இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 16, 2017

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கைக்கீரை.

உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் எல்லா நேரத்திலும்,எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு கீரை உண்டென்றால் அது முருங்கைக்கீரைதான்.இதில் A,B,C உயிர்சத்துக்கள் நிறைந்துள்ளன.புரதம், இரும்பு, சுண்ணாம்புச்சத்துக்கள் அதிகமாகவே உள்ளன.

பிரசவித்த பெண்கள் இந்த கீரையை தொடர்ந்து உண்டுவர பால் பெருகும்.
முருங்கைக்கீரை சாறுடன் தேன் கலந்து இரவு படுப்பதற்கு முன் சாப்பிட்டுவர வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும்.



இது கண் நோய்களை குணமாக்கும்.இரத்தத்தை சுத்தப்படுத்தும்.இந்த கீரையை நாற்பது நாட்களுக்கு நெய்விட்டு வதக்கி பொரியல் செய்து சாப்பிட்டுவர நீரிழிவு நோய் குணமாகும்.இது இரத்தத்தில்  சேரும் கொழுப்பு சக்தியை குறைக்க வல்லது.இவ்வாறு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கைக்கீரையை தினமும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

No comments:

Post a Comment