அதிக எடை என்பது கண்ணாடியில் நம் உடலை பார்க்கும்போது நம் மனதை பாதிக்கும் ஒரு பிரதான காரணி.இதை களைய நாம் நிறைய முயற்சி எடுத்தாலும் சில நாள்களில் நமக்கு ஏற்படும் சலிப்பு காரணமாக முயற்சியை கைவிட்டுவிடுகிறோம்.நமக்கு பிடித்த உணவுகளை தியாகம் செய்ய நம் மனம் ஒத்துக்கொள்வதில்லை.எனவே நமக்கு பிடித்த உணவுகளை அளவோடு சாப்பிட்டு நாம் உண்ணும் உணவினுடைய கலோரி அளவுகள் 1200 க்கு மிகாமல் பார்த்துக்கொண்டால் நாம் நினைத்த இலக்கை அடையலாம்.இதில் நான் தரும் குறிப்புகள் பெரும்பாலான சகோதரிகளுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் இதை பதிவிடுகிறேன்.
1.காலையில் எழுந்ததும் வெந்நீருடன் அரை மூடி எலுமிச்சை சாறு அல்லது ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு தேக்கரண்டி கலந்து குடியுங்கள்.இதில் பெரிதாக எந்த கலோரியும் கிடையாது.
2. பின்னர் ஒரு சிறிய குவளை தேநீர் அதிக சர்க்கரை இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம்.இது 40 கலோரிகள் அளவிலேயே இருக்கும்.
3.காலை சிற்றுண்டியாக நான்கு இட்லி அல்லது இரண்டு தோசை எடுக்கலாம்.இது சட்னியுடன் சேர்த்து 200-220 கலோரிகள் ஆகும்.
4.பதினோறு மணிக்கு ஒரு டீ அல்லது ஒரு கப் பழச்சாறு எடுத்துக்கொண்டால் 80 கலோரிகள் வரை வரும்.
5.மதிய உணவுக்கு ஒரு கப் அரிசி சாதமும் ,ஒரு கப் காய்கறி பொரியலும் சாம்பாருடன் எடுத்துக்கொள்ளலாம்.இதன் அளவு 350 கலோரிகள்.
6.மாலை சிற்றுண்டியாக சுண்டல் அல்லது வேகவைத்த வேர்க்கடலை அளவோடு எடுக்கலாம் . இத்துடன் சர்க்கரை இல்லாத தேநீர் 120 கலோரிகள் வரும் .
7.இரவு உணவுக்கு இரண்டு சப்பாத்தியை தயிர் பச்சடி அல்லது காய்கறி கலவையுடன் எடுத்துக்கொள்ளலாம்.இது 300 கலோரிகள்.
8.படுக்கைக்கு முன் ஒரு கப் பால் எடுக்கலாம்.இது 75 கலோரிகள்.
போதிய நடைப்பயிற்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவுமுறை என்று நீங்கள் இந்த வட்டத்திற்குள் செல்லும்போது ஒரு நாளைக்கு தோராயமாக 1200 கலோரிகள் என்ற எல்லைக்குள் நீங்கள் வரமுடியும்.இந்த வாழ்க்கை முறை உங்கள் எடையையும் கட்டுக்குள் வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது தவிர வேறு எதுவும் சாப்பிட நீங்கள் ஆசைப்பட்டால் மற்ற வகைகளை குறைத்து ஒரு நாளுக்கு 1200 கலோரிகள் மிகாமல் பார்த்துக்கொண்டாலே போதும்.உங்கள் மன உறுதி உங்கள் கைகளில் மட்டுமே.

No comments:
Post a Comment