- இன்று பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன் எனப்படும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் வாங்கிய சில மாதங்களிலேயே அத்தகைய போன்களின் செயல்படும் வேகம் குறைந்துவிடும்.அதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில முக்கிய காரணங்களை இங்கு பார்ப்போம்.
- இப்போது எல்லா மொபைல்களிலும் கேமரா வசதி இருப்பதால் நாம் பார்க்கும் எல்லா விஷயங்களையும் போட்டோ அல்லது வீடியோ எடுக்கும் பழக்கம் எல்லோருக்கும் உள்ளது.இதனால் நம்முடைய மொபைல்களில் கேளரி நிறைந்து காணப்படுகிறது.இதுவே நம் மொபைகளின் செயல்வேகம் குறைய முக்கிய காரணமாக உள்ளது.எனவே உங்கள் போட்டோ மற்றும் விடியோவை SD கார்டு அல்லது உங்கள் கம்ப்யூட்டர் போல்டர்களில் சேமித்து வைத்துக்கொண்டு போனில் உள்ள போட்டோக்களை அழித்துவிடுங்கள்.
- உங்கள் மொபைலில் தரமான மெமரி கார்டை பயன்படுத்துங்கள்.அதை கண்டுபிடிக்க எளிய வழி நீங்கள் வாங்கும் SD கார்டில் ஒரு வட்டமிட்டு அந்த வட்டத்திற்குள் 10 என்று எழுதியிருக்கும்.
- ஆண்ட்ராய்டு மொபைலை வாங்கிய உடனேயே எல்லோரும் தமக்கு விருப்பப்பட்ட APP -ஐ டவுன்லோட் பண்ண தொடங்கிவிடுவர் .பின்னர் அது பயனில்லை என்று தெரிந்து UNINSTALL பண்ணுவர் அவ்வாறு UNINSTALL பண்ணினாலும் சில பைல்கள் நமது மொபைல்களிலேயே தங்கிவிடும்.இதனாலும் நமது மொபைல்கள் தன் வேகத்தை இழக்கும்.எனவே ஒரு APP -ஐ டவுன்லோட் பண்ணும்முன் யோசித்து பண்ணுங்கள்.
- உங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத ரன்னிங் app -ஐ செட்டிங்ஸ் க்கு சென்று நிறுத்துங்கள் .இதுவும் உங்கள் மொபைலின் வேகத்தை அதிகப்படுத்த உதவும்.
- உங்கள் மொபைலில் live வால்பேப்பர் இருந்தால் அதை மாற்றுங்கள்.
- இவை அனைத்திற்கும் உங்கள் மொபைல் கட்டுப்படாமல் குறைந்த வேகத்தோடே செயல்பட்டால் செட்டிங்ஸ் சென்று பேக்டரி டேட்டா ரீசெட் கொடுங்கள்.உங்கள் மொபைல் நிச்சயம் வேகமாக செயல்பட தொடங்கும்.


No comments:
Post a Comment