இட்லி என்பது தென்னிந்தியாவில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு.ஆனால் ஒருசிலருக்கு இட்லி பதம் சரியாக வருவதில்லை என்ற ஏக்கம் இருக்கும்.அந்த ஒருசிலருக்காக மட்டும் இந்த பதிவு.
தேவையான பொருட்கள் ;
புழுங்கல் அரிசி -2 கப்
உளுத்தம் பருப்பு -1/4 கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
சாதம் - 1/4 கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை
அரிசியை தனியாகவும் ,உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை தனியாகவும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.பின்னர் கிரைண்டரில் உளுத்தம்பருப்பை போட்டு நன்கு அரைக்கவும்.மாவை கையில் எடுத்தால் பந்து போல் உருண்டு வரும்.நன்கு அரைத்ததும் ஒரு பாத்திரத்துக்கு மாவை மாற்றிவிட்டு அடுத்து அரிசி மற்றும் சாதத்தை கிரைண்டரில் போடவும்.ரவை பதத்திற்கு வந்ததும் மாவை பாத்திரத்துக்கு மாற்றவும்.இப்போது அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.இதை எட்டு மணிநேரம் அப்படியே வைக்கவும்.
எட்டு மணிநேரம் கழித்து பார்த்தால் மாவு நன்கு புளித்திருக்கும்.இப்போது மாவை நன்கு கலக்காமல் இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஊற்றவும்.ஊற்றிய பிறகும் மாவை இட்லிதட்டில் அழுத்தக்கூடாது.பத்து நிமிடம் கழிந்ததும் அடுப்பை அணைக்கவும்.சற்று ஆறியதும் எடுத்தால் இட்லி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.இதில் சாதத்துக்கு பதிலாக ஜவ்வரிசியை 50கிராம் ஊறவைத்து சேர்த்து அரைத்தால் அது இன்னும் வித்யாசமான சுவையை கொடுக்கும்.
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.

இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று கூறப்படுகிறது..அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம் ,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உள்ளன.
அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற
அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்
செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.
இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.
லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

No comments:
Post a Comment