இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 27, 2017

HAIR FALL SOLUTION IN TAMIL

தலைமுடி பிரச்சனை என்பது இன்று அனைவருக்கும் தலையாய பிரச்சனையாக உள்ளது.தலைமுடி முளைக்கிறதோ ..இல்லையோ இதை கொண்டு லாபம் பெற பல இடங்களில் கிளினிக் -களும் பியுட்டி பார்லர் -களும் முளைக்க ஆரம்பித்துவிட்டன.ஆனாலும் சிகிச்சையின் பலன்  என்னவோ ஸீரோ தான்.முதலில் அனைவரும் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.நம்மை சுற்றி கவனித்து பார்த்தால் தெரியும்.அடர்த்தியான கூந்தல் உள்ளவர்கள்   பெரும்பாலும்  பாரம்பரியமாக இந்த பண்பை பெற்றவர்களாக இருப்பார்கள்.அவர்களுடைய அம்மா,பாட்டி என்று அனைவருக்கும் வளமையான கூந்தல் இருந்திருக்கும்.

            ஆனாலும்  முறையான பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் மூலம் நாமும் அதுபோன்ற கூந்தலை பெறமுடியும்.தொடர்ந்து ஆறு மாதங்கள் எந்தவித சலிப்பும் இல்லாமல் முயற்சித்து பாருங்கள்.ஏனெனில் இது மேஜிக் போன்று கண்மூடி திறப்பதற்குள் நடந்துவிடும் விஷயம் அல்ல.
 1.முதலாவதாக நாம் தலைமுடியை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.தரமான சீயக்காய் அல்லது ஷாம்பூ கொண்டு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தலையை அலசவேண்டும்.
 2.அடுத்ததாக ஊட்டச்சத்துமிக்க உணவு.இதில் காய்கறி,கீரைகள்,பழங்கள்,பேரிச்சை,முளைகட்டிய பயறு வகைகள் அனைத்தும் அடங்கும்.தினமும் இவற்றில் முடிந்தவற்றை உணவில் சேர்த்துவர பழகுங்கள்.

 3.அடுத்த முக்கிய விஷயம் மனம் சம்மந்தப்பட்டது.உங்கள் மனம் கவலைகள்,சஞ்சலங்களின்றி அமைதியாக வைத்துக்கொள்ள பழகுங்கள். உங்கள் மனதுக்கும் முடி உதிர்தலுக்கும் நிறைய சம்மந்தம் உண்டு.
இந்த மூன்று முறைகளை நாம் சிரமம் பார்க்காமல் பின்பற்றி வந்தாலே போதும்.சில மாதங்களில் உங்கள் முடி வளர்ச்சி தூண்டப்பட்டு உங்கள் முடி உதிர்தல் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.
         அதன் பின்னர் ஆயில் மசாஜ் மற்றும் உங்களுக்கு கிடைக்கும் மூலிகை கொண்டு ஹேர் பேக் போடுதல் போன்றவற்றின் மூலம் மீண்டும் பிரச்சனைகள் வராமல் தடுத்துக்கொள்ளவேண்டும்,

No comments:

Post a Comment