இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 31, 2017

சுவையோ சுவை... இஞ்சி முரப்பா செய்வது எப்படி..

சில வருடங்களுக்கு முன்பு நம் பயணத்தின் போது பேருந்து நிலையங்களில் இஞ்சி முரப்பாவை கூவி..கூவி விற்பவர்களை பார்த்திருப்போம்.காலப்போக்கில் இவை கொஞ்சம் மறைந்தாலும் இன்றும் இதை நேசிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.வாந்தி ,வயிற்று மந்தம் போன்றவற்றிற்கு பலனளிக்கக்கூடிய இதன் செய்முறைகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள்;
  இஞ்சி அல்லது சுக்கு போடி         -100 கிராம்
வெல்லம்                                            -100 கிராம்
நெய்                                                    -இரண்டு தேக்கரண்டி
செய்முறை
இஞ்சியை தோல் சீவி தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை ஒரு குவளை தண்ணீரோடு சேர்த்து கம்பி பதம் வரும்வரை கொதிக்க விடவும்.

கம்பி பதம் வந்ததும் அதோடு அரைத்து வைத்த இஞ்சி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.நன்கு சுருள வந்ததும் நெய்யை சேர்த்து கிளறிவிடவும்.பின்னர்  நெய் தடவிய  தட்டில் கொட்டி ஆறியதும் வில்லைகளாக வெட்டி பத்திரப்படுத்தவும்.தேவையானபோது எடுத்து பயன்படுத்தலாம்.பிள்ளைகளும் விரும்பி சுவைப்பார்கள்.



No comments:

Post a Comment