இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 13, 2017

HOW TO MAKE STILL VIDEO WITH FEW SIMPLE STEPS- IN TAMIL

இன்றைய காலகட்டத்தில்  நம்முடைய எல்லா சந்தேகங்களுக்கும் விடை தேடக்கூடிய தளங்களில் கூகுளுக்கு அடுத்தபடியாக  யூ டியூப் அமைந்துள்ளது.சமையல் முதல் சாக்ரடீஸ் வரை அத்தனை சந்தேகங்களுக்கும் இந்த தளம் வழிகாட்டுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த யூ டியூப் தளத்தில் நாமும் ஏதாவது  ஸ்டில் வீடியோ போடவேண்டும் என்று பலரும் ஆசைப்படுவர்.ஆனால் ஸ்டில் வீடியோ தயாரிப்பது எப்படி என்று பலருக்கும் தெரியாது.நம்மிடம் ஏற்கனவே வீடியோ இருந்தால் அதை நம்முடைய ஜிமெயில் கணக்கு மூலம் நாம் பதிவேற்றிவிடலாம்.ஆனால் போட்டோ ஸ்டில்களின் மூலம் வீடியோ தயாரிப்பது என்பது ஆரம்பத்தில் கொஞ்சம் சிக்கலான வேலையாகத்தான் தெரியும்.எனவேதான் இந்த பதிவில் நம்முடைய   மொபைல் போன் மூலமே எளிமையான முறையில் ஸ்டில்  வீடியோ தயாரிப்பது எப்படி என்று இங்கு பதிவிடுகிறேன் .

  •  முதலில் நீங்கள் சொல்லவிரும்பும் விஷயத்தை உங்கள் மொபைல் போனில் உள்ள வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் பேசி  பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • பின்னர் அந்த குரல் பதிவுக்கு தேவையான புகைப்படங்களை உங்கள் போனில் சேமித்துக்கொள்ளுங்கள் .உங்களுக்கு தேவையான புகைப்படங்கள் கூகுள்    இமேஜ் -ல் கிடைக்கும்.
  • பின்னர் கூகுள் play ஸ்டோர் க்கு சென்று   video show என்ற app ஐ டவுன்லோட் பண்ணுங்கள்.
  • பின்னர் அந்த ஆப் -ஐ ஓபன் பண்ணினால் video edit என்று இருக்கும்.அதை கிளிக் பண்ணுங்கள்.
  • அங்கு உங்களுக்கு தேவையான புகைப்படங்களை தேர்ந்தெடுத்து start - ஐ சொடுக்குங்கள்.
                                             

  • அங்கு duration -ஐ கிளிக் பண்ணி நீங்கள் எவ்வளவு நேரம் வாய்ஸ் ரெகார்ட் பண்ணினீர்களோ (see point number -1)அவ்வளவு நேரத்தை செட் பண்ணுங்கள்.இது உங்கள் வாய்ஸ்- ஐயும் வீடியவையும் மிக்ஸ் பண்ணும்போது ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை களையும். 
  •  பின்னர் music என்பதை கிளிக் பண்ணி நீங்கள் முன்னமே பேசி வைத்த வாய்ஸ்-ஐ சேருங்கள்.
இப்போது உங்கள் வீடியோ தயார்.இனி உங்கள் வீடியோவை யூ டியூபில் போடலாம்.வாட்ஸ் ஆப் -பில் அனுப்பலாம்.முகநூலில் பதிவிடலாம்.

No comments:

Post a Comment