல் தயார் .
இப்போது சுவையான.. சத்தான பிரண்டை துவையல் தயார் .
No comments:
Post a Comment