இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 23, 2017

MINT RICE- புதினா சாதம்

புதினா சாதம் என்பது மிகவும் ஆரோக்யமான ஒரு உணவு. குழந்தைகளுக்கு மதிய  உணவாக பள்ளிக்கு கொடுத்தனுப்ப உகந்த ஒன்று.தினமும் குழம்பு கூட்டு என்று சலித்துப்போய் உள்ளவர்களுக்கு மிகவும் சுவையான மாறுதல் புதினா சாதம்.இன்று உங்களுக்காக...



தேவையான பொருட்கள்;
வேகவைத்த சாதம்              - 1 கப்
புதினா இலை                        - 1கட்டு
 கொத்து  மல்லி  இலை      -ஒரு பிடி 
பச்சை மிளகாய்                     - 5
பூண்டு பல்                              -10
வெங்காயம்
பொடியாக நறுக்கியது        - 2
புளி                                           - சிறிதளவு
மஞ்சள் பொடி                       - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள்                        -அரை தேக்கரண்டி
உப்பு                                         - தேவையான அளவு
எண்ணெய்                             - தேவையான அளவு
நெய்                                         -சிறிதளவு


செய்முறை;

               முதலில் மிக்ஸியில் புதினா,கொத்துமல்லி, பச்சைமிளகாய் ,புளி ,பூண்டு பல் மூன்று எல்லாவற்றையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.பின் வாணலியில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு சேர்த்து அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை,பூண்டு இரண்டையும்  சேர்க்கவும். நன்கு  வதங்கியதும்
அரைத்து வைத்துள்ள புதினா கலவை ,மஞ்சள்பொடி,மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும்,நன்கு வதங்கியதும் சாதத்தை சேர்த்து கிளறவும்.கடைசியாக நெய்யை ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.சுவையான புதினா சாதம் தயார்.

No comments:

Post a Comment