இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Dec 6, 2016

பார்லி அரிசியும் அதன் பயன்களும்

பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி
பார்லி அரிசியில் பல வகையான சத்துப் பொருள்களும், சர்க்கரையும் அடங்கியுள்ளது.

                                          barley rice க்கான பட முடிவு


ஊட்டச்சத்து மிகுந்த பார்லி உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது.
பார்லி அரிசியின் மாவுப் பகுதியில் நீரில் கரையக் கூடியதும், பிசுபிசுப்புத் தன்மை உடையதுமான "டெக்ஸ்ட்ரின்" என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன.
கஞ்சி தயார் செய்ய பார்லி அரிசியைக் கொதிக்க வைக்கும் போது இந்தச் சத்துக்கள் கரைந்து ஊட்டச்சத்தாக மாறிவிடுகின்றன. பார்லி அரிசி ஒரு அவுன்ஸ் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சுங்கள்.
தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன் அந்தக் கஞ்சியுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட்டால் நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனத்தைத் தரும். உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சியையும் குணமாக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலைப்(எல்.டி.எல்) போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.
பார்லியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பார்லியில் உள்ள வைட்டமின் பி, நரம்புகளைப் பலப்படுத்தும். தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக்கஞ்சி அருந்தினால் கொலஸ்ட்ரால் கணிசமாகக் குறையும்.
இதய நோயாளிகளுக்கு பார்லி அற்பு தமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது.
பார்லியில் பீட்டா க்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டா க்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும். உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்ப
டுகிறது.
நம் உடலிலுள்ள நிணநீர் சுரப்பிகள்தான், உடலின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்குக் காரணம். அது அடைக்கப்பட்டால் உடலில் தண்ணீர் தேங்கிவிடும். பெரும்பாலும் காய்ச்சல் நேரத்தில் இந்த நிணநீர் சுரப்பிகள் அடைபடுவதால், தேங்கிய நீர்ச்சத்தை வெளியேற்ற பார்லி கொடுக்கப்படுகிறது.
கோதுமையிலும், ஓட்ஸிலும் நார்ச்சத்து இருந்த போதிலும் தயாரிக்கும் பொழுது அவைகளிடத்திலிருக்கும் நார்ச்சத்து ஓரளவு குறைந்து போகின்றன. ஆனால் பார்லியில் பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை.
இதுதான் பார்லியின் சிறப்புக் காரணம். இது உடம்பில் இருக்கிற சர்க்கரையின் அளவைக் குறைக்கும். பார்லியில் இருக்கும் நார்ச்சத்து சக்திமிக்கது. 

                                                barley soup க்கான பட முடிவு

பார்லி சூப்
என்னென்ன தேவை?
பார்லி - 1 டேபிள்ஸ்பூன், பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் - கால் கிலோ,
பூண்டு (விரும்பினால்) - 5 பல்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,
கொழுப்பு நீக்கிய பால் - சிறிது.
எப்படிச் செய்வது?
பார்லியை 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரை வேக்காடு வெந்ததும், நீளநீளமாக நறுக்கிய காய்கறிகள், பூண்டு சேர்க்கவும். காய்கறிகள் ரொம்பவும் குழைவாக வேகாமல் பார்த்துக் கொள்ளவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, பால் விட்டுப் பரிமாறவும்.
சிறுநீரக் தொந்தரவுகளிலிருந்து காக்க ஒரு பார்லி ஜூஸ்
இது ஒரு டயட் ஜூஸ். இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு பயன்தரும் ஜூஸ். வியர்வையை ஏற்படுத்தி உற்சாகமாக வைத்திருக்கும்.
பார்லியை தண்ணீரில் நன்றாக வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே சூடாக இருக்கும் போதே சர்க்கரையை பார்லியில் சேர்த்துவிட வேண்டும். பிறகு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பைச் சேர்ப்பதோடு, அரைத்த மாங்காய் இஞ்சியையும் கலந்து விட வேண்டும்.
இந்த ஆரோக்கிய ஜூஸை ஒரு பாட்டிலில் பதப்படுத்தி வைத்துக் கொண்டால் போதும். பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிஜ்ஜில் கூட வைக்கத் தேவையில்லை.
பார்லியில் சிறுநீரக பிரச்னைகள் வராமல் பாதுகாத்துக்கின்ற வல்லமை இருப்பதால், எலுமிச்சமிச்சை பழத்திலுள்ள சி வைட்டமினும் சேரும்போது டென்ஷனை விரட்டி மனசை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவுகிறது. எலுமிச்சை பழம் டென்சனை மாற்ற மிகவும் துணைபுரிவதாக தற்போதைய மருத்துவ ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
கெட்டநீரை வெளியேற்றி, ஊளைச்சதையை கரைத்து உடலை சிக்கென்று கட்டுக்கோப்பாக வைக்க மற்றொரு பார்லி கஞ்சி கொள்ளுடன் சேர்த்து செய்யலாம்.
வறுத்துப் பொடித்த கொள்ளு,
வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).
சீரகத்தூள் - 1 சிட்டிகை,
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
கொள்ளுமாவின் அளவில் 1/2 பங்கு பார்லி மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி கஞ்சி காய்ச்சவும்.
அரபியர்கள் பார்லிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து சக்திவாய்ந்த மருத்துவ பொருளாக உபயோகித்து வந்துள்ளார்கள்.

No comments:

Post a Comment