இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 9, 2017

6 PROVEN HEALTH BENEFITS OF APPLE CIDER VINEGAR -IN TAMIL


நமது வட்டாரத்தை பொறுத்தவரை இதன் பயன்கள் பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது.எனவேதான் எல்லோரும் பயன்படும் வகையில் இதை பதிவிடுகிறேன்.இதை அளவோடு பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
                Image result for apple cider vinegar
1.தலையில் பொடுகு தொல்லை அதிகமுள்ளவர்கள் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீர் இரண்டையும் சம அளவு கலந்து தலையில் தேய்த்து ஒருமணி நேரம் கழிந்ததும் குளிக்கவும்.வாரத்திற்கு இரண்டு முறைஇவ்வாறு செய்ய பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
2.உலர்ந்த தலைமுடி உள்ளவர்கள் தலைக்கு ஷாம்பூ போட்ட குளித்தபின் இரண்டு மூடி ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு குவளை தண்ணீரில் கலந்து கடைசியாக தலையில் ஊற்றி அலசிவிட்டஉ வரவும்.இவ்வாறு செய்வதால் உங்கள் முடி மிகவும் மிருதுவாக மாறும்.
           Image result for apple cider vinegar
3.தினமும் காலாயில் எழுந்ததும் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர், ஒரு தேக்கரண்டி தேன் இரண்டையும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடித்துவர உங்கள் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.
4.தோலில் அறிப்பு, ஒவ்வாமை ஏற்பட்டால் சிறிதளவு  ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில் நனைத்து அந்த இடத்தில் தடவிவர உங்கள் பிரச்சனைகள் மாறும்.
                       Image result for apple cider vinegar

5.ஆப்பிள் சீடர் வினிகரை நீருடன் கலந்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் மறைந்து பற்கள் வெண்மை பெறும்.
6. இஞ்சி சாறு,பூண்டு சாறு, எலுமிச்சை சாறு, தேன்,ஆப்பிள் சீடர் வினிகர் ஐந்தையும் சமஅளவு கலந்து இளம் சூட்டில் கொதிக்கவைத்து லேகிய பதத்தில் எடுத்துக்கொண்டு தினமும் காலை,மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவர இரத்தக்குழாயில் படிந்துள்ள எப்படிப்பட்ட கொழுப்பும் கரையும்.

No comments:

Post a Comment