இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 12, 2017

முதுமையை விரட்ட திரிபலா மட்டும் போதும் ...

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய் ,தான்றிக்காய் ஆகிய மூன்று பொருள்களின் கலவை ஆகும்.இது சூரணமாகவும், சாறு வகையாகவும் ,கேப்ஸுல் வகையிலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள்.அவ்வாறான குறைவற்ற செல்வத்தை பெற இந்த திரிபலா நமக்கு பயன்படுகிறது.

  • இது நம் இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • அஜீரண கோளாறை சரிசெய்கிறது.
  • மலச்சிக்கலை நீக்குகிறது.
  • கல்லீரல்,நுரையீரலை பாதுகாக்கிறது.
  • ஆஸ்துமா, மஞ்சள்காமாலை போன்றவற்றிற்கு இது சிறந்த மருந்து.
  • உடலிலுள்ள கொழுப்பு,கெட்டநீர் இவைகளை இயற்கை கழிவுகளாக இது வெளியேற்றும்.
  • உடல் எடையை குறைக்கும்.
  • இளமையை தக்கவைக்கும்.
  • தோல் பளபளப்பு ,கண் கூர்மையை ஏற்படுத்தும்.
  • இதிலுள்ள தான்றிக்காயின் பனி உடல் வெப்பத்தை குறைத்து முடி பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதுதான்.
  • புண்களை கழுவ இதை பயன்படுத்தலாம்.
  • ஈறுகளில் இரத்தக்கசிவு ,வாய் துர்நாற்றம் ,பல் சொத்தை போன்றவற்றிர்க்கு  இதை பல்பொடியாக பயன்படுத்தலாம்.
  • இது புற்றுநோய் செல்களில்  மெடாஸ்டேட்டிஸ் (metastatis ) வளரும் அபாயத்தை குறைப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
                                           
இதை காலை எழுந்ததும் வெறும் வயிற்றிலோ அல்லது இரவு படுக்க போகும் முன்போ ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் இரண்டு தேக்கரண்டி கலந்து குடித்து வரவேண்டும்.அடிக்கடி கழிவுகள் ஏற்பட்டால் பயம் கொள்ள தேவையில்லை.



No comments:

Post a Comment