இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 10, 2017

மீன் எண்ணெய் மாத்திரை - ஒரு பார்வை

பெரிய வகை மீன்களை நாம் உணவுக்காக எடுத்துக்கொள்வதில்லை.ஆனால் பெரிய வகை மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரைகளை அதன் பலவித பலன்களுக்காக தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.இது வைட்டமின் மாத்திரைகளாக எல்லா மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்.

மீன் எண்ணெய் மாத்திரைகள் உடலில் கெட்ட கொழுப்புகள் தேங்காமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது இதிலுள்ள EPA எனும் நோய் எதிர்ப்பு பொருள் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.மூட்டுவலிகளை சரி செய்ய உதவுகிறது.

 பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் இடுப்பு வலிகளை சரி செய்கிறது.பற்று நோயை எதிர்த்து போராடும் குணம் கொண்டது.கர்ப்பினிகள் இதை சாப்பிட்டுவர வயிற்றிலுள்ள குழந்தைக்கு கண்பார்வை,மூளைவளர்ச்சி பலப்படும்.

No comments:

Post a Comment