இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 21, 2017

சிறு பருப்பு பாயசம்...உங்களுக்காக...

சிறு பருப்பு பாயசம் இன்று பரவலாக கிராமம்,நகரம் என்று எல்லா இடங்களிலும் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சுவைக்கப்படும் இனிப்பு  வகை.ஆனால் இன்றைய இளம் தலைமுறைகள் சேமியா பாயசத்தை மட்டுமே நன்கு அறிந்திருக்கின்றனர்.அவர்களும் ஆரோக்கியமான இதன் செய்முறையை அறியவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.


தேவையான பொருட்கள்
சேமியா                                    ; 100 கிராம் 
சிறுபருப்பு                                ;100 கிராம் 
பசும்பால்                                 ;500 மி .லி 
பசுநெய்                                    ;50 கிராம் 
பால்கோவா                           ;50 கிராம் 
(சர்க்கரை இல்லாதது)

ஏலக்காய்                                ;   4
முந்திரி & திராட்சை             ;சிறிதளவு 
வெல்லம்                                 ; 250 கிராம் 

செய்முறை;   
1.முதலில் வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் விட்டு வெல்லம் நன்கு கரையும்வரை கொதிக்க விடவும்.
2.  சிறுபருப்பை  வறுத்து ,பின் ஒன்றிரண்டாக உடைத்து பசும்பாலில் வேகவிடவும்.பின் அதில் சேமியாவை சேர்த்து வேகவிடவும்.
3.வேகும்போதே ஏலக்காயை தட்டி அதில் போடவும்.
4.சேமியா  மற்றும் பருப்பு நன்கு வெந்ததும் பால்கோவாவை அதில் சேர்க்கவும்.(பால்கோவா சேர்க்க விரும்பாதவர்கள் பால் கொஞ்சம் அதிகப்படியாக சேர்க்கலாம்.


5.முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.
6.கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு வெல்லக்கரைசலை சேர்க்கவும்.(பால் திரிந்துவிடாமல் இருக்க அடுப்பை அணைத்தபின் மட்டுமே சேர்க்கவேண்டும்)
           இப்போது நமக்கான சிறுபருப்பு  பாயசம் ரெடி.இதிலுள்ள பசும்பால்,வெல்லம் ,பசுநெய்,சிறுபருப்பு எல்லாமே ஆரோக்யம் தரக்கூடியவை தான்.இதை நன்கு ஆறியபின் குடித்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
            





No comments:

Post a Comment