இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 12, 2017

சர்க்கரை வியாதியை விரட்டுங்க.. நிரந்தரமாக..

இன்று அதிகப்படியான மக்கள் நீரிழிவு நோய் காரணமாக பலவிதமான பின்விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.இதை தவிர்க்க நாம் இரத்தத்தலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.சிலர் மருந்து மாத்திரை என்று தவறாமல் எடுத்துவந்தாலும் திடீரென ஒருநாள் இரத்தப்பரிசோதனை செய்யும்போது இரத்தத்தின்அளவு உச்சத்தில் இருக்கும்.

இதனால் மனதில் ஒரு சோர்வு வந்து உட்கார்ந்துகொள்ளும். இதனை தவிர்க்க இயற்கை மருத்துவமே சிறந்த வழி.இயற்கை மருத்துவத்தால் மட்டுமே நாம் நிரந்தர பலனை பெறமுடியும்.அந்த வகையில் நான் உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்த விரும்பிய அற்புதமான ஒரு பானம் கரேலா ஜாமூன்( karela jamun) . கரேலா என்பதற்கு பாகற்காய் என்று அர்த்தம்.ஜாமூன் என்பது நாவல்பழம்.அதாவது பாகற்காய் மற்றும் நாவல்பழம் இரண்டிலிருந்தும் எடுக்கப்பட்ட அற்புத பானம் தான் இந்த கரேலா ஜாமூன்.

முதலில் உங்கள் இரத்தத்தலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.இது வித்யாசத்தை அறிந்துகொள்ள உதவும்.
பின்னர் தினமும் காலை ,மாலை இரு வேளையும் உணவுக்கு முன்னதாக ஒரு குவளை நீருடன் 30மிலி கரேலா ஜாமூன் கலந்து குடியுங்கள்.உணவு கட்டுப்பாட்டுடன் இதை நீங்கள் தொடர்ந்து உட்கொண்டு வாருங்கள்.15நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை இரத்த பரிசோதனை செய்து முந்தைய பரிசோதனை முடிவோடு ஒப்பிட்டு பாருங்கள்.நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.

தொடர்ந்து இதை நீங்கள் உட்கொண்டு வரும்போது ஒருசில மாதங்களில் நீங்கள் உங்கள் நீரிழிவு நோய் மருந்துகளை கூட விட்டுவிடலாம்.இது என் உறவுகளின் அனுபவத்தில் கிடைத்த உண்மை.எனவே எல்லோரும் பயன்படுத்தி பயன்பெறுங்கள். கரேலா ஜாமூன் எல்லா சித்த மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்.

No comments:

Post a Comment