- அடுப்பில் எண்ணெய் கரை அதிகம் இருந்தால் ஒரு தேக்கரண்டி ஷாம்பூ போட்டு சுத்தம் செய்யும்போது எத்தகைய எண்ணெய் பிசுக்கும் மறைந்துவிடும்.
- துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்கும் போது சலவைத்தூளுடன் சிறிது ஷாம்பூ கலந்து துவைத்தால் துணிகள் மிகவும் வாசனையாக இருக்கும்.
- பட்டு துணிகளை துவைக்க ஷாம்பூ மட்டுமே போதுமானது.
- இரவில் படுக்கும்முன் கன்னங்களில் பால் ஏடு அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி தடவி படுத்தால் கன்னங்கள் மிகவும் செழிப்பாக இருக்கும்
- இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் உலர்ந்த திராட்சை அல்லது பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர குறைபாடு மறையும்.
- இரவே வெந்தயத்தை ஊறவைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர விரைவில் இரும்புச்சத்து குறைபாடு மறையும்.உடல் எடையும் குறையும்.பாத வலிகளும் பறந்தோடும்.
- இப்போது அழகான ஸ்டோரேஜ் கண்டைனர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.அவற்றை வாங்கி பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உள்ளாடைகள்,கைகுட்டைகள்,சாக்ஸ் என்று போட்டு வைத்தால் பார்க்கவும் அழகாக இருக்கும்.பிள்ளைகள் பள்ளி கிளம்பும் அவசரத்தில் தேடும் பிரச்னைகளும் இருக்காது.
- சாம்பாரோ ,ரசமோ கொதிக்கும்போது அதிக வாசனை வந்தால் உப்பு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
- திடீர் சிற்றுண்டி தயார் பண்ண இட்லி மாவில் வெல்லக்கரைசல்,தேங்காய் துருவல் ,மற்றும் ஏலக்காய் சேர்த்து பணியாரமாக செய்யலாம்.
- தேங்காயை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் நாளடைவில் மிகவும் கடினமாகிவிடும்.இதை தவிர்க்க தேங்காயை துருவி ஒரு பாக்ஸில் போட்டு வைக்கலாம்.
- வீட்டில் குழாய் தண்ணீர் கலங்கலாக வந்தால் சிறிது படிகாரத்தை தண்ணீரில் கலக்கினால் தண்ணீர் மழை நீரைப்போல் மாறும்.படிகார கட்டியை தண்ணீரில் விட்டு நாலைந்து சுற்று பிசைந்தாற்போல் சுற்றினாலே போதும்.நிறைய போடவேண்டாம்.இதை குடிநீராகவும் பயன்படுத்தலாம்.
- வீட்டில் சிமெண்ட் தரை உள்ளவர்கள் மார்க்கெட்டில் அழகழகாக கிடைக்கும் புளோர் ஷீட் -ஐ தரைகளில் ஒட்டிவிட்டால் டைல்ஸ் போட்டது போல் அழகாக இருக்கும்.இது பத்து வருடங்களுக்கு மேல் தாங்கும்.குழந்தைகள் விளையாட,படிக்க சுத்தமாக இருக்கும்.
- கற்றாழை செடியை வீட்டிலேயே தொட்டியில் வளர்த்து வந்தால் சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.அது காற்றையும் சுத்தப்படுத்தும்.
- காலில் பித்த வெடிப்பு அதிகம் இருந்தால் கட் ஷூ பயன்படுத்துங்கள்.பாதம் வியர்க்கும்போது வெடிப்புகள் மறையும்.
- குளியலறையில் உள்ள வாளிகள் உப்பு மற்றும் அழுக்கு படிந்து காணப்பட்டால் ஆசிட் கொண்டு கழுவுங்கள்.பளிச் என்று ஆகிவிடும்.
- வாஷிங் மெஷின் உள்ளே அழுக்கு படிந்திருந்தாலும் அரை பாட்டில் ஆசிட் ஐ மெசினில் ஊற்றி ஊறவைத்து பின் வெறும் மெஷின் ஐ தண்ணீர் ஊற்றி ஓடவிட்டு கழுவுங்கள்.
- தலை நரைக்க ஆரம்பம் ஆன உடனேயே தலை சாயம் பயன்படுத்த துவங்காதீர்கள்.மருதாணி இலையை அரைத்து தலைக்கு பூசலாம்.அல்லது மெஹந்தி பேக் என்று கடைகளில் கிடைக்கும். பயன்படுத்தலாம்.45 வயது வரை இப்படியே சமாளிக்கலாம்.
- தையல் மெஷின் பக்கத்தில் பீரோ அல்லது எதாவது உலோக பொருள் இருந்தால் அதில் ஒரு காந்தத்தை ஒட்டி வைத்து அதில் ஊசி ,பின் போன்ற பொருள்களை ஒட்டி வைக்கலாம்.அவசரத்துக்கு உதவும்.
- சட்னிக்கு தேங்காய் இல்லாவிட்டால் பரவாயில்லை.பொட்டுக்கடலை,வேர்க்கடலை,மிளகாய்,பூண்டு பல்,உப்பு போட்டு அரைத்து பாருங்கள்.வேறு சட்னியை தேடமாடீர்கள்.தேவைப்பட்டால் கொத்துமல்லியும் சேர்த்துக்கொள்ளலாம்.
- கைகளால் துடைக்க முடியாத பகுதிகளை துடைக்க பெயிண்ட் பிரஷ் -ஐ பயன்படுத்தலாம்.உதாரணமாக மிக்ஸி,ஜன்னல்.
Jan 25, 2017
20/20 HOME TIPS IN TAMIL
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment